27.12.14
குடும்ப பிரச்னையால் அரசுப் பணிகளில் பதவி உயர்வை மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
குடும்ப பிரச்னையை காரணமாகக் கொண்டு அரசு ஊழியரின் பதவி உயர்வை மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக பணிபுரிபவர் ஏ.வேலுசாமி. அவருக்கு 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
பள்ளிகளின் தரம் உயர்ந்தன..! ஆனால் வசதியோ..?
தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 6 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன.
எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்: தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன்
பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை, மாணவர் ஒருவர் தாக்கியதாக புகார் செய்யப்பட்டு உள்ளது.
ஆலோசனை மையத்தில் மாணவ, மாணவியருக்கு உளவியல் நிபுணர்கள் தனித்தனியே அவசியம்
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள உளவியல் ஆலோசனை மையத்தில், மாணவ, மாணவியருக்கு தனித்தனியே ஆண், பெண் என 2 உளவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எஸ்எஸ்எல்சி மாணவர்களின் பெயர் பட்டியல் பிரவுசிங் சென்டரில் தயாரிக்க பள்ளிகளுக்கு தடை
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மாணவர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தனியார் பிரவுசிங் சென்டரில் மேற்கொள்ள பள்ளிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.
25.12.14
குரூப் 2A காலி பணியிட தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு: தரவரிசை பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட
அறிக்கை: குரூப் 2 பதவியில் அடங்கிய உதவியாளர், கீழ்நிலைஎழுத்தர், கணக்காளர் மற்றும் நேர்முக எழுத்தர் ஆகிய பதவியில்காலியாக உள்ள
நற்சான்றுக்கு அலையும் தலைமையாசிரியர்கள்
மாணவர்களுக்கு நற்சான்று வழங்கும் தலைமையாசிரியர்கள் கல்வித்துறையின் உத்தரவால் அவர்களுக்கே நற்சான்று கேட்டு ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகளை தேடி அலைகின்றனர்.
24.12.14
அரசு நர்சிங் பள்ளிகளில் 100 இடங்களுக்கு அனுமதி
வரும் ஆண்டில் அனைத்து அரசு நர்சிங் பள்ளிகளிலும் தலா 100 மாணவிகளை சேர்த்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 23 அரசு நர்சிங் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 11 பள்ளிகளில் 50 இடங்கள், மற்ற பள்ளிகளில் 60 முதல் 90 இடங்கள்
அரசு விடுதியில் மாணவர்களுக்கு ரூ.25க்கு மூன்று வேளை உணவு: கேள்விக்குறியானது தரம்
தேனி: அரசு விடுதி மாணவர்களுக்கு தினமும் ரூ. 25க்கு மூன்றுவேளை உணவு வழங்க வேண்டி உள்ளதால் விடுதி வார்டன்கள் புலம்பி தவிக்கின்றனர். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 4,300 மாணவர் விடுதிகள் இயங்குகின்றன. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர், ஆதரவற்றோர் குழந்தைகளை அரசு
கட்டாய கல்வி சட்டம்: இனி மாணவரை சேர்க்க முடியுமா? கட்டணத்தை அரசு தராததால் பள்ளிகள் சங்கம் முடிவு
கட்டாய கல்வி சட்டம் கீழ், மாணவர்களை சேர்த்த தனியார் பள்ளிகளுக்கு, அதற்கான கட்டணத்தை தமிழக அரசு இதுவரை கொடுக்கவில்லை. எனவே, அடுத்த ஆண்டு சேர்க்கையை நடத்தப் போவதில்லை என, தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.
பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரம் செய்முறைத் தேர்வு: கல்வித் துறை திட்டம்
பிளஸ்2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம் தேதிதொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல்கள் தேர்வுத்துறைக்குவந்து
உயர்கல்வித் துறை செயலாளராக செல்வி அபூர்வா நியமனம்
உயர் கல்வித் துறைச் செயலாளராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன்
செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:
(அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)
செல்வி.அபூர்வா
உயர்கல்வித் துறைச் செயலாளர்
(தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர், இந்திய மருத்துவத் துறை ஆணையாளர்)
GROUP - 4 , தேர்விற்கான விடைகள் தேர்வாணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது
படிக்கும் பள்ளிகளிலேயே எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுமையம்: அரசுக்கு நோட்டீஸ்
அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வு மையங்களை ஏற்படுத்தக் கோரும் மனுவுக்கு பள்ளி கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
23.12.14
சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும்!
