'குரூப் - 2 ஏ' தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 2 ஏ' தேர்வு எழுதியோருக்கு, வரும், 16ம் தேதி முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஜி., 2ம் கட்ட கவுன்சிலிங் காலியிட விபரம் வெளியீடு

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்போருக்காக, கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

'தமிழக நுழைவு தேர்வுக்கு 'ஸ்காலர்ஷிப்' கிடையாது'

தமிழகத்தில், முதுநிலை இன்ஜி., படிப்பவர் களில், 'கேட்' தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், மத்திய அரசின் கல்வி உதவி தொகையை வழங்க, ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் அளித்துள்ளது.

13.7.18

உயர்கல்வி கமிஷன் சட்டம் கருத்து கூற அவகாசம் நீட்டிப்பு

புதிய உயர்கல்வி கமிஷன் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க, வரும், 20ம் தேதி வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2 மாதத்தில் இலவச 'வைபை'

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இரண்டு மாதங்களில், இலவச இணையதள, 'வைபை' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வேலைவாய்ப்புக்கு பள்ளியில் பதிய வசதி

'பிளஸ் 2 மாணவர்கள்,தங்கள் கல்வித்தகுதியை, தாங்கள் படித்தபள்ளிகள் வழியே, வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம்' என,வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர்,ஜோதி நிர்மலாசாமிதெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவ படிப்புக்கு 24ல் கவுன்சிலிங் துவக்கம்

கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை, 24 முதல் 26ம் தேதி வரை, நடைபெற உள்ளது.
தமிழகத்தில், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புக்கு, நான்கு அரசு மருத்துவ கல்லுாரிகளில்,

'நீட்' தேர்வு விவகாரம்; 'அப்பீல்' செய்ய முடிவு

மருத்துவ மாணவர்களுக்கான, 'நீட்' தேர்வு தொடர்பாக, சென்னை உயர் 
நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்திய 
இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
 தொடரப்போவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிராமத்தினரே நடத்தும் பள்ளி; 25 குழந்தைகள்... ஒரே ஆசிரியர்!

 சிவகங்கை அருகே ஒக்குப்பட்டி ஊராட்சி வி.புதுப்பட்டியில்தன்னார்வ நிறுவனம் கைவிட்ட பள்ளியை கிராமத்தினரே நடத்துகின்றனர். இங்கு5 வகுப்புகள், 25 குழந்தைகள் படிக்கின்றனர். ஒரே ஆசிரியர் விடுப்பு எடுக்காமல் பணிபுரிகிறார்.

கம்ப்யூட்டர்களுடன் 'போராட்டம்' : பழுதால் கதறும் ஆசிரியர்கள்

அரசுப்பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதர பழசான கம்ப்யூட்டர்களால் கற்பித்தல் பணி போராட்டமாக இருப்பதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

அரசுப் பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஜெர்மன் வாகனங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்காக ஜெர்மன் நாட்டிலிருந்து 1000 வாகனங்கள் பெறப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என பள்ளிக்

தனியார் பள்ளிகளை நிர்வகிக்கும் விவகாரம்: கல்வித் துறை அரசாணையில் திருத்தம் செய்ய உத்தரவு

தனியார் பள்ளிகளை நிர்வகிக்கும் வகையில், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் உள்ள குறைபாடுகளை திருத்தி வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்ஜினீயரிங் கலந்தாய்வு பற்றி 13-ந்தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையில் 3 விதமான சிறப்பு கலந்தாய்வும் நிறைவு பெற்றுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான

'ஜியோ' கல்வி மையத்துக்கு சிறப்பு அந்தஸ்து ஏன்?

துவக்கப்படாத, ஜியோ இன்ஸ்டிடியூட்டிற்கு, 'மேன்மை பொருந்திய கல்வி மையம்' என்ற அந்தஸ்து வழங்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நிபந்தனை அடிப்படையில்

10.7.18

2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் இருக்காது: சி.பி.எஸ்.இ.,

 இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவு சுற்றறிக்கையாக அனுப்பப்படும் என சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு: கருணை மதிப்பெண் வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

நீட் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண் வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மாணவர் சேர்க்கை குறைந்ததால் அரசு முடிவு பட்டதாரிகளும் ஆசிரியர் பயிற்சியில் சேர அனுமதி 17–ந்தேதி கடைசி நாள்

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர சமீப காலமாக மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை.

பள்ளிக்கல்வி இயக்குனர்களின் பொறுப்பு மாற்றம் : தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு அதிகாரம் குவிப்பு

தமிழக அரசின் புதிய சட்டப்படி, இயக்குனர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன. மெட்ரிக் பள்ளி இயக்குனர், தனியார் பள்ளி இயக்குனர் என, பெயர் மாற்றப்பட்டு, கூடுதல் அதிகாரங்கள்

8.7.18

ஆறு ஆண்டுகளாக முடங்கிய கணினி வழி தேர்வை, மீண்டும் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முயற்சி

ஆறு ஆண்டுகளாக முடங்கிய கணினி வழி தேர்வை, மீண்டும் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முயற்சி எடுத்துள்ளது.முதற்கட்டமாக, குறைவான நபர்கள் எழுதும் தேர்வை மட்டும், சோதனை ரீதியாக, கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, மாணவர் சேர்க்கைக்கு செப்., வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, மாணவர் சேர்க்கைக்கு செப்., வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

கல்வித்துறையில் அதிகாரம் யாருக்கு தலைமை ஆசிரியர்கள் போர்க்கொடி

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

'டியூஷன் சென்டர்'களுக்கு அங்கீகாரம் கட்டாயமாக்க வருகிறது புதிய சட்டம்

சிறப்பு பயிற்சி அளிக்கும், 'டியூஷன் சென்டர்'கள் மற்றும், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுக்கான பயிற்சி தரும் மையங்கள், பள்ளி கல்வித் துறையின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகிறது. இதற்கான சட்டம், விரைவில் அறிமுகமாகிறது.