லேபிள்கள்

23.4.13


அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வரும் கல்வியாண்டில் நிரப்பப்படுமா?

அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம் உள்ளது. வரும் கல்வியாண்டிலாவது இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத் தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் என மொத்தம் 52 உள்ளன. இப்பள்ளிகளில், முக்கிய பாடங் களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், அந்தந்த பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கம் உதவியுடன் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்

இதுபோன்று நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பெரும்பாலும், இளங்கலை பட்ட படிப்பு முடித்து, முன் அனுபவம் இல்லாத ஆசிரியர்களாக உள்ளனர். இதனால், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கல்வித்துறை அதிகாரிகளும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனாலும், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத நிலை உள்ளது

அரசு பள்ளிகளில், மேல்நிலை பிரிவுக்கு கணிதம், இயற்பியல், வணிக கணிதம், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. பொதுத்தேர்வின் போது, தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது

கடந்தாண்டில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சரிந்தது. நடப்பாண்டிலும், இதே நிலை நீடிக்கும் அபாயம் உள்ளது. வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன், முக்கிய பாடங்களுக்கு அனுபவம் மிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் கூறுகையில், "ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்று சென்றதாலும், பணி ஓய்வு பெற்றதாலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு முன் புதிய ஆசிரியர்கள் நியமிக்கும் வாய்ப்புள்ளது

பொதுத்தேர்வின் போது, பள்ளிகளில் தற்போது இருக்கும் அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டும் பாடம் நடத்தப்பட்டுள்ளதால், தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் இருக்காது" என்றார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களின் பணி சார்ந்த விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ..எண். 34351/1/4/2013, நாள். 19.04.2013-ன் படி தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் தொடக்கக் கல்வி இயக்குனரின் ஆளுகையின் கீழ் பணிபுரியும்  மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும்
அலுவலர்களின் பணிச்சார்ந்த விவர அறிக்கையினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து பள்ளிக்கல்வி இயக்குனரின் மின் அஞ்சல் முகவரிக்கு 22.04.2013 அன்று மாலைக்குள் அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன்?
புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் இதுவரை விவாதிக்காதது ஏன் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி..) தேசியக் குழு உறுப்பினர் .ஸ்டாலின் குணசேகரன் கேள்வி எழுப்பினார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு காளைமாட்டுச் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் பேசியது:புதிய ஓய்வூதியத் திட்டம் படிப்படியாக பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் அடிப்படையாகக் கொண்டது

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தில் 10 சதவீதத்தைப் பிடித்தம் செய்து அதற்கு இணையான தொகையை அரசு வழங்கி, இரண்டையும் ஒன்றாக்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதன் மூலமாக கிடைக்கும் தொகையில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.இத் திட்டத்தால் ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் என்று அதனைப் பெறும் பயனாளிகளே கணிக்க முடியாது. ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகை எங்கு செல்கிறது என்ற விவரம்கூட ஊதியதாரர்களுக்குத் தெரியாது.

 புதிய ஓய்வூதியத் திட்டத்தால் ஊழியர்கள் பெற்று வந்த சேம நலநிதி, வருங்கால வைப்பு நிதி, குடும்ப ஓய்வூதியம் போன்ற போராடிப் பெற்ற பல சட்ட உரிமைகள் பறிபோகின்றன.பழைய ஓய்வூதியத் திட்டப்படி ஓய்வூதியம் பெற்றுபவர்களுக்கு விலைவாசி ஏற்றத்தால் அகவிலைப்படி உயரும்போது ஓய்வூதியத் தொகையும் அதற்கேற்ப உயரும். புதிய திட்டத்தில் அப்படி இல்லை. 2004 ஜன.1-இல் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டம் இல்லை. மத்திய நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தபோது அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவருக்கு கிடைத்த அனுபவத்தைக் கொண்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினார்.

 நாடாளுமன்றத்தில் மசோதாவாக விவாதிக்காமலும், சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்யாமலும் இதை அறிவித்தார்.இவ்வளவு பெரிய கொள்கை மாற்றத்தை நாடாளுமன்ற விவாதமே இல்லாமல் நடைமுறைப்படுத்தியது இப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.திண்டுக்கல் எம்.எல்.. கே.பாலபாரதி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலப் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட், மாவட்டத் தலைவர் பி.லியோ உள்பட பலர் பங்கேற்றனர்.




15.03.2013 நிலவரப்படி உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியான இளநிலை உதவியாளர்கள்/ தட்டச்சர்களுக்கு பதவியுயர்வு கலந்தாய்வு 23.04.2013 அன்று அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.30 இணையதளம் வாயிலாக நடைபெற உள்ளது.


அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஆய்வுக் கூட்ட (16.04.2013) குறிப்புகள்
click here to download the SSA proceeding of OoSC Review Meeting Minutes

2012-13 மற்றும் 2013-14ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கு (GPF) முறையே 8.8% மும் 8.7% அறிவித்து அரசாணை வெளியீடு
click here to download the GO - PROVIDENT FUND - General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2012-2013 and 2013-2014 – Orders – Issued.

21.4.13

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து,


நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் ஆகியவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி


மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்
  
 



பட்டதாரிகளை சமாதானம் செய்ய கடந்த ஆட்சியின் இறுதியில், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யாமல் நிலுவையில் வைக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை தூசு தட்டி எடுத்து, இப்போது பணி நியமனம் வழங்க அரசு முடிவு - Dinakaran

மாணவர்களின் குழப்பங்களை தீர்க்க வேண்டிய ஆசிரியர்களே குழம்பிப்போய் இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள். ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பில் தொடங்கிய குழப்பம், விண்ணப்ப விற்பனை, தேர்வு முறை, ரிசல்ட் வெளியீடு, அதற்குப் பிறகு படிப்பு தகுதி என தீராமல் தொடர்ந்தது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த குளறுபடிகளால் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்வதற்கான தகுதித் தேர்வை நடத்தும் பொறுப்பு2011ல் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு(டிஆர்பி) அளிக்கப்பட்டது.
 
