தமிழகத்தில், பிரபல பள்ளிகள் உட்பட, 2,000 தனியார் பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலேயே அட்டகாசமாகச் செயல்படுகின்றன.

தமிழகத்தில், பிரபல பள்ளிகள் உட்பட, 2,000 தனியார் பள்ளிகள், அங்கீகாரம்இல்லாமலேயே அட்டகாசமாகச் செயல்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தவோ, ஒழுங்குபடுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் மவுனம் சாதித்து வருகிறது. தமிழகத்தில், 5,000 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. 

ஹெல்மெட்' வதந்தி: போலீசார் எச்சரிக்கை

'ஹெல்மெட்' அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என, முதல்வர் அறிவித்து இருப்பதாக வதந்தி பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்து உள்ளனர்.

தமிழக பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கல்வித்துறை ஆலோசனை

தமிழகத்தில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் மும்மொழிக் கொள்கையை கொண்டுவருவதற்காக பள்ளிக் கல்வித்துறை களமிறங்கியுள்ளது.

ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்விற்கு கல்வித்துறையின் சிறப்பு அரசாணை தான். முட்டுக்கட்டையா?

கடந்த ஆண்டு அரையாண்டு தேர்வையொட்டி பள்ளிக்கல்வித்துறை செயலர் சிறப்பு அரசாணை ஒன்றை பிறப்பித்தார். அதில்,அரையாண்டு தேர்வு நெருங்குவதால் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் எதுவும் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டது.

10.7.15

விகடன்..com - தமிழக அரசுக்கு அடுத்த தலைவலி: ஊதிய கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ' போர்க்கொடி!


விருதுநகர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் சம்பள உயர்வு கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த பிரச்னை இழுபறியாக உள்ள நிலையில், தமிழக அரசுக்கு அடுத்த தலைவலி உருவாகியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் - குடிமங்கலம் ஒன்றிய TNGTF கிளை கூட்டம் நேற்று (8.7.15) சிறப்பாக நடைபெற்றது

 கூட்டத்தில் 2015-16 ஆண்டுக்கான உறுப்பினர் சந்தா மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்க பட்டது.

ஆசிரியப் பயிற்றுனர்களை -பட்டதாரி ஆசிரியராக பணிமாற்றம் செய்யக் கோரிய வழக்கு

ஆசிரியப் பயிற்றுனர்களை -பட்டதாரி ஆசிரியராக பணிமாற்றம் செய்யக் கோரிய வழக்கில் மாநில திட்ட அலுவலகம் (STATE PROJECT DIRECTOR)சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அறை

அரசுப் பள்ளிகளில், கணினி வழி கல்வியைப் போதிக்கும், ஸ்மார்ட் கிளாஸ்அறை அமைக்கும் பணியை, தமிழ்நாடு மின்னணுவியல் கழகமான, எல்காட் நிறுவனம் துவங்கி உள்ளது. 

கல்வி உதவித் தொகை நடைமுறைகளை எளிதாக்க மாணவர்களின் ஆதார் விவரம் சேகரிப்பு

மாநிலம் முழுவதிலும் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் ஆதார் அடையாள அட்டை உள்ளவர்கள் விவரங்கள் சேகரிக்கும் பணியில் கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது.

PG Teachers REGULARISATION ORDER

முதுகலையாசிரியர்கள் நேரடி நியமனம் - 2010-11ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் – பணி நியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களாக பணிபுரிபவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல்.

எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் பள்ளி பராமரிப்பு நிதி அனைத்தும் கழிப்பறை பராமரிப்புக்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்- கல்வித் துறை

மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணியை உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதி மேற்கொள்ள வேண்டும் என்பது முக்கிய நோக்கம்.

குரூப்-1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: ஆகஸ்டு9-ந்தேதி கடைசி நாள்

74 உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது. தேர்வு எழுத இன்று முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கடைசி நாள்.

