லேபிள்கள்

10.5.14

HIGHER SECONDARY HM PROMOTION PANEL - 2014 NOW RELEASED

பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி 1-1-2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணை வெளியீடு

                          CLICK HERE-G.O 105- DA HIKE

கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி':பள்ளி கல்வித் துறை செயலர் பெருமிதம்

தமிழக கல்வித் துறை வரலாற்றில், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதத்திற்கும் அதிகமான தேர்ச்சியைப் பெற்றிருப்பது, இதுவே முதல் முறை.இதுகுறித்து, பள்ளி கல்வித் துறை செயலர், சபிதா கூறுகையில், ''அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர் என, அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. ஆரம்பத்தில் இருந்து திட்டமிட்டு, தலைமை ஆசிரியர்களை ஊக்குவித்து, செயல்பட வைத்தோம். அதற்கு, நல்ல பலன் கிடைத்துள்ளது,'' என்றார்.

சாதித்த மாணவர்களுக்கு காத்திருக்கிறது தமிழக அரசின் பரிசு : குளறுபடியில்லாமல் விழாவை நடத்த அதிகாரிகள் தீவிரம்

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழை முதற்பாடமாக எடுத்து, மாநில, மாவட்ட அளவில், அதிக மதிப்பெண்களுடன், முதல், மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு, பணப் பரிசு வழங்குவதுடன், அவர்களின் உயர்கல்வி செலவையும், தமிழக அரசு ஏற்கிறது.

மதிப்பெண் சான்றிதழ் எப்போது?

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.

தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் பதிலளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

நூறு சதவீத தேர்ச்சியினை பெறவேண்டும் என்பதற்காக 10-ம் வகுப்பு மாணவனை டுடோரியலில் சேர்த்துவிட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை தொடர்ந்த வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது

சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில், 1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் (ஆர்.டி.இ.,) பொருந்தாது . ஆர்.டி.இ., சட்டம் மற்றும் அதன் கீழ், மாணவர் சேர்க்கையில், 25 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது ஆகியவற்றை எதிர்த்து, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இலவச பஸ் பாஸ் பெற மே 12 முதல் விண்ணப்பம், இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்


அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, ஆங்கில வழி கல்வி துவக்குவதில் இழுபறி


ஒன்று மற்றும் 6ம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர்களை தேடி ஓடும் ஆசிரியர்கள்


திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரட்டைப்பட்டம் வழக்கை ஏற்றுக்கொண்டது உச்ச நீதி மன்றம்

இரட்டைப்பட்டம் வழக்கை ஏற்றுக்கொண்டது உச்ச நீதி மன்றம்


இரட்டை பட்ட வழக்கை உச்ச நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இது இவ்வழக்கில் பெரிய விசயமாக கருதப்படுகிறது

ஆசிரியர்களே இல்லாமல் செய்யூர் அரசு பள்ளி சாதனை

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் கடந்த ஆண்டைக் காட்டிலும் 70 சதவீத மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

9.5.14

+2 தேர்வு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள்


+2 தேர்வு முடிவுகளை அறிய

+2 தேர்வில் சில மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம்

பிளஸ் 2 தேர்வில், 90.04 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 87.4 சதவீதமும், மாணவிகள் 93.4 சதவீதமும் பெற்றுள்ளனர்.
1. ஈரோடு - 97.05%

2. நாமக்கல் - 96.59%

3. விருதுநகர் - 96.12%

4. பெரம்பலூர் - 96.03%

5. தூத்துக்குடி - 95.72%

+2 தேர்வில் பாடவாரியாக முதலிடம் பிடித்தவர்கள்

பாடவாரியாக முதலிடம் பிடித்தவர்கள்;

தமிழ் - சுஷாந்தி ,(கிருஷ்ணகிரி)  200க்கு 198 மதிப்பெண்கள்
ஆங்கிலம்- பவித்ரா, (ஓசூர்)  200க்கு 198 மதிப்பெண்கள்
கணிதம்- 3882  பேர் 200க்கு 200 மதிப்பெண்கள்.
உயிரியல்- 652 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள்.
வேதியியல் - 1693 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள்.
இயற்பியல் - 2,710 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள்.


       வாழ்த்துக்கள்,   TNGTF, VKL

மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயத்த முடியாது: ஐகோர்ட்


ஆசிரியர்கள் தேவை - TET ல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்


25 சதவீத இடஒதுக்கீடு: கால அட்டவணைதான் தீர்வு

எந்த ஒரு சீரிய திட்டம் என்றாலும் சரி, அதற்கான சட்டத்தை நிறைவேற்றுவதோடு, அதன் உன்னதமான நோக்கம் நிறைவேறிவிடுவதில்லை. அதை உணர்வு மாறாமல் செவ்வனே நிறைவேற்றுவதில்தான் வெற்றியே இருக்கிறது. அந்த வகையில், நாடு

+2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. கிருஷ்ணகிரி பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.

             +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

முதல் இடம் - சுஷாந்தினி 1193 மதிப்பெண்
                              ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

இரண்டாம் இடம் - அலமேலு 1192 மதிப்பெண்
                                        தருமபுரி,

3ம் இடம்  -  டி,துளசிராஜன் 1191 மதிப்பெண்
                       போதுப்பட்டி, நமக்கல்

                       எஸ்.நித்யா 1191 மதிப்பெண்
                        மடிப்பாக்கம், சென்னை
         
                        வாழ்த்துக்கள்,                  TNGTF

பிளஸ் 2: மே 16க்கு பின் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் மே 16-ஆம் தேதிக்குப் பிறகே வழங்கப்படும் எனத் தெரிகிறது.

பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 20 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்துடன் மதிப்பெண் சான்றிதழ் நகலையும் மாணவர்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.

+2 சிறப்பு துணைத் தேர்வு, ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது

kh®¢ 2014-š eilbg‰W Koªj nkšãiy¤ nj®Î¡fhd nj®Î KoÎfŸ  09.05.2014 இன்று fhiy 10.00 kâ¡F btëæl¥gL»wJ. 

gŸë khzt®fŸ Ïizajs têahfΫ,  SMS _ykhfΫ,  mt®fŸ gæ‹w gŸëfŸ _ykhfΫ nj®Î KoÎfis m¿ªJ bfhŸsyh«.

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை மே 13ல் விண்ணப்பம்

அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில், 2014 - 15ல், நேரடியாக, இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் சேர, விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் : கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை துவங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு

TO DOWNLOAD HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION PANEL CLICK HERE...


01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல்  (அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  01 முதல் 287  முடிய மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி
இயக்குநர் நிலை-1 ம் இணைந்து 01 முதல் 1080  முடிய

TET: உயர்நீதிமன்றம் வழங்கிய 5% தளர்வை எதிர்த்து bench court இல் writ மனு தாக்கல்,தடை வழங்க மறுப்பு

தமிழக அரசு கடந்த பிப்ரவரி 6 ம்  தேதி SC,ST,MBC,BC பிரிவினருக்கு TET தேர்ச்சி மதிப்பெண்ணில் 5% தளர்வை வழங்கி GO MS.NO 25 வெளியிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி 5% தளர்வு சரியானதே என தீர்ப்பு வழங்கியது.

கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? என்பதை அறிய...

அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா?
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால்ஊதியப்பட்டியல்கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா?
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா
எந்த நாளில்சம்பளம்வரவுவைக்கப்படும் போன்றதகவகல்களைநீங்களேஇணையத்தில்தெரிந்துகொள்ளலாம்.

8.5.14

குளறு படியால் சிக்கித்தவிக்கும் டி.இ.டி., தேர்வு - தேர்வர்கள் கடும் அதிருப்தி ........பதிவு மூப்புக்கு மதிப்பெண் கோரிக்கை .


தனியார் பள்ளிகளை கல்வித் துறை கவனிக்குமா?

தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டாலும், மக்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவதில்லை. தனியார் பள்ளிகளையே நாடுகிறார்கள். அரசு பள்ளிகளில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாமல் வகுப்புகள் குறைக்கப்படுகின்றன. பணி நிரவல் என்ற பெயரில் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.

குடும்ப ஓய்வூதியம் பெறுவது எப்படி?

ஓய்வூதியர்களின் இறப்புக்குப் பிறகு, மனைவி அல்லது கணவன் இருந்தால் அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து கூறுகிறார் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் கொ.சி. கருப்பன்.

கம்ப்யூட்டரில் இருந்து டிஜிட்டல் கையெழுத்து கொண்ட சான்றிதழ்களை பள்ளி, கல்லூரி உள்பட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

கம்ப்யூட்டரில் இருந்து டிஜிட்டல் கையெழுத்து கொண்ட சான்றிதழ்களை பள்ளி, கல்லூரி உள்பட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்துகொள்ளலாம்

எஸ்.எம்.எஸ்மூலம் அறிந்துகொள்ளலாம்:

              பி.எஸ்.என்.எல்சந்தாதாரர்கள் 53576 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.அனுப்பி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்இந்த எண்ணுக்கு தேர்வுமுடிவுகளை முன்கூட்டியே அறியும் வகையில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Selection Grade / Special Grade scale of pay

Official Committee pay revision –Implementation of revision of scale of pay and allowances, etc. Applicability of Selection Grade / Special Grade scale of pay – Revised orders – Issued.

