பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகிறது. காலை 10 மணிக்கு அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிடுகிறார்.கடந்த மார்ச் 19ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்கியது.
ஏப்ரல் 10ம் தேதி நிறைவு பெற்றது. தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூலம் 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் முதல் வாரத்திலேயே துவங்கியது. கோட்டூர்புரம் பகுதியில் உள்ள டேட்டா சென்டரில் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து தேர்வு முடிவுகளை தயாரிக்கும் பணி துவங்கியது.
கடந்த ஏப். 23ம் தேதி பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளை அறிவித்தது. அதன்படி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், வரும் 21ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியாவதையொட்டி அனைத்து மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியது. வரும் 21 அன்று காலை 10 மணிக்கு நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இந்த முடிவுகளை அரசு தேர்வுத்துறை இணைய தளத்தில் சென்று மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இணையதளத்தில்www.tn.results.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் சென்று தங்களது தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதி மாதம் வருடம் இவைகளை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலுடன் தெரிந்து கொள்ளலாம். மாவட்ட அளவில் தேர்வு முடிவுகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்படும். தேசிய தகவல் மையங்கள் மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமில்லாமல் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு மொழிப்பாடத்திற்கு கோடிட்ட விடைத்தாள்களும் கணித பாடத்திற்கு கிராஃப் விடைத்தாளும், அறிவியல் பாடத்திற்கு செய்முறை படவிளக்கம் உள்ள தாள்களும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு விடைத்தாள்கள் 32 பக்கங்களுடன் அளிக்கப்பட்டது. அதற்குள் மாணவர்கள் விடையளிக்க கேட்டுகொள்ளப்பட்டனர்.தேர்வு முடிவுகள் வெளியான ஒரு வாரத்திற்குள் அந்தந்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக