கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி, 25 சதவீத இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் நோக்கில், கோவை மாவட்டத்தில் ஆறு கல்வி அதிகாரிகளை கொண்ட பிரத்யேக கண்காணிப்பு குழு
அமைக்கப்பட்டுள்ளது.கடந்த மே 3ம் தேதி தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான விண்ணப்ப வினியோகம் துவக்கப்பட்டது. வரும் 18ம் தேதி வரை விண்ணப்ப வினியோகத்துக்கான கால அவகாசம் நீட்டித்து, தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகள், 25சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு புகார்கள் தொடர்ந்து பெறப்பட்டு வருவதால், இதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள, பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, கோவை மாவட்டத்தில், புகார்களை ஆய்வு செய்யவும், தனியார் பள்ளிகளை கண்காணிக்கவும் ஆறு கல்வி அதிகாரிகளை கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு குறித்தும், புகார் தெரிவிக்க வேண்டிய தொடர்பு எண் குறித்தும் நேற்று மாலை முதன்மை கல்வி அதிகாரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ''கோவை மாவட்டத்தில், கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நாளை (இன்று) முதல் செயல்பட உள்ளது; 25 சதவீத இடஒதுக்கீடு குறித்து எவ்வித புகார்களையும் பெற்றோர்கள் தயங்காமல் தெரிவிக்கலாம். மேலும், புகார்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, பிரத்யேகமாக கொடுக்கப்பட்டுள்ள 97888-58523, 99760-67880,94438-20422, 99769-55766, 94439-29389 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம், '' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக