21.3.15

அரசுப் பள்ளிகளிலும் மே மாதமே பாடங்கள் நடத்த உத்தரவு: மாணவர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி

தனியார் பள்ளிக்ளைப் போல அரசுப் பள்ளிகளிலும் முன்கூட்டியே பாடங்களை நடத்தகல்வி அதிகாரிகள் வற்புறுத்துவதால் மாணவர்கள் அதிர்ச்சி

கண்காணிப்பு பணி ஆசிரியர்களுக்கு தேர்வுதுறை கடும் எச்சரிக்கை: மையங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது

வாட்ஸ்-அப்பில் வினாத்தாள் அனுப்பிய விவகாரம் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரும் ஏப்ரல் 19 ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் - ஜக்டோ உயர்மட்டகுழு முடிவு

இன்று காலை சென்னையில் ஜக்டோ உயர்மட்டகுழு கூடியது. இதில்  நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு உட்பட ஜக்டோவில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்கங்களின் உயர்மட்டகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் ஏப்ரல் 19 ம்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று 21.3.15 காலை சென்னையில் ஜக்டோ உயர் மட்டகுழு கூட்டம் தொடங்கியது

 கூட்டத்தில் நமது TNGTF மாநில தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் கலந்து கொண்டு உள்ளனர்


குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 346 பேருக்கு இன்று கலந்தாய்வு

பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவியாளர்

அங்கன்வாடி ஊழியர் தேர்வுக்கான தடை நீங்கியது: 3,000 இடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவு

அங்கன்வாடி ஊழியர் பணிக்கான, 17 ஆயிரம் காலியிடங்களை நிரப்பவிதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. 3,000 இடங்களை, காலியாக வைத்திருக்க, உயர் நீதிமன்றம்

வாட்ஸ் அப்' மூலம் பிளஸ் 2 கேள்வித்தாள் அனுப்பிய சம்பவம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 4 பேர் கைது

தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள, தின்னுார், பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 18ம் தேதி காலை, கணிதத் தேர்வு நடந்தது.

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 14 and 2014 - 15


Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15
PHYSICAL DIRECTOR EXAMINATION RESULTS AND SUPPLEMENTARY PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST

Dated: 20-03-2015

Member Secretary

அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க நாளை ஜக்டோ உயர்மட்ட குழு கூட்டம் சென்னையில் கூடுகிறது :

அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க நாளை ஜக்டோ உயர்மட்ட குழு கூட்டம் சென்னையில் கூடுகிறது. நமது மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

652 கணினி ஆசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட்டு இறுதித்தீர்ப்பை பொறுத்தே இருக்கும் நீதிபதி உத்தரவு.

652 கணினி ஆசிரியர்கள் நியமனம் ஐகோர்ட்டு இறுதித்தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப் மூலம் கேள்வித்தாள் அவுட்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள பரிமளம் மெட்ரிக் பள்ளியில் கடந்த 18ம் தேதி பிளஸ்2 கணித தேர்வு நடந்தது. இதில்

தாமதமாக தொடங்கிய பிளஸ்-2 தேர்வு: தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பெற்றோர்கள் மனு:தினத்தந்தி

வளவனூர் அரசு பள்ளி யில் பிளஸ்-2 தேர்வு தாமதமாக தொடங்க காரணமாக இருந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்களின் பெற் றோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பத்திரிகை விளம்பரம் மூலம் அரசுப் பணிகளுக்கு அழைப்பு; தமிழக அரசு முடிவு

 அரசுப் பணிகளுக்கு பத்திரிகை விளம்பரம் மூலமாகவும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தமிழ் ஆரம்பமே மகிழ்ச்சி : மாணவர்கள் உற்சாகம்

 "பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததால் அதிக மதிப்பெண் பெறுவது உறுதி" என மாணவர்கள் உற்சாகமாக தெரிவித்தனர்.

சி.பி.எஸ்.சி. நடத்திய 12–ம் வகுப்பு கணித கேள்வித்தாள் கடினம் என புகார் கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவு?

மத்திய பள்ளி கல்வி வாரியம் சி.பி.எஸ்.சி., 12–வது வகுப்பு கணித தேர்வு, நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தப்

கேள்விக்கு விடை கேள்வி:தமிழ் தேர்வில் 'சுவாரஸ்யம்'

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில் நான்கு மதிப்பெண் கேள்விக்கான விடை, அடுத்த கேள்வியாக அமைந்திருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பிளஸ்–2 கணித பாட தேர்வில் வினா ஏற்படுத்திய குழப்பம் அரசு தேர்வுகள் இயக்குனர் விளக்கம்

பிளஸ்–2 கணித தேர்வில் வினா ஏற்படுத்திய குழப்பத்துக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார்.

வலுக்கிறது ஆசிரியர் போராட்டம்

அதிரடி இது ‘ஜாக்டோ’ ஜல்லிக்கட்டு
அறியாமை என்ற இருளை நீக்கி வாழ்வில் ஒளியேற்றும் ஆசிரியர்களை வீதிக்குக்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது தமிழக அரசு!

விரிவுரையாளர் பணி நியமனத்தில் மத்திய அரசின் விதிமுறை செல்லும்: சுப்ரீம் கோர்ட்

பல்கலைக்கழகம், கல்லூரி, கல்வி மையம் ஆகியவற்றில், விரிவுரையாளர் பணியில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதியாக, நெட்/ஸ்லெட் தேர்வு, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பிஎச்.டி.,

பிளஸ் 2 கணிதத்தேர்வு வினாத்தாளில் குழப்பம்: 'சென்டம்' குறைய வாய்ப்பு

பிளஸ் 2 கணிதத் தேர்வு கேள்வித்தாள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு,'ஈசி'யாகவும், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு, கடினமாகவும் இருந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட, கணிதத்தில், 'சென்டம்' வாங்குவோரின் எண்ணிக்கை குறையும் என கல்வித் துறையினர் அச்சம் அடைந்துள்ளனர்.

கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பைரத்து செய்யக்கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளைஉத்தரவிட்டது.திருநெல்வேலி உமா, உசிலம்பட்டி பாண்டியராஜன் உட்பட 152 பேர் தாக்கல் செய்த மனு: 

பயிற்சி நாட்களில் ஆசிரியர்களுக்கு விடுப்பு: அரசாணை வெளியீடு - தினமலர்

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் பயிற்சி நாட்களுக்கு, விடுமுறை அளிப்பது தொடர்பான குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்திலேயே புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2015-16) பிளஸ் 2புத்தகங்களை ஏப்ரல் முதல் வாரத்திலேயே விநியோகிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

PGTRB: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,700-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது.இந்தத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிட்டது. 

10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்: 10.72 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3,298 மையங்களில் இன்று 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், 11,827 பள்ளிகளைச் சேர்ந்த, 5,40,505 மாணவர்; 5,32,186 மாணவியர் என, மொத்தம், 10,72,691 பேர் தேர்வு எழுதுகின்றனர்; 50,429 தனித்தேர்வர்களும் பதிவு செய்துள்ளனர்.
பறக்கும் படை:

STFI - மேற்கு வங்க ஆசிரியர்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

இடம்: மாவட்டத் தலைநகரங்கள்

நாள் 20.03.2015, வெள்ளிக் கிழமை நேரம் மாலை:-5.00 மணி

அன்புடையீர்!

 வணக்கம். 

மேற்கு வங்கத்தில் கடந்த 14.05.2011 அன்று சட்டமன்றத் தேர்தல்கள் முடிவுகள் வெளியான நாளில் இருந்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் பல்லாயிரக் கணக்கான ஆசிரியர்கள்,

குரூப் 1 அலுவலர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

காத்திருப்போர் பட்டியல் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தர விட்டது.மதுரை வழக்கறிஞர் கண்ணன் தாக்கல் செய்த மனு: 

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 19) தொடங்க உள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை 11,827 பள்ளிகளிலிருந்து 10.72 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3,298 தேர்வு மையங்கள்

குரூப் 2: மார்ச் 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்ப நடந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது.இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்

ஓட்டை, உடைசல் பள்ளிகள் கணக்கெடுப்பு?

பல்வேறு அரசு பள்ளிகளின் கட்டட விபத்துகளை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், ஓட்டை, உடைசலாக, பராமரிப்பின்றி இருக்கும் அரசு பள்ளி கட்டடங்களை கணக்கெடுக்க, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் தேர்வான உதவியாளர்களுக்கு 21ம் தேதி கவுன்சலிங்

கடந்த 2013-14ம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் ஏற்பட்ட உதவியாளர்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது

ரூ. 5 ஆயிரம் கோடி எங்கே போச்சு :புதிய பென்ஷன் திட்டத்தில் 'பகீர்'


“தமிழகத்தில் கடந்த, 2003ம் ஆண்டுக்கு பின், இரண்டு லட்சம் பேரிடம், புதியபென்ஷன் திட்டத்திற்காக, பிடித்தம் செய்த, 5,000 கோடி ரூபாய்க்கு, என்ன கணக்கு உள்ளது என்பதே தெரிவில்லை,” என்று ஆசிரியர் சங்க பிரதிநிதி , திருச்சியில் தெரிவித்தார்.

STFI - மேற்கு வங்க மாநில ஆசிரியர்கள் மீது தாக்குதலை கண்டித்து தமிழ்நாட்டில் மார்ச்.20 ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்க மாநில ஆசிரியர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதற்குகண்டனம் தெரிவித்து, மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இது குறித்து மேலும் இன்று(செவ்வாய்க்கிழமை), மாவட்ட எஸ்.டி.எப்.ஐ. அமைப்பாளர் சே.முத்து முருகன் தெரிவித்தது: 

CRC பயிற்சி வகுப்புக்கு ஈடுசெய் தற்செயல் விடுப்பு ஆணை பெற்று தந்த TNGTF மாநில பொறுப்பாளர்களுக்கு நன்றி

CRC பயிற்சி நாட்களுக்கு  பள்ளிக்கல்விதுறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஈடுசெய் தற்செயல் விடுப்பும் தொடக்ககல்வித் துறை

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு: மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு தர மத்திய, மாநில அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 4-ம்தேதி நாக்பூரில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவை ஊழியர்கள் சங்கங்கள் எடுத்துள்ளன.

G.o.62; ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல் / ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் திருத்தம் செய்து ஆணை வெளியீடு.

நாம் நேற்று கூறியபடி இன்று      பள்ளிக்கல்வி - ஊராட்சி / அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல் / ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் திருத்தம் செய்து ஆணை வெளியீடு.

GO.62 SCL EDN DEPT DATED.13.03.2015 - SPECIAL CL FOR PRIMARY & MIDDLE SCHOOL TEACHERS REG ORDER CLICK HERE..

மாநில அடைவுத்திறனுக்கான ரெமுனரேஷன்....

மாவட்ட அலுவலகங்களுக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தது மாநில அடைவுத்திறனுக்கான ரெமுனரேஷன்...

பார்வையற்ற பட்டதாரி மாணவர்கள் சமூக நலத் துறை அமைச்சருடன் மீண்டும் சந்திப்பு

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற பட்டதாரி மாணவர்கள்.


பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி தொடங்கியது மதிப்பீடு செய்வதில் தவறு ஏற்பட்டால் ஆசிரியரே பொறுப்பு என்று அறிவிப்பு

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி நேற்று தொடங்கியது. மதிப்பீடு செய்வதில்தவறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியரே பொறுப்பு ஏற்கவேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

டிப்ளமோ, பொறியியல் படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக் கூடாது: யுஜிசி

பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளையோ அல்லது டிப்ளமோ படிப்புகளையோ தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது.

அரசு ஆதரவு ஆசிரியர் கூட்டுக்குழு உடைந்தது: அதிகாரிகள் அதிர்ச்சி

ஆசிரியர்களின், 'ஜாக்டா ' மற்றும் 'ஜாக்டோ' அமைப்புக்கு போட்டியாக, அரசுக்கு ஆதரவாக உருவான, 'ஜாக்கோட்டா' அமைப்பில் திடீர் விரிசல் ஏற்பட்டு உள்ளது. 'ஜாக்கோட்டா' அமைப்புக்கு எதிராக, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை, முதல்வருக்குபுகார் அனுப்பியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பின்...:

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி வழக்கு

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரும் மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

16.3.15

CRC -சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை நாளை வெளியாகிறது

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சிக்கான ஈடுசெய் விடுப்பிற்கான அரசாணை விவரம் நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- TNGTF.

ஆசிரியர்களிடம் கட்டாய வசூல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 'ஆன்-லைனில்' ஆசிரியர் ஊதிய விபரங்களை பதிவு செய்ய கல்வித்துறை அதிகாரிகள் கட்டாய வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே முதன்மை கண்காணிப்பாளர்கள்: கல்வித்துறை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர் என கல்வித்துறை

பொதுத்தேர்வுப் பணியில் ஈடுபட உள்ள 2,720 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணியில் ஈடுபட உள்ள 2,720 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை சி.இ.ஓ., வழங்கினார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 19ம் தேதி துவங்குகிறது. 

4 ஆண்டுகள் ஆகியும் நடைமுறைக்கு வராத ஸ்மார்ட் கார்டு திட்டம்: ஆசிரியர்கள் அதிருப்தி

பள்ளி கல்வித்துறையால், மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட, ஸ்மார்ட் கார்டு திட்டம் நான்கு ஆண்டுகள் ஆகியும் நடைமுறைக்கு வரவில்லை. இத்திட்டத்திற்காக,பல்வேறு

முதன்முறையாக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு திறனாய்வு தேர்வு

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் முதன்முறையாக ஆசிரியர்களுக்கான திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. சென்னை

போட்டி தேர்வு நடத்தப்படும் சிறப்பாசிரியர் தேர்வில் மாற்றம் இல்லை : டிஆர்பி அறிவிப்பு

ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களில்ஆசிரியர்களை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வில் எழுத்து தேர்வில் 95 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (மார்ச் 16)தொடங்கப்பட உள்ளன.இதற்காக தமிழகம் முழுவதும் 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள்

ஒரே நேரத்தில் இரு படிப்பு; ஆசிரியர் பணி தர மறுப்பு பள்ளிகல்வித்துறை இயக்குநர் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

ஒரே நேரத் தில் இரு படிப்பு படித்ததாக கூறி ஆசிரியர் பணிமறுக்கப்பட்டவரின் மனுவை பரிசீலிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை, விளாங்குடியை சேர்ந்த எஸ்.தேன்மொழி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல்செய்த மனு:

'பேப்பர் சேசிங்' தில்லுமுல்லு இனி நடக்காது!:புதிய கட்டுப்பாடுகள் மூலம் தேர்வுத்துறை அதிரடி

இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில், பல புதுமைகள் புகுத்தப்படுகின்றன. விடைத்தாள் களை, 'சேஸ்' செய்வதைத் தடுக்க, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, நாளை துவங்குகிறது.

சத்துணவு மையங்களை மூடி போராட்டம் நடத்த முடிவு:

:''தமிழக அரசின் ஏமாற்று போக்கை கண்டித்து, வரும் ஏப்., 15ம் தேதி முதல், காலவரையின்றி, அனைத்து சத்துணவு மையங்களையும் மூடி போராட்டம் நடத்தப்படும்,''என, தமிழ்நாடுசத்துணவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: 

10லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவு 1 மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

குரூப்-4 தேர்வு முடிவு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த டிசம்பர் மாதம் 21-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

SSLC HALL TICKET PUBLISHED INDIVIDUAL SCHOOL LOGIN IN TNDGE WEBSITE

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்www.tndge.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.