மாவட்டமாறுதல்
கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படாததால் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும்
பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தி;
2004
முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தொடக்கக் கல்வித்துறையில் 6,7,8
வகுப்புக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பெண் ஆசிரியர்கள்.
இவர்கள் தங்கள் சொந்தமாவட்டத்தை விட்டும், தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளை
பிரிந்து தாங்கள் நியமனம் செய்யப்பட்ட பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஒவ்வொரு
வருடமும் மாவட்டமாறுதல் கலந்தாய்வின் போது இவர்கள் தங்கள் சொந்தமாவட்டத்திற்கு
பணிமாறுதல் பெற்று செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது.
சென்ற
ஆண்டு கலந்தாய்வின்போது தொடக்கக்கல்வித் துறையில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பதவிஉயர்வுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
பணியிடமாறுதலுக்கு அனுமதிக்கப்படவில்லை இதனால் பல பட்டதாரி ஆசிரியர்கள்
ஏமாற்றத்திற்கு உள்ளாயினர்.
சென்ற
ஆண்டு அவ்விடங்களுக்கு இரண்டு முறை பதவி உயர்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது
அறிவிக்கப்பட்டுள்ள கலந்தாய்வு அட்டவணையில் பள்ளிகல்வித்துறையில் பணிபுரியும்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடக்கக்
கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு
தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால்
தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டமாறுதல் கலந்தாய்வு
தேதி அறிவிக்கப்படவில்லை.
இதனால்
இவ்வாண்டும் அவர்கள் தங்கள் குடும்பம், குழந்தைகளை பிரிந்து பணிபுரியும் சூழ்நிலை
உருவாகியுள்ளது
சென்ற
ஆண்டு பணியிடங்கள் மாறுதலுக்கு அனுமதிக்கப்படாததாலும், இவ்வாண்டு கலந்தாய்வு
அட்டவணையில் மாவட்ட மாறுதல் தேதி அறிவிக்கப்படாததாலும் தொடக்கக் கல்வித்துறையில்
பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக