26.4.14

மே 5ல் பிளஸ் 1 ரிசல்ட்

மே 5ம் தேதி மாவட்டம் முழுவதும் 11ம் வகுப்பிற்கு ரிசல்ட் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய அறிவிப்புகள் வெளியிட வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தடை நீடிக்கும்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல்நடைபெற்று முடிந்துள்ளதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளில்தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வரம்பு மீறிய வருவாய் துறை; வறுத்தெடுத்த ஆசிரியர்கள்.

சிவகங்கையில் தேர்தல் பணியில் கிட்டதட்ட 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதில் 20 சதவீத ஆசிரியர்கள் சமுதாய கூடத்தில் அவசர உதவிக்காகவும், மாற்று பணிக்காகவும் தடுத்து வைக்கப்பட்டனர். 

"ஸ்மார்ட் போனில்' பிளஸ் 2 தேர்வு முடிவு பார்க்கலாம் : இணையதள முகவரிகள் வெளியீடு

வரும், மே 9ல் வெளியாகும், பிளஸ் 2 தேர்வு முடிவை, நான்கு இணையதளங்களில், தேர்வுத்துறை வெளியிடுகிறது; முகவரிகளை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று வெளியிட்டார்.

விடைத்தாள் திருத்தும் பணியில் 'எஸ்கேப்' : தயாராகிறது ஆசிரியர்கள் பட்டியல்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணியில், பங்கேற்காத ஆசிரியர்கள் குறித்த விவரப் பட்டியல், மாவட்டம் வாரியாக தாயாரகிறது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் மே 9 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம்

"பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, மே 9 முதல், 14 வரை விண்ணப்பிக்கலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் ஏமாற்றம்:தேர்தல் பயிற்சி பெற்றவர்களுக்கு பணம் இல்லை; பணியிலும் குழப்பம்

தேர்தல் பணிக்காக 3 நாள் பயிற்சிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு கலெக்டர்கள் உரிய பணம் வழங்கவில்லை. தேர்தல் பணிக்கான உத்தரவிலும் குழப்பம் இருந்ததால் பல இடங்களில் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட முடியவில்லை. தமிழகத்தில் நாடாளுமன்ற

திமுக ஆட்சியில் நடந்த பள்ளி ஆசிரியர் இடமாற்றம் குறித்து திடீர் கணக்கெடுப்பு

திமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 23,522 அரசு தொடக்கப் பள்ளிகள், 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள், 2,844 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 2,488 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த அரசு பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான

இடைநிலை ஆசிரியர் பயிற்சி: தேர்வு அட்டவணை வெளியீடு

இடைநிலை ஆசிரியர் பயிற்சிக் கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: 

தொடக்கக் கல்வி பட்டய படிப்பில் 2-ம் ஆண்டு மாணவர்க ளுக்கான தேர்வு ஜூன் 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரையும், முதலாவது

25.4.14

தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியை ரெயிலில் சிக்கி பலி

அரக்கோணம் தர்மராஜா கோவில் அருகே உள்ள பால்காரர் சுப்பிரமணிய தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பூங்கொடி(வயது48).
அரக்கோணம் குமினிபேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தம்பதிக்கு சிவராஜ் என்ற மகன்சசிகலா(22) என்ற மகள் உள்ளனர்.

ஆங்கில வழியில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் பிரசாரம்.

அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி பிரிவுக்கு மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், ஆசிரியர்கள், விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறியும் பணி மும்முரம்.

கரூர் பரமத்தி பஞ்.யூனியனில்,அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம்பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது எப்போது?

உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது இரண்டு ஆண்டுகளாக தடைபட்டுள்ளதால், பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.

மே 9 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

வரும் மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என, பள்ளிகல்வி தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் 9ம் தேதி, காலை 10 மணி அளவில் தேர்வுகள் இயக்கக இணைய தளங்களில் முடிவுகளைபார்க்கலாம். www.tnresults.nic.in என்றமுகவரியிலும், www.dge1.tn.nic.in;www.dge2.tn.nic.inwww.dge3.tn.nic.in ஆகிய இணைய தள முகவரிகளிலும் முடிவுகளை காணலாம்.

பதிவு மூப்பு அடிப்படையில் 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றினார்கள். 

அவர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராடினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுக்குசிறப்பு தேர்வு வைத்து பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களிலும் சிலர் தேர்ச்சி பெறவில்லை.எனவே அவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதைத்தொடர்ந்து கம்ப்யூட்டர்

பருவம்' தவறி கேள்விகள் : பள்ளி குழந்தைகள் தவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில், மூன்றாம் பருவ தமிழ் தேர்வில் முதல், இரண்டாம் பருவ புத்தகங் களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவர்களின் நலன் கருதி புத்தக சுமையை குறைக்கும் வகையில், முப்பருவ கல்வி முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அந்தந்த பருவ தேர்வு முடிந்ததும், அப்பாடங்களை மீண்டும் படிக்க வேண்டியதில்லை.

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கோரி மனு : அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் "நோட்டீஸ்'

அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

22.4.14

பிளஸ்2 படிக்காமல் தொலைதூர கல்வியில் பட்டம் பெற்றவர்கள் அரசு பணிக்கு தகுதியானவர்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி குரூப்-2 தேர்வுக்கும்,அதே ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி குரூப்-1 தேர்வுக்கும் அறிவிப்புகள் வெளியிட்டது. 

தேர்தலின் பொது அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கு ரூ.500 முன்பணம் ...

தேர்தலின்போது, ஓட்டுசாவடியில் தண்ணீர் வசதி, தற்காலிக பந்தல், தடுப்புவேலி, மின்சாரம் இல்லாத பகுதியில் மின் வசதி, தளவாட பொருட்கள் வசதியை, அந்தந்த பகுதி, வி.ஏ.ஓ.,க்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றம் அரசு பணிநியமனம் குறித்து அதிரடி தீர்ப்பு.

பட்டப் படிப்பு முடிக்காமல், திறந்தவெளி பல்கலை மூலம், முதுகலை பட்டம்பெற்றவர்களை, அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்காதது சரியே; ஆனால், நுழைவுத் தேர்வுக்குப்பின், பட்டப் படிப்பு முடித்தவர்கள், அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உரிமை உள்ளது' என,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.இதில்
25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.

1.KANYAKUMARI SLB Govt Hr Sec School Nagercoil -629 001

17B மாதிரி படிவம் (For Tendered Vote)

சரியான ஆவணங்களுடன் ஓட்டுப்போட வரும்போது, அவரது ஓட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தால், ஓட்டுப்போட வந்தவருக்கு 'டெண்டேடு' ஓட்டளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இதற்காக ஓட்டுச்சாவடிக்கு 20 'பேலட் பேப்பர்கள்' வழங்கப்பட்டிருக்கும். 'பேலட் பேப்பரில்' முத்திரை வைத்து ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும்.

இவர்களை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிக்க கூடாது.



21.4.14

பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை': உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை; DINAMANI

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, "பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை' என நல்லதொரு தீர்ப்பை அளித்துள்ளது. அண்மைக் காலமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைக் கொடுமைப்படுத்துவதாகவும், மாணவர்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி வருவதாகவும் சில தனி நபர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், ஏன், அரசியல் கட்சிகளும் கூட உருவாக்கி வருவது வேதனை அளிக்கும் செயலாகும்.

என்ஜினீயரிங் சேர உள்ள ‘முதல் தலைமுறை பட்டதாரிகள் இப்போதே சான்றிதழ் பெற்று வைத்திருங்கள்’ அண்ணா பல்கலைக்கழகம் வேண்டுகோள்

என்ஜினீயரிங் சேர உள்ள முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் இப்போதே தாசில்தாரிடம் அதற்கான சான்றிதழை வாங்கி வைத்திருங்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதிகாலையில் துவங்கும் தேர்தல் பணியால் பெண் ஆசிரியைகள் அவதி

'ஓட்டுப்பதிவு காலை, 7:00 மணிக்கே துவங்க உள்ளதால், தேர்தல் அலுவலர்கள் அதிகாலையில், ஓட்டுச்சாவடியில் இருந்தாக வேண்டிய நிலை உள்ளது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் கைக்குழந்தை உள்ள ஆசிரியர்களுக்கு, தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் பணி தொடர்பான சில விவரங்கள்!

ஒருவரே இரண்டு முறை ஓட்டுபோடலாம்!
PROXY VOTE:
ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், தங்களது பெயர் உள்ள வாக்குச்சாவடி பகுதியில் அவரது வாக்கைப் மற்றொருவர் மூலம் பதிவு செய்யலாம்.
வாக்குரிமை வீரர் ஏற்கெனவே இதுகுறித்த விதிமுறையை கடைபிடித்து உரிய மனு செய்திருந்தால் தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு செய்யும் உரிமை வழங்கப்படுகிறது.
யார் மூலம் (மனைவி அல்லது குடும்பத்தினர்) தனது வாக்கைப் பதிவு செய்ய விண்ணப்பித்தாரா அவர் முதலில் அவருடையை வாக்கைப் பதிவு செய்து விட்டு மீண்டும் வந்து ராணு வவீரரின் வாக்கைப் பதிவு செய்யலாம்.