லேபிள்கள்

28.6.14

New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners - Form

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவனின் பிளஸ்-2 கணித விடைத்தாளில் 4 பக்கங்கள் மாயம் தேர்வுத்துறை இயக்குநர் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு

பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவனின் கணித விடைத்தாளில் 4 பக்கங்கள் மாயமானது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மாறுதல் கலந்தாய்வில் தமிழுக்கு சோதனை: கொதிக்கும் ஆசிரியர்கள்

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் இரண்டு ஆண்டுகளாக, தமிழாசிரியர் பணியிடங்களை மறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

உதவி பேராசிரியர் தேர்வில் குளறுபடி; மதிப்பெண் வழங்குவதில் பாரபட்சம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,096 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதில், குளறுபடி ஏற்பட்டுள்ளது. 'ரெகுலர்' முறையில், எம்.பில்., படித்து, வேலை பார்த்தவர்களுக்கு, அனுபவத்திற்கான மதிப்பெண்ணை வழங்காத, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 'அஞ்சல் வழியில் படித்தவர்கள், திறந்த நிலை பல்கலையில், எம்.பில்., படித்தவர்களுக்கு, அனுபவத்திற்கான மதிப்பெண் வழங்கப்படும்' என, அறிவித்திருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பி.இ., கலந்தாய்வை இரவு10 மணி வரை நீட்டிக்க திட்டம்: இழப்பு நாட்களை ஈடுகட்ட அண்ணா பல்கலை அதிரடி

பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்க, ஒரு வாரம் வரை, காலதாமதம் ஏற்படலாம் என்பதால், இந்த நாட்களை ஈடுகட்ட, இரவு, 10:00 மணி வரை, கலந்தாய்வை நடத்த, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.

27.6.14

SPECIAL TET: மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.

மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.மாற்றுத்திறனாளி ஈஸ்வரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

High School HM Promotion Regarding | தமிழ் பண்டிட்களுக்கு எதிராக தொடுத்த வழக்கு இன்று முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி நியமன நாளின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற தமிழ் பண்டிட்களுக்கு எதிராக தொடுத்த வழக்கு இன்று முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு.

அகமேற்பார்வை தொடர்பாக 8,000 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு பயிற்சி

பள்ளி மற்றும் கல்வித்தர மேம்பாட்டிற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களின் அகமேற்பார்வை பணி தொடர்பாக 2 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக இந்த பயிற்சி அளிக்கப்பட

ஆசிரியர் கலந்தாய்வு: இன்றும்கூடுதல் பணியிடங்கள் காட்டப்படுமா

பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று நடந்த பணிநிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன.

TET என்றொரு கண்ணாமூச்சி ஆட்டம்!

அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து சிக்கல்களையும், குழப்பங்களையும் கொண்ட ஒரே போட்டித் தேர்வு, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வாக மட்டுமே இருக்க முடியும். 

BE கலந்தாய்வு ஒத்திவைப்பு!

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.கலந்தாய்வு தேதி
பின்னர் அறிவிக்கப்படும்: 

சென்னையில் 80 மாநகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி.

சென்னையில் 80 மாநகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விமேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 25 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும்.

ஊதியம் - தனி ஊதியம் - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி 1.8.1992 முதல் 1.9.1998 வரை உள்ள STENO-TYPIST, GRADE-III 5% தனி ஊதியமாக வழங்க உத்தரவு.

26.6.14

பள்ளிக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து தமிழ் / ஆங்கிலம் / கணிதம் / அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தவர்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்; மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தவிர இதர ஆசிரியர்கள் யாரேனும் கலந்தாய்வு மையத்தில் இருந்தால் அவ்வாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு அமைச்சுப் பணி - அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு விருப்ப மாறுதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் வழங்கலாம் என இயக்குநர் உத்தரவு

SCERT - மாவட்ட அளவில் தலைமைஆசிரியர்களுக்கான அகமேற்பார்வை பயிற்சி நடத்த உத்தரவு


TNTET அரசின் புது யோசனை விரைவில் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதாம்-UG TRB EXAM FOR TET PASS CANDITATES(TNTET 50% + UG TRB 50% )

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான CV முடிந்தவுடன் விரைவில் FINAL MARK/WEIGHTAGE LIST ( NOT SELECTION LIST) – TRB இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.

