19.7.14

முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனம் இருக்க வேண்டும்; பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை

தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் .சபீதா உத்தரவுபடிபள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனைத்துபள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி
உள்ளார்அதில் கூறியிருப்பதாவது:-

மழை விட்டாலும் தூறல் விடவில்லை ,TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு சோகம் மீண்டும் தொடரப்போகிறதா ??

T.N.T.E.T   தேர்வு சம்பந்தமாக அனைத்து வழக்குகளும் முடிவடைந்து ஆசிரியர்கள் பணிநியமான ஓரிரு வாரங்களில் நியமனம் செய்யப்படலாம் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?

ஜூலை இறுதி என்றாலே "சீக்கிரம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்கிற விழிப்பு அனைவரிடமும் இருக்கும். அதற்கென இருக்கும் படிவத்தை முழுதும் நிரப்புவது பெரும்பாடு தான்!!

தமிழக பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி: முதல்வர் ஜெயலலிதா

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்குக் கராத்தே பயிற்சி அளிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பி.எட்., படிப்பு ஓராண்டு தான் உயர்கல்வி அமைச்சர் தகவல்.

தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம் ஓராண்டுதான்; மாற்றமில்லை,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.சட்டசபையில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானிய கோரிக்கை விவாதம்:

கவுன்சலிங் குழப்பத்திற்கு தீர்வு: நீதி கேட்டு ஐகோர்ட் படியேறிய ஆசிரியைக்கு இடமாறுதல்

மதுரையை சேர்ந்த ஆசிரியை சங்கீதா ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:சிவகங்கை மாவட்டம், புழுதிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.

தமிழக பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்; அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.

புலம்பும் தலைமையாசிரியர்கள்

குறு வட்ட, மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் துவங்குவதற்கு முன், விளையாட்டுக்கான நிதியை வழங்காததால், அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.

17.7.14

TNGTF வெள்ளகோவில் ஒன்றிய கூட்டம் இன்று (17,7,14) நடைபெற்றது

12.7.14 ல் நடைபெற்ற மாநில செயற்குழு தீர்மானங்களை கூட்டத்தில் விளக்கும்  வெள்ளகோவில் ஒன்றிய பொறுப்பாளர்கள்
                                 கூட்டத்தில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள்

நடப்பாண்டில் நிரப்பப்படும் ஆசிரியர் பணியிடங்கள் அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்

நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றுஅமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.

புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்- அமைச்சர் வீரமணி தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரிஆசிரியர்கள் பற்றிய  அறிவிக்கை சில நாட்களுக்கு முன்புவெளிடப்பட்டது... இதேப்போல் இடைநிலை ஆசிரியர் அறிவிக்கைசில தினங்களில் வெளியிடப்பட்டு விரைவில்  புதியஆசியர்களுக்கான

11 ஆயிரம் புதிய ஆசிரியர்கள்ஆகஸ்ட்டில் பணி நியமனம்

சென்னை: புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட் மாதத்தில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.இதுவரை நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகள் மூலம், மதிப்பெண் அடிப்படையில், 10,700 பட்டதாரி

சிறந்த பள்ளிகளுக்கு ரூ.80 லட்சம் பரிசு: அரசு நிதி ஒதுக்கீடு

கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, சிறந்த பள்ளிகளுக்கு பரிசாக, ரூ.80 லட்சம் வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவதை யொட்டி, சிறந்த அரசு

இனி கெசட்டட் ஆபீசர் கையொப்பம் தேவையில்லை - சுய சான்றொப்பமே போதுமானது.

அரசுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களிலும் அரசு பதிவு பெற்ற கெசட்டட் ஆபிசர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் கையொப்பம்(அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது. இது மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும் சிரமமாக இருந்தது.

15.7.14

TNTET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம்பேரின் நிலை என்ன? - அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது என தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் மொத்தம் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 11ஆயிரம் பேர் ஜூலை
இறுதியில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முதுகலை ஆசிரியர் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்று தெரிவித்தது.