குரூப் 4 தட்டச்சர் பணி: ஜூலை13 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் 4 தொகுதியில் தட்டச்சர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி அடைந்தோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 13-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

வங்கி கணக்குகளில் குளறுபடி மாணவர் உதவித்தொகையில் சிக்கல்

வங்கி கணக்கு முறையாக பராமரிக்கப் படாததால் பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவித்தொகைகளை

பள்ளி குழந்தைகள் சிகிச்சைக்கு குழு

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் சுகாதாரம் காக்க அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக குழந்தைகள் நலக்குழு ஒன்றை மாநில சுகாதாரத்துறை ஏற்படுத்துகிறது.

ஆதார் எண்ணுக்காக மாத ஊதியம் நிறுத்தப்படாது : அதிகாரி விளக்கம்

ஆதார் எண்ணை சமர்ப்பிக்காவிட்டால் மாத ஊதியம் நிறுத்தப்படும் என்ற உத்தரவு எதையும் அரசு பிறப்பிக்கவில்லை என்று சென்னை தலைமைச் செயலக உயரதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு அறிமுகமாகிறது இணையதள கல்வி

அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது.

தனியார் பள்ளிகளில், 25 சதவீத ஒதுக்கீட்டில்,ஏழை மாணவர்களைசேர்க்க மறுத்தால் புகார் தெரிவிக்கலாம்

தனியார் பள்ளிகளில், 25 சதவீத ஒதுக்கீட்டில், ஏழை மாணவர்களைச் சேர்க்க மறுத்தால், அதுகுறித்த புகார்களை தெரிவிக்க, கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பணிபுரிய இடைநிலை ஆசிரியருக்கான 'கவுன்சிலிங்' துவங்கியது

ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பணிபுரிய இடைநிலை ஆசிரியருக்கான 'கவுன்சிலிங்' நேற்று துவங்கியது.தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், உண்டு,

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு பெற விதிகளில் தளர்வு

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

புதிய பாட புத்தகத்தில் முன்னுரை, முகவுரை நீக்கம்

பிளஸ் 1, பிளஸ் 2 பாட புத்தகங்களில் முன்னுரை, முகவுரை நீக்கி, புதிதாக வழங்கப்பட்டு உள்ளது. 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆசிரியர்களுக்கு விளையாட்டு பயிற்சி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆசிரியர்களுக்கான விளையாட்டு பயிற்சி முகாம் ஆகஸ்டில் நடக்கிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா? கல்வியாளர்கள், அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா? என்று கல்வியாளர்கள், அதிகாரிகளிடம்தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கருத்து கேட்கிறது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலை 15 முதல் அசல் சான்றிதழ்

பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் ஜூலை 15 முதல் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
நடைபெற்று முடியத மார்ச்/2015 மேல்நிலை பொதுத்தேர்வு எழுதிய

கிராம மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி:ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம்

கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களை தேசிய போட்டித்தேர்வுகளில் பங்கேற்க செய்ய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 'உயர்கல்விக்கான தேசிய போட்டித் தேர்வுகளில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு இல்லை' என ஆய்வில் தெரிந்துள்ளது.

பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனரும் ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான பூஜா குல்கர்னி உத்தரவிட்டார்.

எம்.பி.பி.எஸ்.: 108 காலியிடங்கள், அரசு பி.டி.எஸ்.: 20 காலியிடங்கள்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மொத்தம் 108 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.  அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 95 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் என மொத்தம் 108 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

'பிளே ஸ்கூல்' விதிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

தமிழக அரசின், 'பிளே ஸ்கூல்' வரைவு விதிகளுக்கு, சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். இதனால், குழந்தைகளின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகும் என்றும் அச்சம் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில், 'பிளே ஸ்கூல்' என்ற மழலையர் பள்ளிகள், புற்றீசல் போலப் பெருகி வருகின்றன. 