ஆசிரியர்கள் சரிவர பள்ளிக்கு வராததால் மாணவ–மாணவியர் படிப்பு பாழாகிறது: பொதுமக்கள் புகார்

அவினாசி அருகே உள்ள ராவுத்தம்பாளையம் பள்ளிக்கு ஆசிரியர்கள் ஒழங்காக வராததால் மாணவ–மாணவிகள் படிப்பு பாழாவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ் மார்க்’ அரசாணையை ரத்து செய்ய ஐகோர்ட்டில் மனுதாக்கல்

புதுக்கோட்டையை சேர்ந்த பிரபாகர். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் எம்எஸ்சி, எம்எட் முடித்துள்ளேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளேன்.

அரசு பள்ளியில் விதிமீறி மாணவர்கள் சேர்க்கை; நடவடிக்கை கோரி மனு

 திருப்பூர், ஜீன் 26; தலித் விடுதலை இயக்க மாநில இணை பொதுச்செயலாளர் கருப்பையா, கலெக்டர் கோவிந்தராஜிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது; வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில் 1ம் வகுப்பில் 31 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதில் 10 மாணவர்கள் அரசின் விதிமுறைக்கு மாறாக 5 வயது நிறைவடையாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சிலிங்கை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் நியமனம் தொடர்பான கவுன்சிலிங்கை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தடகள திறனாய்வு போட்டிகளை நடத்துவது யார்: மேம்பாட்டு ஆணையம், கல்வித்துறை முரண்பாடு

உலகத் திறனாய்வு தடகளப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட விளையாட்டு அலுவலகம் மூலம் நடத்தப்படுகிறது. கிராமப்புற இளைஞர்களுக்கான ஆணையம், பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்துவதால், குழப்பம் ஏற்படுகிறது. கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

மூன்று ஆண்டுகளாக 'உறங்கும்' அரசு உத்தரவு: 'கவுன்சிலிங்' எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட, துறை ரீதியான மாறுதல் உத்தரவு, 3 ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வரவில்லை.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், 2004 முதல் 2006 ம் ஆண்டு வரை கள்ளர் சீரமைப்புத் துறைக்கு உட்பட்ட பள்ளிகளில், 150 பட்டதாரி மற்றும் 50 முதுகலை ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) பணி நியமிக்கப்பட்டனர்.

பிளஸ் 2 'ரேங்க்' பட்டியலில் சென்னை மாணவிக்கு 3வது இடம்: மறுமதிப்பீட்டில் 9 மதிப்பெண் கூடியதால் சாதனை

பிளஸ் 2 மறுமதிப்பீட்டில், சென்னை, போரூரைச் சேர்ந்த மாணவி, நவீனாவின், மொத்த மதிப்பெண், 1,191 ஆக உயர்ந்தது. இதனால், மாநில அளவில், மூன்றாம் இடம் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை, மூன்றாக உயர்ந்துள்ளது.

பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு: நாளை துவங்குகிறது

பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், நாளை முதல் நடக்கிறது. நடப்பு கல்வி ஆண்டில், பி.இ., படிப்பில் சேர, 1.68 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, கடந்த 24ம் தேதி நடந்தது.

கல்வி உதவி தொகை கையாடல்: 77 தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை ஐகோர்ட்டில், கீழ்மருவத்தூரை சேர்ந்த கண்ணன் கோவிந்தராஜன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணியாற்றும் 77 தலைமை ஆசிரியர்கள்,

25.6.14

அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி கலந்தாய்வு: தடை கோரி வழக்கு.