நவம்பரில் அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

மாணவர்களே வராத அரசுப் பள்ளி மூடல்: இடமாற்றமான தலைமையாசிரியருக்கு எதிர்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஒரு மாணவர்கள் கூட சேராத அரசு பள்ளியில் பணியாற்றி வந்த தலைமையாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு, வேறு பள்ளியில் சேர சென்றபோது அவரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டதாரி ஆசிரியர் மதிப்பெண் வெளியீடு: 30ம் தேதி 11 ஆயிரம் பேர் இறுதி பட்டியல்

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின், இறுதி மதிப்பெண் விவரம், டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதையடுத்து, 30ம் தேதி வெளியாகும் இறுதி பட்டியலில், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த, 10,726 பேரின் பெயர் வெளியாகும்.

14.7.14

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு: முரண்பாடுகளை நீக்க கோரிக்கை

By திண்டுக்கல்

First Published : 13 July 2014 12:06 AM IST
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை | 2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு

அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவுமூப்பை தக்க வைத்துக் கொள்ளவும், அதன்மூலம் வேலை வாய்ப்பை பெறவும் உதவும் வகையில் முதல்வர் உத்தரவின் படி, 2014-15-ம் ஆண்டில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படுகிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ப.மோகன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயருகிறது

புதுடெல்லிஜூலை 14–
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும்ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 7

10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.

புதிய ஆசிரியர்கள் நியமனம்:10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு.காலிப்பணியிட விவரங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்.

அனுமதி பெறாமல் படிப்பு:முதுகலை ஆசிரியர்களுக்கு சிக்கல்

கல்வித் துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமல், எம்.பில்., படிக்கும், முதுகலை ஆசிரியர்கள் குறித்த, பெயர் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல்

TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB
மனுதாக்கல் செய்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வு மாநாடு: நாடு முழுவதும் லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

பள்ளி செல்லும் மாணவர்கள் பங்கேற்கும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு நிகழ்வுகள் தற்போது தொடங்கியுள்ளன. கடந்த 1993-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த மாநாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

கேரளத்தில் 742 ஒப்பந்த தமிழ் ஆசிரியர்கள் பணி நீக்கம்

கேரள மாநிலத்தில் பணிபுரிந்து வந்த 742 ஒப்பந்த தமிழ் ஆசிரியர்களை அம்மாநில அரசு திடீரென பணி நீக்கம் செய்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேறாத ஆசிரியர்களுக்கு 'கெடு!': அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 'பாஸ்' ஆக வேண்டும்

கடந்த, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற விதிக்கப்பட்ட, 5 ஆண்டு காலக்கெடு, அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.

ஜூலை 23-இல் ஏழாவது ஊதியக் குழுக் கூட்டம்

மத்திய அரசு ஊழியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஏழாவது ஊதியக் குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில் வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நீதிபதி அசோக் குமார் தலைமையில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது. குழுவின் உறுப்பினர்கள் விவேக் ரே, ரதின் ராய், மீனா அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் - TNGTF பொதுச்செயலாளர்

2004 ம் ஆண்டு முதல் தொடக்க கல்வித்துறையில்  பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க படுகின்றனர். அவர்களுக்கு எவ்வித பதவி உயர்வுக்கான ஆணையை அரசு வெளியிடவில்லை. இதனால் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு அடையமுடியாமல் மணம் வருந்தி கொண்டு இருக்கிறார்கள்.

நேற்று (12.07.14 ) நமது மாநில செயற்குழுவில் மாநில , மாவட்ட பொறுப்பாளர்களால் வலியுறுத்தப்பட்ட செய்திகள்

* தொடக்க கல்வித்துறையில் 2004 முதல் பட்டதாரி ஆசிரியர்கள் 
 நியமிக்க பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு முதுகலை 
 பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

* 2004 - 2006 வரையான பணிக்காலத்தை பணிக்காலமாக 

 அறிவிக்க வேண்டும்