50,000 இடங்களுக்கு மாணவர் இல்லை தாமத நடவடிக்கையால் திட்டம் தோல்வி

இலவச மாணவர் சேர்க்கைத் தாமதமானதால், தனியார் பள்ளிகளில், 50 ஆயிரம் எல்.கே.ஜி., இடங்களில் சேர, மாணவர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இவற்றில், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களைச் சேர்க்கலாமா என, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு 'ஒரிஜினல்' சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம்

தேர்வு முடிவுகள் வெளியாகி 2 மாதங்கள் ஆகியும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 'ஒரிஜினல்' மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் கல்விக்கடன், உதவித்தொகை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஆங்கில உச்சரிப்பு பயிற்சிக்கு போதிய பயிற்சியின்மையால் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிரமம்

அரசு தொடக்கப் பள்ளிகளில், டி.வி.டி., பிளேயர் பழுது, 'சிடி' காணாமல் போனது மற்றும் போதிய பயிற்சியின்மையால், ஆங்கில உச்சரிப்புப் பயிற்சிக்கு, ஆசிரியர்கள் முழுக்கு போட்டுள்ளனர். இதனால், ஆங்கில வழி வகுப்புகளிலும் தமிழிலேயே பாடம் நடத்தப்படுகிறது.

கல்விதுறையில் வாரிசு வேலை கோரி 14 ஆண்டுகளாக காத்திருந்தவருக்கு, வேலை வழங்குமாறு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

வாரிசு வேலை கோரி 14 ஆண்டுகளாக காத்திருந்தவருக்கு, வேலை வழங்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 

நல்லாசிரியர் தேர்வு: அரசு புது முடிவு

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், 15 ஆண்டுகளாக எந்த பிரச்னையுமின்றி பணியாற்றும்

இன்ஜினியரிங் கவுன்சிலிங் விளையாட்டு பிரிவு இடங்களுக்கு மீண்டும் 8ம் தேதி கவுன்சிலிங்

அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில், விளையாட்டுப் பிரிவுக்கு, கடந்த, 28ம் தேதி கவுன்சிலிங் நடந்தது. மொத்த ஒதுக்கீட்டில், 500 இடங்களில், 385 இடங்கள் நிரம்பின. 

கை'க்கு எட்டாத சிறப்பு கல்வி ஊக்கத்தொகை இரண்டு ஆண்டாக மாணவர்கள் தவிப்பு

 அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகை கிடைக்காமல், இரண்டு ஆண்டாக லட்சக்கணக்கான மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

வருமான வரி கட்டாத கல்வித்துறை: நோட்டீசால் ஆசிரியர்கள் அலறல்

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டும், வருமான வரித் துறையில் இருந்து, 'நோட்டீஸ்' வந்ததால், ஆசிரியர்கள் பீதி அடைந்து உள்ளனர். கல்வித் துறையின் நிர்வாக பிரச்னையால், இந்தக் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

பி.எஸ்சி. நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்படுகிறது

பி.எஸ்சி.நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர விண்ணப்பம் நாளை(திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.

இரண்டு டிப்ளமோ படிப்புகளுக்கு பல் மருத்துவ கவுன்சில் அனுமதி

பல் மருத்துவ, 'டிப்ளமோ' படிப்புகள் இரண்டுக்கு, இந்திய பல் மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

பி.எட்., - எம்.எட்., படிப்பை நடத்த புதிய கட்டுப்பாடு

பி.எட்., கல்லுாரிகளில், இரண்டு ஆண்டுக்கான நடைமுறை வந்தால், பேராசிரியர் எண்ணிக்கையை, 16 ஆக அதிகரிக்க வேண்டும் என, கல்லுாரி முதல்வர்களுக்கு, கல்வியியல் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.

நல்லாசிரியர் விருது பெற இனி யோகா பயிற்சி அவசியம்

அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, ஆசிரியர்களின் யோகா பயிற்சி மதிப்பெண்ணும் கணக்கிடப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் உட்பட தகுதியான ஆசிரியர்கள், ஆகஸ்ட், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களை கலைக்க முடிவு?

தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 10க்கும் மேற்பட்டவை காலியாக இருந்தும், அவை நிரப்பப்படாமல் இருப்பதால், அப்பணியிடங்களை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் பரவியுள்ளது.

கருணை அடிப்படையில் திருமணமான மகளுக்கும் வேலை தரும் வகையில் அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் இறந்துவிட்டால், கருணை அடிப்படையில் அவருக்கு ஆண் வாரிசு இல்லாவிட்டால், திருமணமான மகளுக்கும் வேலை தரவேண்டும். எனவே, இதற்கான அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.