பாடமும் பாடதிட்டமும் இருக்கவேண்டும். ஆனால் அதை நடத்துகிற
சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும். காலகெடு இருக்க
கூடாது. அனைத்து மாணவனும் முழு திறன் கிடைக்கும் வரை காலம்
திருவள்ளுவர் பிறந்த நாள் - மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டி
திருவள்ளுவர் பிறந்த நாளையொட்டி மாணவர்கள் கட்டுரை, ஓவியங்களை வரைந்து அனுப்பலாம். அதில் பங்குபெறும் மாணவர்கள் தங்ளுக்குப் பிடித்த இரண்டு திருக்குறளையும், அதற்கான
வருங்கால வைப்பு நிதி தணிக்கைக்கு ஒவ்வொரு ஆசிரியரிடமும் ரூ.250 பணம் வசூல்: ஆசிரியர்கள் எதிர்ப்பு
வருங்கால வைப்பு நிதியை தணிக்கை செய்ய பணம் வசூலிப்பதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதிக்காக ஒரு குறிப்பிட்ட தொகை மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த கணக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் பராமரிக்கப்படுகிறது. 1996-97 க்கு பின் தணிக்கை செய்யப்படவில்லை.
வேலூரில் பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை: கலெக்டர் உத்தரவு
வேலூர் கலெக்டர் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து வகை தொடக்க நகராட்சி உயர்நிலை மேனிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வருவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
புதிதாக எட்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களுக்கு அனுமதி
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக எட்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என, முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.
மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்!
ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், அரசுப்பள்ளிகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற பல்வேறு புதிய யுக்திகளையும் புகுத்தி வருகிறது.
தமிழ் ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வி இணைஇயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 2010-11 மற்றும் 2012ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
யானை, சிறுத்தை, காட்டுப்பன்றியுடன் காட்டுக்குள் ஒரு கல்விக் கூடம்: பீதியுடன் படிக்கும் மாணவர்கள்
சுருளியாறு அரசு தொடக்கப்பள்ளிக்கு சிறுத்தை, யானை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி வருவதால் மாணவர்களை பாதுகாக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
எஸ்எஸ்எல்சி தேர்வு அட்டவணையில் மாற்றமில்லை: அரசு அறிவிப்பு
21.12.14 அன்று தி இந்து தமிழ் நாளிதழில் 10ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணையில் மாற்றம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது பொது தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும்
இல்லை என்று அரசு தேர்வுகள்
இயக்கக இயக்குனர் தேவராஜன் அறிவிப்பு.
தற்போது பொது தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும்
இல்லை என்று அரசு தேர்வுகள்
இயக்கக இயக்குனர் தேவராஜன் அறிவிப்பு.
22.12.14
கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி. படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட். படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் , உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி., படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட்., படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் என்று வேலைவாய்ப்பு அதிகாரிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
TNPSC: குரூப் 4 தேர்வு: 2 லட்சம் பேர் ஆப்சென்ட்;2 மாதத்தில் ரிசல்ட் வெளியீடு.
தமிழகம் முழுவதும் நேற்று நடந்த குரூப் 4 தேர்வில் 2 லட்சம் பேர்தேர்வுஎழுதவரவில்லை. தேர்வுக்கான ரிசல்ட் 2 மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார் பில் குரூப் 4 பணியில் 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.
PG-TRB: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுபயிற்சிக்கு அழைப்பு
சென்னை ஆசிரியர் தேர்வாணையம் 2015ம் ஆண்டு ஜனவரி 10ல் நடத்தும்முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள ஐ.டி.ஐ. அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 18ம் தேதி முதல் நடக்கிறது.
கருணை அடிப்படையில் பணி நியமனம்: 18 வயது நிரம்பாதோர் மனுக்களைப் பரிசீலிக்க புதிய உத்தரவு
கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில், 18 வயதை நிறைவுசெய்யாமல் பணியில் சேர்ந்தவர்களின் மனுக்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது.
பள்ளி வன்முறைக்கு எதிராக வீதிக்கு வந்த ஆசிரியர்கள்!
'ஆசிரியர்களுக்கும், பள்ளிகளின் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும்வகையில், தமிழக அரசு உடனடியாக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டு தோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனதில் வைத்து ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.