மதுரை ஐகோர்ட் கிளையில் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் 19 அரசு, 12 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 

ஆசிரியர் இல்லாத பள்ளி: பூட்டு போட்டு பெற்றோர்களும் மாணவர்களும் போராட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சூலக்கரை கிராமத்தில் இருக்கும் நடுநிலைப்பள்லியில் 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

ஜிபிஎப் ஆண்டறிக்கை: இணைய தளத்தில் மட்டும் பெற சந்தாதாரர்களுக்கு அறிவுறுத்தல்.

நடப்பு நிதியாண்டு முதல், பொது வருங்கால வைப்பு நிதிக்கான(ஜிபிஎப்) ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள், மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என துணை மாநில கணக்காயர்(நிதி) வர்ஷினி அருண் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்க மறுத்த பாடத்தை, திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி நிர்வாகம் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.

திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கலைகல்லூரியில், பி.எஸ்.சி., விலங்கியல் தொழிற்கல்வி பாடப்பிரிவில், ஆண்டிற்கு 32 மாணவிகள் படிக்கின்றனர். 

பள்ளிக்கல்வித்துறையில் 500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

பட்டதாரி ஆசிரியர்கள் 500 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக ஆன்-லைன் மூலம் புதன்கிழமை (ஜூன் 25) பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

பள்ளிகளில் 13 வகை புதிய விளையாட்டுகள்: உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 13 வகை புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உடற்கல்வி, இயக்குனர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

24.6.14

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2014 மாதத்திற்கான அகவிலைப்படி 7% உயர்த்தி வழங்க பரிந்துரை?

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜுலை 2014 மாதத்திற்கானஅகவிலைப்படியை 7% உயர்த்தி 107% ஆக வழங்க நிதித்துறைபரிந்துரை செய்துள்ளதாக இரயில்வே துறையில் உள்ள ஊழியர்கள்அமைப்பு ஒன்று
தகவல் கூறியுள்ளது.எனினும் இறுதி விவரம் விரைவில்வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

TNTET 12ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது:

கடந்த ஆண்டு அக்டோரர் மாதம் நடைபெற்ற TET தேர்வில் வெற்றிபெற்றவர்களின் இறுதி பட்டியல் வரும் வியாழன் அன்று வெளியிடப்படவாய்ப்புள்ளதாகவும்,ஜூலை முதல் வாரத்தில் இவர்களுக்கான

எஸ்.எஸ்.எல்.சி சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2014 அறிவியல் செய்முறை தேர்விற்கான தேதி அறிவிப்பு

பள்ளிக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து ஆங்கிலம் / கணித பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தவர்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு

தொடக்கக் கல்வி - வருங்கால வைப்புநிதி கணக்கு முடித்து தொகை வழங்குவது சார்பான கருத்துருக்களை காலதாமதமின்றி உடனடியாக மா நில கணக்காயருக்கு அனுப்ப அரசு உத்தரவு

தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் கூடுதலாக ஒரு ஆசிரியை நியமனம்

நெல்லிக்குப்பம், வான்பாக்கத்தில் சாரதா நிலைய உதவிபெறும் துவக்கப் பள்ளியில் 71 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளிக் கட்டடம் நான்கு ஆண்டுகளுக்கு முன் வீசிய தானே புயலில் முற்றிலும் சேதமானது. இதுவரை புதிதாக கட்டடம் கட்டப்படாததால், அங்குள்ள சமுதாய கூடத்திலேலே வகுப்புகள் நடக்கிறது. ஒரே அறையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் நடப்பதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

ஆசிரியர்கள் இடையே கோஷ்டி பூசல்; மாணவர்கள் வெளியேறும் அவலம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஆசிரியர்களுக்கிடையே, கோஷ்டி பூசல் உள்ளிட்ட பல்வேறு சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள அரசு பள்ளியில், டி.சி., வாங்கி சென்று, வேறு பள்ளியில் மாணவர்கள் சேரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்கு கூடுதல் வரி விலக்கு சலுகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது

மத்திய அரசின் பொது பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூலை) 10–ந்தேதி (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிதி நிலை அறிக்கையை தயார் செய்யும் பணியில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

 வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 3 லட்சமாக உயரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு வரி வசூல் உள் கட்டமைப்பிலும் பெரிய அளவில் மாற்றங்கள் வர உள்ளது.

பட்டதாரி ஆசிரியர் பதவியுர்வு -ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு -

18.06.2014-அன்று நடந்து முடிந்த தொடக்கக் கல்வி துறைக்கான  பட்டதாரி ஆசிரியர்கள் பதவியுர்வு கலந்தாய்வில் பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்ககளை காட்டுவதற்கு முன்னரே மாவட்ட மாறுதல் மூலம் 

மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை துரிதமாக அமைத்திட அறிவுரைகள்- தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை

பள்ளிக்கல்வி - பட்டியிலுள்ள ஆசிரியர்கள் நாளை நடைபெறும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

111 பட்டதாரி மற்றும் 33 முதுநிலை ஆசரியர் பணியிடங்கள் TRBமூலம் நிரப்ப விரைவில் நடவடிக்கை : கள்ளர் சீரமைப்பு இணைஇயக்குனர்


10ம் வகுப்பு உடனடி தேர்வு துவங்கியது

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு, நேற்று துவங்கியது. பொதுத் தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவ, மாணவியர், சம்பந்தப்பட்ட பாடங்களில், மீண்டும் தேர்வெழுதி, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியைத் தொடர வேண்டும் என்பதற்காக, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது.

புறக்கணிப்பு, போராட்டம், பங்கேற்பு: 'கவுன்சிலிங்கில்' ஆசிரியர்கள்

மதுரையில் நடந்து வரும் பொது மாறுதல் 'கவுன்சிலிங்கில்' காலி பணியிடங்களை மறைத்ததாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அதிகாரிகளின் சமாதானத்திற்கு பின், பங்கேற்றனர்.

மாணவரே இல்லை; ஆசியர் பணிமாறுதல் கலந்தாய்வு உண்டு

சிவகங்கையில் ஒரு மாணவர் கூட இல்லாத இரு அரசு பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில், இடைநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. ஒன்றியம் வாரியாக காலியிட விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

கணக்குப்பதிவியலில் 147 மார்க் எடுத்த மாணவர் 'பெயில்' - தினமலர்

பிளஸ் 2 கணக்குப்பதிவியலில், 147 மதிப்பெண் எடுத்த கம்பம் மாணவர், 'பெயில்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மறுகூட்டலில் மதிப்பெண் தவறு தெரிந்துள்ள நிலையில், அந்த மாணவர் உயர்கல்வி படிக்க முடியாமல் தவிக்கிறார்.

கலந்தாய்வில் முறைகேடு: தலைமையாசிரியர்கள் அதிருப்தி

நாகை மாவட்டத்தில், நேற்று நடந்த தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில், முறைகேடு நடந்ததாகக் கூறி, கலந்தாய்வை புறக்கணித்து, தலைமையாசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் குளறுபடி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், தனியார் மேல்நிலைப் பள்ளி, கலைக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க, முழு கல்வி கட்டணத்தையும், மூன்று ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது.

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது ஆந்திராவில் 60 ஆக உயர்ந்தது

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, 58லிருந்து, 60 ஆக, ஆந்திர மாநில அரசு உயர்த்தி உள்ளது. இது தொடர்பான, ஆந்திர மாநில பொது வேலைவாய்ப்பு திருத்தச் சட்டம், 1984க்கு, ஆந்திர மாநில சட்டசபை, நேற்று ஏகமனதாக ஒப்புதல் அளித்தது. சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

அரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யாரெல்லாம் காரணம்? தி ஹிந்து

அரசுப் பள்ளிகளின் மரணச் செய்திகளை அத்தனை எளிதாகக் கடக்க முடிவதில்லை. சமீபத்திய மரணம் ராமகோவிந்தன்காட்டில் நடந்திருக்கிறது. வேதாரண்யம் பக்கத்தில் உள்ள கிராமம் இது. அரை நூற்றாண்டுக்கும் மேல் இங்கு செயல்பட்டுவந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இன்றைக்கு மூடப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு வரை ஐந்தாம் வகுப்பில் மூன்று மாணவர்களும் இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும் படித்திருந்திருக்கின்றனர்.

முதுகலை ஆசிரியர்களுக்கு முக்கிய இடங்கள் மறைக்கப்பட்டதால் மறு கலந்தாய்வு நடத்த அரசுக்கு கோரிக்கை

தஞ்சாவூரில் நடைபெற்று மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட கலந்தாய்வில் முக்கிய காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதாகக் கூறி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமசீர் பாடத்திட்டத்தால் மாணவர்களின் சுமை குறைந்துள்ளது


தமிழகப் பள்ளிகளில் பத்து, ப்ளஸ் டூ மட்டும்தான் வகுப்புகளா?

சமீபத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களை அழைத்துப் பேசுகிறார்கள். ரிசல்ட் ஏன் குறைந்துவிட்டது? உயராமல் போனதற்கான காரணங்கள் என்ன? என்ற பொதுவான கேள்விகளில் பேச்சு தொடங்குகிறது.

23.6.14

ஆசிரியர்களே சிந்திப்பீர்........ TNGTF பொதுச்செயலாளர்

*மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றக் கூடாது என்று சொல்லி அரசாணை ஏதும் இல்லாத நிலையில் இத்தனை பேர் கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டதை எந்த சங்கமும் கண்டுகொள்ளாதது ஏன்?

*அரசாணை எண் 52 பள்ளிக்கல்வித்துறை நாள் 30.03.2006ன் படி BRTE AND B.T ASST ARE INTERCHANGEABLE. எனக் கூறப்பட்டுள்ளது.பின் அவர்கள் மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றக்கூடாது எனச் சொல்வது நியாயமா? நாளை இது அனைத்து ஆசிரியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டால் என்ன செய்யப் போகிறோம்.

ஆசிரியர் வருகைப் பதிவை உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி முறை கைவிடப்பட்டதா? - தினமலர்

ஆசிரியர் வருகை பதிவை உறுதிப்படுத்தும் எஸ்.எம்.எஸ். முறையை மீண்டும் அமல்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில தனியார் பள்ளிகளில் மாணவர் வகுப்புக்கு வரவில்லை எனில் பெற்றோருக்கு போனில் எஸ்.எம்.எஸ்.,அனுப்பும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதேபோல், அரசு பள்ளிகளில் ஆசிரியர் வருகை குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறை கடந்த கல்வியாண்டில் கொண்டு வரப்பட்டது.

இன்றயை ( 23.06.14) ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு

தொடக்க கல்வித் துறை;

 முற்பகல்; தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமாறுதல்

பிற்பகல்; தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 

பள்ளிக் கல்வித் துறை; 

           முதுகலை ஆசிரியர் பணியிட மாறுதல் ( மாவட்டத்திற்குள்)

அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககத்திற்கு வேண்டுகோள்!

*அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மாநிலம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் பந்தாடப்பட்டிருக்கும் பேரவலம் ஆரோக்கியமான அம்சம் அல்ல; கவலை அளிக்ககூடிய, துரதிருஷ்ட வசமான நடவடிக்கையாகும் இது.

MBBS/BDS முதல் கட்ட கலந்தாய்வு கட்-ஆஃப் என்ன?

சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 2,023 எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 498 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள் என முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த

கருகும் மொட்டுகள்! இரும்பு கூடார வகுப்பறைகளால் பரிதாபம்; கருணை காட்டுமா பள்ளி கல்வி துறை?

கடும் வெப்பம் தகிக்கும் இரும்பு கூடார வகுப்பறைகளில் அடைத்து வைத்து, குழந்தைகளை வாட்டி வதைக்கும், கொடுமை அரசு துவக்க பள்ளி ஒன்றில் நடந்து வருகிறது. இது குறித்து, பள்ளி கல்வி துறை அதிகாரிகளும் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

மழலைகளாகிலும் தமிழ் படிக்கட்டும்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் முன்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக இருக்குமா என்பது இன்னமும் புதிராகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழுக்கு மிகப்பெரும் தடையாக இருப்பவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள்தான். அவர்கள் இந்த முடிவை ஏற்க மறுத்து தொடர்ந்து நீதிமன்ற வாசலைத் தேடிப்போகிறார்கள்.

அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி! பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை

அஸ்பெஸ்டாஸ் ஓடு வேய்ந்த இடங்களில் இயங்கும் பள்ளிகளை மூடுமாறு, அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாணவிகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே உஷார்! பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?

பள்ளி வயதிலேயே மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் மிகுந்த அச்சம டைந்துள்ளனர்.

22.6.14

போலி பணி நியமன ஆணை: வேலூர் கல்வி அதிகாரி சஸ்பெண்ட்

வேலூர் எஸ்எஸ்ஏ திட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் விவகாரத்தில், அவர் போலி கையெழுத்து போட்டு பணி நியமன ஆணை வழங்கி உள்ளது அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவம் கல்வி துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்தாண்டு கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை: ஆதிதிராவிடர் நலத் துறை அதிகாரிகளால் பாதிப்பு - தினமலர்

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதில் மீண்டும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

சாதனை மாணவர்களுக்கு பரிசு: ஒரு மாதம் கடந்தும் அரசு மவுனம் - தினமலர்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகி, ஒரு மாதம் கடந்தும், மாநில அளவில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு, பரிசு வழங்காமல், தமிழக அரசு மவுனம் சாதித்து வருகிறது. இதற்கிடையே, தி.மு.க., சார்பில், 469 மாணவர்களுக்கு, பரிசு வழங்கும் விழா, கோவையில், இன்று நடக்கிறது.

பி.இ., கலந்தாய்வு நாளை துவங்குகிறது அனைத்து ஏற்பாடுகளும் தயார்

நடப்பு கல்வி ஆண்டில், பி.இ., சேர்க்கை கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், நாளை துவங்குகிறது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், அண்ணா பல்கலை, முழுவீச்சில் செய்துள்ளது. விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் அதிக, 'ரேங்க்' பெற்ற மாணவர்களுக்கு, நாளை, 'சீட்' ஒதுக்கீடு செய்யப்படும்.

ஜூன் 26க்குள் 2,000 புதிய பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், கல்வித்துறை பரிசீலினை

தமிழகம் முழுவதும், இம்மாதம் 26க்குள் புதிதாக, 2,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க, கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.

இந்த வருடம் பி.எட். ஆசிரியர் கவுன்சிலிங் ஆன் லைனில் நடத்த திட்டம்: துணைவேந்தர்

தமிழகத்தில் 7 அரசு பி.எட் கல்லூரிகளும் 14 அரசு உதவிபெறும் பி.எட் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. மொத்த 2400 பி.எட். இடங்களும் 450 எம்.எட் இடங்களும் உள்ளன.

பணிச்சுமை அதிகரிப்பை தடுக்க பள்ளிகளில் உதவியாளர் பணியிடம் விரைவில் நிரப்ப பட்டியல் தயாரிப்பு

கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள உதவியாளர் காலி பணியிடங்கள் குறித்து உடனடியாக பட்டியல் தயாரித்து அனுப்புமாறு பள்ளி