மெட்ரிக் பள்ளிகளில் 2 பாடங்களை தமிழில் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு

மெட்ரிக் பள்ளிகளில் தமிழில் 2 பாடங்களை கட்டாயம் நடத்த வேண்டும் என்கிற அரசு உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், வரும் 10ம் தேதி அரசு பதில் அளிக்க நீதிபதி

கர்நாடகா ஆசிரியர் பட்டய படிப்பு தமிழகத்தில் செல்லாது என்ற அரசாணை செல்லும் ; ஐகோர்ட் தீர்ப்பு

கர்நாடகாவில் ஆசிரியர் பட்டய படிப்பு படித்தது, தமிழகத்திற்கு பொருந்தாது என்று அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.சென்னையை சேர்ந்த 10 ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில்

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம்: இந்த ஆண்டு ஆள்குறைப்பு இல்லை

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் இந்த ஆண்டு ஆள்குறைப்பு செய்யப்படாது என அந்தத் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் நிதிப் பற்றாக்குறை காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 385 வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

பிளஸ்–2 விடைத்தாள் நகல் வெளியீட்டில் குளறுபடி, பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பதாக தேர்வுத்துறை இயக்குனர் உறுதி

பிளஸ்–2 விடைத்தாள் விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டதில் குளறுபடி நடந்தது. ஒரு மாணவரின் விடைத்தாள் மற்றொரு மாணவருக்கு கிடைத்துள்ளது.

தமிழக முதல்வர் பாரதப் பிரதமரிடம் கல்வித் துறைக்கு கேட்டவை

text of the Memorandum presented by Selvi J Jayalalithaa,

Hon’ble Chief Minister of Tamil Nadu to Shri Narendra Modi,
Hon’ble Prime Minister of India on 3.6.2014 is reproduced below:
(c) Grants for School Education

ஆசிரியர்கள் பள்ளியில் செல்போன் பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை: கல்வி அதிகாரி

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி நேரத்தில் செல்போன் பயன்படுத்தினார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் சரக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூறினார்.

புதிய வெயிட்டேஜ் உத்தரவால் 58000 பேருக்கு வேலை இல்லை : அதிர்ச்சியில் ஆசிரியர் தேர்வர்கள் DINAKARAN

டிஇடி தேர்வு எழுதியவர்களுக்கான புதிய வெயிட்டேஜ் முறையை அரசு வெளியிட்டதை அடுத்து, 58 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர் தகுதி தேர்வு

IGNOU - Master of Education (M.Ed) Programme

Eligibility -B.Ed with 55%

Duration - 2 years

Medium of Instruction - English

Last dt.15.7.14

Entrance Exam - 17.8.14

Cost of application for the above programmes - Rs.1050/ , There is no age bar for admission to the above programmes


Application form and prospectus can also be downloaded from the website www.ignou.ac.in

ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம் - தி இந்து நாளேடு

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

அதிகரிக்கும் 'சர்பிளஸ்': அச்சத்தில் ஆசிரியர்கள்! - தினமலர்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதால், 'சர்பிளஸ்' ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.அரசு விதிப்படி, ஆசிரியர், மாணவர் விகிதம்

1800 அரசுப்பள்ளிகள் தரம் உயர்வு:ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் தொய்வு - தினமலர்

தமிழகத்தில் 2015ம் ஆண்டுக்குள் 1800 அரசு நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் என்ற அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இலக்கில் தொய்வு

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகளுக்கான 'சோதனை: 16ல் இருந்து 26 ஆக அதிகரிப்பு

பத்தாம் வகுப்பில் செய்முறை தேர்வுகளுக்கான 'சோதனைகள்' (எக்ஸ்பிரிமிண்ட்) இந்தாண்டு 16ல் இருந்து 26 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத் தேர்வுகளுக்கு, எழுத்துத் தேர்விற்கு முன் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும்.

மாணவர்கள் வராததால்அரசு பள்ளிக்கு 'பூட்டு' - தினமலர்

திருவாடானை அருகே ஒரு மாணவர்கள் கூட வராததால், அரசு துவக்கப்பள்ளி இழுத்து பூட்டப்பட்டுள்ளது.ராமநாதபுரம் திருவாடானை அருகே டி.கிளியூரில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்தாண்டு ஒரு மாணவி மட்டும் படித்தார்.

ஆசிரியர் பணிக்கு கூடுதல் இடங்கள்: தேர்வு செய்யப்படும் ஆசிரியர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும், தேர்வு வாரியம் தகவல் - தினமலர்

ஆசிரியர் தேர்வுக்கு, பல்வேறு துறைகளில் இருந்து, கூடுதல் இடங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, தேர்வு செய்யப்படும் ஆசிரியர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான - டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது.

முறையானஅறிவிப்பு வரும் வரை மாறுதல் மற்றும் கலந்தாய்வு பற்றிய செய்திகளை நம்ப வேண்டாம்

இதுவரை மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தேதிகள் குறித்த அரசாணை எதுவும் வெளியிடப்படாத நிலைகுறித்தும், அவ்வாறு அறிவிக்கப்பட்டால் தினசரி நாளிதழ்களுக்கும், சங்கப்பிரதிநிதிகளுக்கும் முறையாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றும்  தொடக்க கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.


எனவே முறையானஅறிவிப்புமற்றும் அரசாணை வரும் வரை அதுபற்றிய செய்திகளை நம்ப வேண்டாம் எனபொதுச்செயலர் ஆசிரியர்களை கேட்டுக்கொள்கிறார்

5.6.14

நாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி முறையில், குஜராத் மாதிரியைப் பின்பற்ற, மத்திய மனித வளத்துறை முடிவு

நாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி முறையில், குஜராத் மாதிரியைப் பின்பற்ற, மத்திய மனித வளத்துறை முடிவு செய்துள்ளது.

அங்கீகாரம் பெறாத 36 'ஏ' பள்ளி குழந்தைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்க தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னையில் உள்ள செட்டிநாடு அறக்கட்டளை நடத்திய 36 "ஏ' பள்ளி மாணவர்களை அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சிபிஎஸ்இ பாடப்பிரிவு பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளின் ரேங்க் பட்டியல் தேர்வுத்துறை வெளியீடு

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் சென்னை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 100 சதவீதம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.

ஏழை குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீடு மறுக்கும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து : ஐகோர்ட்டில் வழக்கு

மதுரையை சேர்ந்த ரமேஷ் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், ஏழை மக்களின் குழந்தைகளுக்கு துவக்க நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இட

வகுப்பறையை விட்டு வெளியே வந்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

நாமக்கல்லில் வகுப்பறையை விட்டு வெளியே வந்த அரசு பள்ளி ஆசிரியரை முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார். 

495 பொறியியல் கல்லூரிகளின் தர வரிசை: அண்ணா பல்கலை அறிவிப்பு

கடந்த, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், 495 பொறியியல் கல்லூரிகளில் நடந்த பல்வேறு, 'செமஸ்டர்' தேர்வுகளின் அடிப்படையில், தர வரிசை பட்டியலை, அண்ணா பல்கலை, நேற்று, தன் இணையதளத்தில் (www.annavuiv.edu வெளியிட்டுள்ளது.

15 ஆயிரம் ஆசிரியர் தேர்வு பட்டியல் இருபது நாளில் வெளியிட திட்டம்

ஆசிரியர் தேர்வுக்கு, புதிய அரசாணை வெளியிட்டதை அடுத்து, 72 ஆயிரம் பேரில், தகுதியான, 15 ஆயிரம் பேர் தேர்வுப் பட்டியல், 20 நாளில் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்றிரவு தெரிவித்தது.

73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’ ஆன்லைனில் புதிய கட் ஆப் மதிப்பெண் உயர் நீதிமன்ற உத்தரவால் அதிரடி மாற்றம்

உயர் நீதிமன்ற உத்தரவால், ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய கட் ஆப் மார்க் வருகிறது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8- வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும்.

தொடக்கக்கல்வித்துறையில் 13ம் தேதி முதல் மாறுதல் கலந்தாய்வு நடக்க வாய்ப்பு;

2014-15ம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பொதுமாறுதல்  வருகிற 13ம் தேதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வும், அன்று மாலை நடுநிலைப் பள்ளி த.ஆ பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வும்,
 

அதை தொடர்ந்து மற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் இதற்கான ஆணை விரைவில் வெளியாகவுள்ளதெனவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிளஸ் 2 விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகலை புதன்கிழமை (ஜூன் 4) காலை 10 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.

ஜூன் 30-க்குள் மழைநீர் சேகரிப்பு கட்டுமானம்: பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

அனைத்துப் பள்ளிகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஜூன் 30-க்குள் ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: விண்ணப்பிக்க காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை அறிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்களின் விவரம் வெப்சைட்டில் பதிய உத்தரவு

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உபரி ஆசிரியர் பெயர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அங்கன்வாடி குட்டீஸ்களுக்கு இலவச ஆங்கிலப்பயிற்சி

உடுமலை அருகே கிராமப்புற மாணவர்கள், அரசுப்பள்ளியை புறக்கணிப்பதை தடுக்க, அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு இலவச ஆங்கில பயிற்சியளித்தல் என்ற புதிய நடைமுறையை பள்ளி நிர்வாகத்தினர் செயல்படுத்த துவங்கியுள்ளனர்.

பத்தாம் வகுப்பு 'தத்கல்' அறிவிப்பு 6,7ம் தேதிகளில் பதிவு செய்யலாம்

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், வரும், 6,7ம் தேதிகளில், முதன்மை கல்வி அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.

உபரி ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' விவகாரம் : ஆசிரியர்கள், தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம்; கல்வித்துறை வட்டாரம்

அரசு பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை, 'டிரான்ஸ்பர்' செய்ய, கல்வித்துறை எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிராக, ஆசிரியர்களும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

ஓராண்டாக தொடரும் ஆசிரியர்கள் பற்றாக்குறை: மாணவர்களின் கல்வி பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர், மேல்நிலைப்பள்ளியில் 232 ஆசிரியர் காலி பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படவில்லை. 
அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன் தேர்ச்சி சதவீதம் குறையும் வாய்ப்புள்ளது.

மாணவர் சேர்க்கை குறைவால் கூடுதலான ஆசிரியர்கள்; காலிபணியிடங்களில் நியமிக்க தேவை நடவடிக்கை DINAMALAR

சிவகாசி ஒன்றிய அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைவால், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, வேறு ஒன்றியங்களில்,காலி பணியிட பள்ளிகளில் மாறுதல் செய்திட ,கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எச்.ஐ.வி.ஐ காரணம் காட்டி நீக்கப்பட்ட மாணவி மீண்டும் சேர்ப்பு

கோவையில் எச்.ஐ.வி.யை காரணம் காட்டி பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். எச்.ஐ.வி. நோய் பாதிப்பால் பெற்றோர் இறந்த நிலையில் தொண்டு நிறுவனத்தில் தங்கி படித்து வரும் ஒரு மாணவி, இன்று கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். 

மணப்பாறை அருகே தலைமை ஆசிரியர் இல்லாமல் செயல்பட்டு வரும் அரசு பள்ளி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள செவலூரில் அரசு ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 120 மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியரே இல்லை. 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் ஒருவர் தலைமை ஆசிரியர் பொறுப்பை கவனித்து வந்தார்.

தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் சிக்கல் புதிய நியமன முறை குறித்து விரைவில் முடிவு

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதன் காரணமாக தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. இதையடுத்து, புதிய நியமன முறை குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 

பிளஸ் 2 தேர்வு முறையில் மாற வேண்டும் அணுகுமுறை!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஒன்றன்பின் ஒன்றாகவெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டு புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போது அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையும் மாணவர் சேர்க்கையும்குறைந்து கொண்டே வருவதும் சி.பி.எஸ்.இ.

அரசு பள்ளிகளில் கல்வி தொடர மாணவர்களை வலியுறுத்துங்கள்! தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

மாற்றுச்சான்றிதழ் பெற வரும் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களை, அரசு மேல்நிலை பள்ளிகளிலே கல்வி தொடர, தலைமையாசிரியர்கள் எடுத்துக்கூற வேண்டுமென, அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி பற்றாக்குறையால் பள்ளிகள் மூடல்: காரியாபட்டி பகுதி மாணவர்கள் தவிப்பு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில், என்.ஜி.ஓ., மூலம் நடத்தப்பட்டு வந்த, சர்வ சேவா தொடக்கப்பள்ளிகள், நிதி பற்றாக்குறையால் மூடப்பட்டன. கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக, உறுதி கூறியதை அடுத்து, பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்.

பள்ளி திறந்த முதல் நாளே சோகம்: தலைமை ஆசிரியை தாக்கி மாணவி காயம்

ராமநாதபுரம் அருகே பள்ளி திறந்த முதல் நாளில், தலைமை ஆசிரியை தாக்கியதில் எட்டாம் வகுப்பு மாணவி காயமடைந்தார்.

கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை: அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு

கடலூர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, உயர் தொடக்க நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.

பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: 'தத்கல்' மூலம் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு, குறித்த காலத்தில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம்.

மாணவரே இல்லாத பள்ளி: முதல் நாளில் காத்திருந்த ஆசிரியர்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஒரு மாணவர் கூட வராத துவக்கப்பள்ளியை, தலைமை ஆசிரியை திறந்து வைத்து காத்திருந்தார்.

2.6.14

C.P.S எண் உள்ளவர்களுக்கு மட்டுமே ஊதியம் கோரப்படவேண்டும்.C.P.S எண் பெற ஆகஸ்ட் 2014 வரை மட்டுமே காலக்கெடு வழங்கி அரசு உத்திரவு.

01.04.2003 க்கு பிறகு நியமனம் பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர்கள் அனைவரும் C.P.S திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்,
C.P.S எண் உள்ளவர்களுக்கு மட்டுமே ஊதியம் கோரப்படவேண்டும்.C.P.S எண் பெற ஆகஸ்ட் 2014 வரை மட்டுமே காலக்கெடு வழங்கி அரசு உத்திரவு

இலவச பஸ் பாஸ் வினியோகம்: மாணவர்களுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் இலவச பஸ் பாஸ் பெற விரும்பும் மாணவ, மாணவியர் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வாங்கி வருமாறு அரசு போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆங்கில வழி வகுப்பு துவங்க நெருக்கடி: புலமை இல்லாத ஆசிரியர்கள் மீது திணிப்பு DINAMALAR

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக, ஆங்கில வழி வகுப்பு துவங்க தலைமை ஆசிரியருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆங்கில புலமை இல்லாத ஆசிரியர்கள் மீது, ஆங்கிலம் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், மாணவரின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன், அரசின் ஆங்கில வழித்திட்டம் முழுமையடையாத நிலை ஏற்பட்டுள்ளத.

ஊருக்கு ஒரு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி

மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிப் பேருந்துகள் ஓ(ட்)டத் தகுதியானவைதானா என்று அண்மையில் ஜரூராகச் சோதனை நடைபெற்றது. இதற்காக, அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று ஆய்வு செய்ததாகவும், தகுதியற்ற நிலையில் இருந்த வாகனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது நல்ல விஷயம்தானே என்று தோன்றினாலும், மிகவும் தாமதமான நடவடிக்கையோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

பிளஸ்–1 வகுப்புகள் ஜூன் 16–ந்தேதி திறக்கப்படுகின்றன: பள்ளிக்கல்வி இயக்குனர்

தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன.

அரசு அலுவலகங்களின் கோப்புகளை அந்நியர்கள் பராமரிக்க அனுமதிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

முக்கியம் மற்றும் ரகசியமானதாகக் கருதப்படும் அரசு அலுவலகங்களின் கோப்புகள் அல்லது ஆவணங்களை வெளிநபர்கள் அல்லது அந்நியர்கள் பராமரிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு ரத்து திருவண்ணாமலையில் கல்வித்துறை நடவடிக்கை

திருவண்ணாமலை, :அரசு பள்ளிகளில் ஓவியம், இசை, விளையாட்டு போன்றவற்றுக்கான சிறப்பு பாட ஆசிரியர்களை, மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பு ஊதியம் என்ற அடிப்படையில் கடந்த 2012ம் ஆண்டு மாநிலம் முழுவதும் தமிழக அரசு நியமித்தது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 944 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.

மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 5ம் தேதி முதல் இரும்புச்சத்து மாத்திரைகள்

வேலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 5ம் தேதி முதல் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படும்’ என்று முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி தெரிவித்தார்.

சமச்சீர் கல்விக்கு பதிலாக புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடதிட்டம் அமல்

 புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் அரசு தொடக்கப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் தற்போது ஆங்கிலம், தமிழ் வழி கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்கள் தமிழக கல்வி வாரியத்துடனும், மாகி கேரள மாநில கல்வி வாரியம், ஏனாம் ஆந்திரா கல்வி வாரியத்துடன் இணைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு: கடும் வெயிலால், தள்ளிவைக்க வலியுறுத்தல் - கோடை விடுமுறைக்குப் பின், தமிழகம் முழுவதும், நாளை, 2ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும் அதில் எந்த மாற்றமும் இல்லை' பள்ளிக்கல்வி இயக்குனர்

பள்ளி கல்வித் துறை அறிவிப்புப்படி, தமிழகம் முழுவதும், நாளை (2ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆனால், 'அக்னி நட்சத்திரம் முடிந்தும், வெயிலின் கொடுமை நீடிப்பதால், பள்ளி திறப்பு தேதியை, 10 நாட்களுக்கு, தள்ளிவைக்க வேண்டும்' என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். 'பத்தாம் வகுப்பு மாணவர்கள், வெயிலால் பாதிக்கக்கூடாது என, பொது தேர்வு நேரத்தை, ஒரு மணி நேரம் முன்னதாக மாற்றிய தமிழக அரசு, இப்போது, மவுனம் காப்பது ஏன்?' என, ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

12 மழலையர் பள்ளிகளுக்கு 'பூட்டு': திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அதிரடி

திருப்பூர் மாவட்டத்தில், முறையான அனுமதி பெறாமல், அடிப்படை வசதிகளின்றி இயங்கி வந்த, 12 மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளை, வரும் கல்வியாண்டு முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பணி நிரவல் டிரான்ஸ்பர் தயார் பள்ளிகள் திறக்கும் முன்பே ஆசிரியர்கள் கடும் பீதி-tamilmurasu.org

தமிழகம் முழுவதும் வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், பணி நிரவல் என்ற பெயரில் ஆசிரியர்களை மாற்றம் செய்ய கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதனால், பள்ளிகள் திறக்கும் முன்பே ஆசிரியர்கள் கடும் பீதியில் உள்ளனர்.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறை முடிந்து வரும் 2ம் தேதி திறக்கப்பட உள்ளன.

தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்கள் இருந்தால் போதும் ஆங்கில வழி கல்வி; அரசு உத்தரவு

தொடக்கப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 30 மாணவர்கள் இருந்தாலே போதும், ஆங்கில வழி கல்வியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் செயல் படும் அனைத்து தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பிரிவுகளை தொடங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அரசு உத்தரவிட்டது.