மே 12-ஆம் தேதி முதல் கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்மே 12-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன. 

மதிப்பெண் என்பது வாழ்க்கையல்ல... வாழ்வும் அதோடு நிற்பதல்ல...தோல்விக்கு விலை உயிரல்ல...

       மதிப்பெண் என்பது வாழ்க்கையல்ல... வாழ்வும் அதோடு நிற்பதல்ல...தோல்விக்கு விலை உயிரல்ல...              

மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

மத்திய அரசின், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

நாளை காலை பிளஸ் 2 "ரிசல்ட்'

 பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறையின், நான்கு இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. 8.26 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வு முடிவை, ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

7.5.14

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி; கல்வித்துறை அறிவிப்பு

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நிர்வாக மாறுதல் பெயரில் பண பரிமாற்றம்: ஆசிரியர்கள் மத்தியில் வலுக்கிறது எதிர்ப்பு


தேனி மாவட்ட பள்ளிகளின் விபரங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்காக சேகரிப்பு

தேனி மாவட்ட பள்ளிகளின் விபரங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்காக சேகரிக்கப்படுகின்றன.
பள்ளிகளை பற்றிய முழு விபரம், படிக்கும் மாணவர்கள், பணிபுரியும் ஆசிரியர்கள், விளையாட்டு மைதானம், கழிப்பிடம், லேப், மின்விளக்கு, போர்டிகோ, உட்பட உள்கட்டமைப்பு வசதிகள், என பள்ளிகளின் அனைத்து விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன.

புதிய மதிப்பெண் முறை அறிவித்த பின் 15,000ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் வெளியாகும்


மாதிரி பள்ளிகளுக்கு மே 9-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாதிரி பள்ளிகளுக்கு மே 9-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

இரட்டைப்பட்ட வழக்கு இன்று (7.5.2014) உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது


அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கிராமம் கிராமாக அலையும் ஆசிரியர்கள்..

அரசுப்பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் கிராமம் கிராமாக ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் அலைந்து திரிந்து பெற்றோர்களையும்மா ணவர்களையும் அணுகி வருகின்றனர். 

ஒரே நாளில் இரண்டு தேர்வு: பட்டதாரிகள் தவிப்பு

நெட்', டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் ஒரே நாளில் நடப்பதால், 'எந்த தேர்வை எழுதுவது' என, பட்டதாரிகள் குழப்பத்தில் தவிக்கின்றனர்.

'வெயிட்டேஜ்' மதிப்பெண் குளறுபடி: பட்டதாரிகள் பாதிப்பு

ஆசிரியர் பணி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், அரசு கல்லூரியில் பயின்ற பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,), கீழ், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான புதிய அட்டவணை வெளியீடு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,), கீழ், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான புதிய அட்டவணையை, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது. மே, 29 தேதிக்குள், ஆர்.டி.இ., சேர்க்கை பணிகள் முடியும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.

கல்வி உரிமை சட்டம் சிறுபான்மையினரை கட்டுப்படுத்தாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி

கல்வி உரிமை சட்டம், அரசியல் சாசன சட்டப்படி செல்லத்தக்கதே. எனினும், அந்தச் சட்டம், அரசிடமிருந்து நிதியுதவி பெறும் அல்லது நிதியுதவி பெறாத, சிறுபான்மையின கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தாது' என, சுப்ரீம் கோர்ட்டின், அரசியல் சாசன பெஞ்ச், நேற்று உத்தரவிட்டது.

தாய்மொழியில் துவக்கப்பள்ளி படிப்பு கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி

துவக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு, தாய்மொழி அல்லது வட்டார மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என, மாநில அரசுகள் கட்டாயப்படுத்த முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் நியமன வழக்குகளை விரைவாக முடிக்க வலியுறுத்தல்

மாணவர்கள் நலன் கருதி, ஆசிரியர் நியமன வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து, விரைந்து முடிக்க, தமிழக அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதுகலை தேர்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

5% மார்க் தளர்வு அடிப்படையில் சான்று சரிபார்ப்பில் மீண்டும் வெயிட்டேஜ்

டிஇடி தேர்வில் அரசு அறிவித்த 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நேற்று தொடங்கியது. டிஇடி தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கும் சதவீத அடிப்படை போட்டதால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கு ரூ.25 கோடி வழங்க அரசு ஒப்புதல் 25% ஒதுக்கீட்டில் நாளை முதல் மாணவர்கள் சேர்க்கை

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான செலவு தொகை ரூ.25 கோடியை தமிழக அரசு வழங்கும் என்று உறுதி அளித்ததை அடுத்து தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUS

6.5.14

தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்ரிதழ் பெறும் படிவம்-அரசாணை எண் 145 நாள் 30.09.2010:

GENERAL PROVIDENT FUND – Authorities competent to grant Temporary Advances

PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the financial year 2014-2015 – Orders – Issued.

7th Pay Commission News – Public Notice issued by 7th CPC

TEMPORARY POSTS CONTINUANCE ORDERS FOR VARIOUS POSTS

கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி 25 சதவீத இடஒதுக்கீடு: 6 அதிகாரிகள் குழு அமைப்பு

கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி, 25 சதவீத இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் நோக்கில், கோவை மாவட்டத்தில் ஆறு கல்வி அதிகாரிகளை கொண்ட பிரத்யேக கண்காணிப்பு குழு

மதுரையில் ஏழு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம்

மதுரையில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பக 'ஆன்லைன்' பதிவுகள் தொடர்பாக, ஏழு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு

முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர் கள், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை (டி.ஆர்.பி.,), நேற்று மீண்டும் முற்றுகை:

முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர் கள், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை (டி.ஆர்.பி.,), நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம், ஓராண்டாக இழுபறியில் இருந்து வருகிறது. தமிழ் பாடத்திற்கு

தனியார் பள்ளிகளுக்கு ரூ.25 கோடி தர தமிழக அரசு முடிவு

நடப்பு கல்வி ஆண்டில், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு வசதியாக, தனியார் பள்ளிகளுக்கு, கடந்த ஆண்டு தர வேண்டிய, 25 கோடி ரூபாய் நிலுவை தொகையை, தமிழக அரசே வழங்க முடிவு செய்து உள்ளது.

5.5.14

தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்கள் விவரம் இன்று கல்வி அதிகாரியிடம் ஒப்படைப்பு


தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இந்த ஆண்டு 25% ஒதுக்கீடு கிடையாது

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இந்த ஆண்டு 25% ஒதுக்கீடு தர முடியாது என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் நடந்த தனியார் பள்ளிகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளிலும் ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசு தரவில்லை, கல்வி கட்டணத்தை தராததால் இந்த ஆண்டு ஏழை மாணவர்களுக்கு இடமில்லை என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு கைவிரித்து விட்டது

DOWNLOAD TET NEW WEIGHTAGE CALCULATOR

DOWNLOAD TET NEW WEIGHTAGE CALCULATOR

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப்பிரிவினருக்கு தேர்ச்சிமதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாககுறைக்கப்பட்டதை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக22 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ்சரிபார்ப்பு மே 6 முதல் 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 29மாவட்டங்களில் நடத்தப்படும் என்றும் இதற்கான அழைப்புக்கடிதத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில்பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுஇருந்தது. 22 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ்சரிபார்ப்பு சென்னை உள்பட 29 மையங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

முறையாக பின்பற்றப்படாத கல்வி உரிமைச் சட்டம்: கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் முறைப்படி பின்பற்றப்பட வில்லை என்று கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுபற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியல்: அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியீடு

பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வசதிக்காக 570 பொறியி யல் கல்லூரிகளின் முழு விவர பட்டியலை மாவட்ட வாரியாக அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

கதவுகளை திறந்துவிடுமாகல்வி உரிமைச் சட்டம்?

அரசுக் கொள்கைகளால் தேசத்தின் குடிமக்களுக்கு - குறிப்பாக வருங்காலத் தலைமுறையினருக்கு - இழைக்கப்பட்ட மிகப் பெரிய வஞ்சனைகளைப் பட்டியலிட்டால், கல்வி கடைச்சரக்காக மாற்றப்பட்டிருப்பது நிச்சயமாக அந்தப் பட்டியலில் இடம்பெறும். இதை எதிர்த்து நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களின் பலனாக, கல்வி உரிமைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. 

தேர்தலின் போது அரசு அலுவலர்களுக்கு விடுப்பு சான்றிதழ் வழங்கிய மருத்துவர் பணியிட மாற்றம்

தேர்தலின் போது அரசு அலுவலர்களுக்கு மருத்துவ விடுப்புச் சான்று வழங்கியது தொடர்பாக திருவாரூர் அரசு மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொறியியல் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு: அந்தந்த மாவட்டத்திலேயே நடத்த வேண்டும்

தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 60 மையங்களில், பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கி உள்ளது.

இறந்து போன அரசு ஊழியரின் குடும்பத்துக்கு குடும்பநல நிதி தராமல் இழுத்தடித்த அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு கண்டனம்

இறந்து போன அரசு ஊழியரின் குடும்பத்துக்கு, குடும்ப நல நிதி வழங்காமல் இழுத்தடித்த அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. குடும்ப நல நிதியை 8 வாரத்துக்குள் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 

GPF சந்தாதார்கள் கவனத்திற்கு

GPF சந்தாதாரர்கள் தங்களது GPF கணக்கில்தங்களது CELL PHONE NUMBER ஐ பதிவு செய்யும் வசதியை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகப்படுத்தயுள்ளது . எனவே GPF சந்தாதார்கள் 


என்ற இணைப்பை CLICK செய்து தங்களது CELL NUMBER ஐ பதிவு செய்யவும் .

8 ம் வகுப்பு திறனாய்வு தேர்வு (NMMS EXAM) முடிவுகள் வெளியிடப்பட்டன.

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013- PAPER II

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு (இரண்டாம் தாள்) சான்றிதழ் சரிபார்ப்பு நாளை தொடக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக 22 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இரட்டைப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பிரபல மூத்த வழக்கறிஞர் இரட்டைப்பட்டம் சார்பாக வாதாடுகிறார்

இரட்டைப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

இரட்டைப்பட்டம் பட்டப்படிப்பு படித்தவர்களின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது .பிரபல மூத்த வழக்கறிஞர் இரட்டைப்பட்டம் சார்பாக வாதாடுகிறார். 

2014-2015 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு


பாரதியார் பல்கலையில் DDE எம் .எட் .,பட்டப்படிப்பு


4.5.14

ஆசிரியர் தகுதித்தேர்வு குளறுபடிகள்: கண்டு கொள்ளாத ஊடகங்கள்

சோதனைகள் வரலாம்,ஆனால் சோதனைகள் மட்டுமே வந்து கொண்டிருந்தால் என்ன சொல்வது விதி என்பதா? அல்லது TRB செய்யும் சதி எனபதா?

7 ஆவது ஊதியக்குழு: எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள், கருத்துகள் தெரிவிக்க அழைப்பு

27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ்: பள்ளி திறந்ததும் உடனடியாக வழங்க திட்டம்

வரும் கல்வி ஆண்டில் 27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பே, இலவச பாஸ் விண்ணப்பங்களை வழங்கவுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

தயார் நிலையில் இலவச பாடப்புத்தகங்கள் மே 15ம் தேதிக்கு பிறகு வினியோகம்

தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான இலவச புத்தகங்களை பொறுத்தவரை உயர் வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி முடிந்து, தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்த தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: திருவள்ளுவர் பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு

விடைத்தாள்களை திருத்த, தகுதியான ஆசிரியர்களை நியமிக்கும்படி, திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக்கல்வி துறையில் பணி நிரவல் நடவடிக்கை: விவரம் சேகரித்து அனுப்ப உத்தரவு

தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் மற்றும் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சலிங் நடத்தும் முன் பணிநிரவல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விபரங்களை உடனடியாக சேகரித்து வழங்க தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டின்(2014-2015) தொடக்கத்தில் ஆசிரியர் பணி நியமனம் - நீதியரசர் நாகமுத்து தீர்ப்பின் முக்கிய பரிந்துரை

I am conscious of the fact that in this State, because of the poor performance of the candidates in the TET Examinations and because of the welcome policy of the Government that there

பி.காம்., பட்டதாரிகளும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றலாம்.

தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை -INCENTIVE மற்றும் INCREMENT பெறுவதற்கான-அரசாணை -OLD IS GOLD- G.O

சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் குறித்த விதிமுறைகளை விளக்கும் அரசாணை

ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை: புதிய அட்டவணை வெளியிடாததால் குழப்பம்

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடத்த ஏதுவாக, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், புதிய அட்டவணையை வெளியிடவில்லை. இது, தனியார் பள்ளிகளுக்கு, சாதகமாக அமைந்துள்ளது.

10ம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை இல்லை: இந்த ஆண்டிலும் பழைய பாட திட்டமே தொடரும்

வரும், கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பில் (எஸ்.எஸ்.எல்.சி.,) முப்பருவ கல்வித்திட்டம் கொண்டு வரப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்த நிலையில், அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், பழைய பாடத்திட்டத்தின் படி, பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்பும் பணியை கல்வித்துறை துவக்கி உள்ளது.

பாட வாரியாக தேர்ச்சி விவரப் பட்டியல் டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர் எதிர்பார்ப்பு - தினமலர் செய்தி