லேபிள்கள்

5.5.14

முறையாக பின்பற்றப்படாத கல்வி உரிமைச் சட்டம்: கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் முறைப்படி பின்பற்றப்பட வில்லை என்று கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுபற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
   கல்வியாளர் வசந்தி தேவி, ‘பாடம்’ அமைப்பை சேர்ந்த நாரா யணன், பேராசிரியர் சண்முக வேலாயுதம், ‘பிகமிங் ஐ’ என்ற தனியார் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த அஷ்வின் ஆகியோர் சனிக்கிழமையன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதா வது:

 
             தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் நலிந்த பிரிவி னரை சேர்க்க, மே 18 வரை விண்ணப்பம்அளிக்ககால நீட்டிப்பு செய்யுமாறு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசின் பள்ளிக் கல்வித்துறை இதுவரை இதற்கு தேவையான விழிப்புணர்வு அறிவிப்புகளை மேற்கொள்ள வில்லை. இந்தச் சட்டம் தமிழகத் தில் முறையாக பயன்படுத்தப் படவில்லை. கல்வி உரிமைச் சட்டத்துக்கு தமிழகத்தில் விரிவான விதிமுறைகள் இல்லை. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டங்களை எந்த தனியார் பள்ளியும் முறை யாக பின்பற்றவில்லை. இதில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியி னர், துப்புரவுத் தொழிலாளர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான உள் ஒதுக்கீடு குறித்து உரிய விதிகள் இல்லை.
 
      இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் சேரும் மாணவர் களுக்கு உரிய மதிய உணவு, சீருடை வசதிகள் செய்து தரப்படவில்லை. 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்களை சேர்த்ததற்கான தவறான புள்ளி விவரங்களை சில பள்ளிகள் தருகின்றன. அரசும் இவற்றை முறையாக ஆய்வு செய்வதில்லை. தவறான தகவல்களைத் தரும் பள்ளிகள் மீது நடவடிக்கையும் எடுப்பதில்லை.
 
         பள்ளிகளின் மொத்த இடங்கள், காலியான இடங்களை தினமும் அறிவிக்கும் ஆன் லைன் மற்றும் ஒற்றைச் சாளரமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். சமச்சீர் கல்வி வந்து விட்ட பிறகும் பள்ளிகளின் பெயரில் மெட்ரிக்குலேஷன் என்று சேர்க்கப்படுவது தொடர்கிறது. இதுகுறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அடிப் படை விதிகளை பின்பற்றாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, அவற்றை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளால் தரமான கல்வியைத் தர முடிய வில்லை. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
 
அட்மிஷன் வேண்டுமா?
 
          இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நலிந்த வகுப்பினர் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெறுவதற்கு உதவி செய்ய ‘பிகமிங் ஐ’ என்ற தன்னார்வ அமைப்பு தயாராக உள்ளது. உதவி தேவைப்படும் பெற்றோர் 89390 88640, 42, 13 மற்றும் 15 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக