14.12.13

எஸ்.எஸ்.ஏ.,வை, ஆர்.எம்.எஸ்.ஏ.,வுடன் இணைக்கும் யோசனை?

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்..,) சார்பில்,385 வட்டாரங்கள் செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும்,முதுகலை அல்லது பட்டதாரி ஆசிரியர்தகுதி பெற்றவர்களை மேற்பார்வையாளர்களாகநியமித்துள்ளது. இதில்,

ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழக அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்சதகுதி மதிப்பெண்ணுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசின்சார்பில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் மொழி ஆசிரியர்களை தற்காலிகமாக சேர்க்க கோர்ட் உத்தரவு.

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பட்டியலில்,மொழி ஆசிரிர்களை தற்காலிகமாக சேர்க்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

8ம் வகுப்பு மாணவர்கள் படிப்புதவி பெற பிப்ரவரியில் தேர்வு...

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு பிப்ரவரி 22ம் தேதி நடக்க உள்ளது.

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்த உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பட்டியல் விவரம்



1.SUTHATHIRAM K         -  THENI
2.THAMOTHARAN R       -   VIRUDHANAGAR
3.NAGARAJAN R             -   VIRUDHANAGAR
4.JAYALATHA E               -  TIRUNELVELI
5.AROCKIASAMY A         -  RAMANATHAPURAM
6.JEYARAJU S                 -   RAMANATHAPURAM

7.RAJAMAREES S          -  DINDUGAL

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு(உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும்) அரசு பள்ளிக்கு மாறுதல் ஆணை மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2013 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலிலிருந்து நீதிமன்ற தீர்ப்பின் படி 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் ஆணை வழங்கப்படவுள்ளது

13.12.13

வட்டார மேற்பார்வையாளர் (உயர்நிலைப் பள்ளி த.ஆ பதவி) பணியிலிருந்து உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறும்

வட்டார மேற்பார்வையாளர் (உயர்நிலைப் பள்ளி . பதவி) பணியிலிருந்து உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நாளை 14.12.2013 காலை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் முதுகலை ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு மூலம் மேற்பார்வையாளர்களாக சென்றவர்களுக்கு பணி மாறுதல் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இரட்டைப் பட்ட வழக்கு ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று பிற்பகல் 1.00மணியளவில்  முதன்மை அமர்வில் தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தரப்பு வழக்கறிஞ்சர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இதையடுத்து வருகிற ஜனவரி 2ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நடுநிலை பள்ளி ஆசிரியர்களையும் தேர்வு பணியில் சேர்க்க திட்டம்

பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி, முதுகலை ஆசிரியர் மட்டும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர் சேர்க்கப்படுவதில்லை. இந்த நிலையை மாற்றி, இரு துறைகளிலும் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கும்,  பொது தேர்வுப் பணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது

 இந்நிலையில், வரும் பொது தேர்வில், நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரையும், தேர்வுப் பணியில் ஈடுபடுத்த, தேர்வுத் துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

12.12.13

விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சி வகுப்புகள், ஈடுசெய்யும் விடுப்பு எடுக்க அனுமதிக்க மறுக்கும் கல்வி அலுவலர்கள் – இயக்குநர் தலையிட ஆசிரியர்கள் கோரிக்கை

கடந்த ஆண்டு வரை விடுமுறை நாளான சனிக்கிழமைகளில்  நடைபெற்ற (SSA) குறுவளமைய பயிற்சி வகுப்புகள் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு வேலை நாட்களாக கருதப்பட்டன. (அதாவது 210 பள்ளி வேலை நாட்கள் 10 குறுவளமைய பயிற்சி வகுப்புகள் ஆக மொத்தம் 220 வேலை நாட்கள்.).

பறிபோகும் எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்கள்: தமிழக அரசு பரிசீலனை

மத்திய அரசின் நிதிக் குறைப்பு நடவடிக்கையால், தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்..,) வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் 2002ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் நியமன தேர்வு முடிவை வெளியிடலாம்

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது. மதுரை, புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில், "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் நியமனத் தேர்வில், "பி" வகை வினாத்தாளில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன.