14.9.13

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களில் வழக்கு தொடுத்தவர்களுக்கு பணப்பலன்

வழக்கு தொடுத்த 1,528 ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர்களுக்கு மட்டுமே பணப்பலன் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


1988 ஜூன் 1க்கு முன், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, இடை நிலைஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து, தலைமை ஆசிரியர் பதவியில், தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கப்பட்டது. ஆனால், 1988 ஜூன் 1க்கு, பிறகு, 1995 டிச., 31 வரை, பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் புதிதாக 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2 பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள் துவக்கம் .

தமிழகத்தில் புதிதாக  12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2 பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளை, முதல்வர் ஜெயலலிதா நேற்று, "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், துவக்கி வைத்தார்.

பள்ளி கல்வித்துறைக்கு, கூடுதல் பொறுப்பேற்றுள்ள, அமைச்சர் பழனியப்பன், துறை செயல்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை .

பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த வைகை செல்வன், கடந்த, 5ம் தேதி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த துறை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பனிடம், கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து, பழனியப்பன், முதல் முறையாக, அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்

மாநில கணக்காயரால் நிர்வாகிக்கப்படும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குதாட்கள் விவரம் கருவூலத்தில் பெற்றுக்கொள்ளலாம்

2011-12 ஆம் ஆண்டிற்கான அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்த சந்தாஅரசு பங்களிப்பு அடங்கிய கணக்குத்தாட்கள் விவரம் சம்பந்தப்பட்ட அரசு சார் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

ஏமாற்றாமல் இருந்தால் சரி! -நாளிதழ் செய்தி

மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கடும் அமளிக்கு இடையிலும், மிகக் குறைவான எதிர்ப்புகளுடன், "ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா-2011' நிறைவேற்றப்பட்டுள்ளது.  இனி ஓய்வூதிய நிதிகள் தொடர்பான அனைத்துப் பணிகளையும் இந்த ஆணையம் மேற்கொள்ளும்.

வாக்காளர் பட்டியல் திருத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, ஓட்டுச்சாவடி மைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அக்.,1ல் சட்டசபை தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அன்று முதல் அக்.,31 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.

PFRDA- விடம் RTI மூலம் கோரப்பட்ட கேள்விகளுக்கு PFRDA -வின் பதில்கள்

CLICK HERE- RTI LETTER -PFRDA ANSWER REGARDING CPS

> இதனால் வரை தமிழக அரசிடம் CPS குறித்து எந்த ஒரு புள்ளி விவரமும் இல்லை 

>ஊழியரின் தொகை  + அரசின் பங்களிப்பு தொகை PFRDA விடம் இல்லை 

>
இதனால் வரை குறைந்த பட்ச மற்றும் அதிக பட்ச ஓய்வூதியம் இது வரை PFRDA வரன் முறை செய்ய வில்லை 

>
இறந்த போனவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் விவரம் இல்லை 

11.9.13

3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை காரணமாக நாளை (12.9.13) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை நடக்க உள்ள காலாண்டு தேர்வு, கடைசி தேர்வுக்கு பின் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு

பத்தாம் வகுப்பு, இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவு, நாளை வெளியிடப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் பலர், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதில் முதல் கட்டமாக, குறிப்பிட்ட மாணவர்களுக்கு, ஏற்கனவே மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவுகள், நாளை காலை, 10:30 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.