 மத்திய அரசின் என்சிஇஆர்டி நடத்தும் ஆசிரியர் தேர்வை அப்படியே காப்பி அடித்து, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதாக டிஆர்பி அறிவித்தது. அதேநேரத்தில் என்சிஆர்டியின் விதிகளை டிஆர்பி ஏற்கவில்லை. ஆனால் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவை, பட்டதாரிகளின் நலன் காக்கும் வகையில் மத்திய அரசின் சட்டத்தில் கூறப்பட்ட அம்சங்களை உள்ளடக்கி தகுதித் தேர்வுகளை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச்சில் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியானது. 18,343 பட்டதாரி ஆசிரிய பணியிடங்கள், 5451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து தொடங்கியது வரிசையாக குழப்பங்கள். விண்ணப்பம் விற்பதில் தொடங்கி தேர்வு முடிவுகளை வெளியிடுவது வரை பல்வேறு குழப்பம்.
 
தகுதித் தேர்வு எழுதுவோருக்கு உரிய தகுதிகளை வாரியம் வரையறுத்து கூறவில்லை. யாரும் தேர்வு எழுதலாம் என்று அறிவித்ததின் விளைவாக, பட்டம் படித்து, பி.எட் முடித்த சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பம் போட்டனர். அவர்களுக்கு தேர்வு மையங்களை ஒதுக்குவது, ஹால்டிக்கெட் அனுப்புவதில் பிரச்னைகள் எழுந்தன.தேர்வு முடிவில் சுமார் 1800 பட்டதாரிகளே தேர்ச்சி அடைந்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேள்வித்தாளில் இடம் பெற்ற பல கேள்விகள் பாடத்திட்டத்தில் இருந்து இடம் பெறவில்லை என்பதால் பல பட்டதாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கைவிசாரித்த நீதிமன்றம் மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம் பெறும் வகையில் கேள்வித்தாள் தயாரித்து, இரண்டாம்கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வை நடத்தினர்.
 
இரண்டாம் கட்ட தேர்வில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்றும் சுமார் 9,000 பேர்தான் தேர்ச்சி பெற்றனர். ஆனால் ஆசிரியர் பணியிடங்கள் 20,000 இருந்தன. இது தவிர தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி நியமனத்தில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை டிஆர்பி கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் இது போல பல குழப்பங்கள் ஏற்பட்டதற்கு பிறகு, இந்த ஆண்டுக்கான தேர்வை நடத்துவதா வேண்டாமா என்ற நிலையில் டிஆர்பி உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 10 வகையான தேர்வுகளை டிஆர்பி நடத்தியுள்ளது.மேற்கண்ட 10 வகை தேர்வுகளும் குழப்பங்களில் சிக்கித் தவித்தன. தேர்வு எழுதிய பிறகு டிஆர்பியால் பாதிக்கப்பட்டதாக இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை முடிக்க முடியாமல் டிஆர்பி திணறி வருகிறது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் இன்னும் ஒரு பகுதியினருக்கு முடிவுகளை டிஆர்பி வெளியிடவில்லை.
 
 மேலும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கவில்லை. அந்த பணிகள் முடிந்தால்தான், அடுத்த கட்ட தேர்வை நடத்த வேண்டும் என்று டிஆர்பி முடிவு செய்துள்ளது. அதனால் இந்த முறை ஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பம் இல்லாமல் நடத்தப்படுமா என்று பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே, தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வருவதை அடுத்து, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதை தள்ளிப் போட அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. பட்டதாரிகளை சமாதானம் செய்வதற்காக கடந்த ஆட்சியின் இறுதியில், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யாமல் நிலுவையில் வைக்கப்பட்ட பட்டதாரிகளின் பட்டியலை தூசு தட்டி எடுத்து, இப்போது அவர்களுக்கு பணி நியமனம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சமூக அறிவியல் பாடங்களில் பொருளியல், வணிகவியல் பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால் பொருளியல், வணிகவியல் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்களை கீழ் வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்கலாம் என்று பட்டதாரிகள் தொடர்ந்து கேட்டுவருகின்றனர். ஆனால் அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதை தவிர வேறு எதைப்பற்றியும்டிஆர்பி அலுவலர்கள் சிந்திக்கவோ ஏற்கவோ மறுக்கின்றனர்.
 
அரசு உத்தரவுகளில் உள்ள சில நல்ல விஷயங்களையும் சுட்டிக்காட்டினால் ஏற்க மறுப்பது பட்டதாரிகளை உதாசீனம் செய்வது போல உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வை டிஆர்பி நடத்துமா என்ற சந்தேகம் பட்டதாரிகள் இடையே வலுத்துள்ளது.கடந்த 2012&2013ம் ஆண்டு பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான அறிவிப்பின்போது பட்டதாரி ஆசிரியர்கள் 6768, இடைநிலைஆசிரியர்கள் 3433 பேர் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஒரு கூட்டத்தில் பேசும் போது 56000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்மீது பல சர்ச்சைகள் எழுந்தன. தற்போது சட்டப் பேரவையில் பள்ளிக் கல்லூரிகளில் 22269 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள இடங்கள் 20000 அளவுக்கு உள்ளன. இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசிடம் இருந்து டிஆர்பிக்கு இன்னும் உத்தரவு வரவில்லை. அரசு தகுதித் தேர்வு நடத்த முன்வருமா?