லேபிள்கள்

17.5.14

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கோரிக்கை வையுங்கள், அலகு விட்டு அலகு மாறுவதல் தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எந்த பயனும் இல்லை?

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு அலகுவிட்டு அலகு மாறுதல் பெற்றுச் செல்லும் போதோ, அல்லது நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப் படுவதால் அதில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு ஈர்த்துக் கொள்ளப்படும் போதோ, அவர்கள் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றிய பணிக்காலத்தை இழந்து பள்ளிக்கல்வித்துறையில் இளையவராக கருதப்படுவர்.

TNGTF - தூத்துக்குடி மாவட்ட ஆலோசனைக் கூட்டம்


தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான இட ஒதுக்கீடு விண்ணப்பங்கள் வழங்க மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி தேதி கால நீட்டிப்பு/ இப்பொருள் சார்ந்து அறிவுரை-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை

25 சதவீத ஒதுக்கீட்டில் பெற்றோர் ஆர்வம் குறைவு: சென்னை மாவட்டத்தில் 65 விண்ணப்பங்களே விநியோகம்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர சென்னை மாவட்டத்தில் 65 விண்ணப்பங்களை மட்டுமே இதுவரை பெற்றோர்கள் வாங்கிச்சென்றுள்ளனர்.
இவர்கள் தவிர அந்தந்த தனியார் பள்ளிகளிலும் சில பெற்றோர்கள் விண்ணப்பங்களை வாங்கியிருக்கலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை மாவட்ட கல்வித்துறையில் நிரம்பும் பணியிடங்கள்

மதுரை மாவட்ட கல்வித்துறையில் பல முக்கிய பணியிடங்கள் பொறுப்பு அலுவலர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன.
முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களாக இருந்த ரவி (மேல்நிலை பள்ளிகள்) விருப்ப ஓய்வு பெற்றார். சீனிவாசன் (உயர் நிலை பள்ளிகள்) மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றார் (தற்போது ஓய்வு).

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: விண்ணப்பிக்கும் தேதி மே 31 வரை நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில் ஏழை, நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் & அவர்கள் வாரிசுகளுக்கான திருமண முன்பணம் பற்றிய அரசாணை...

ஆசிரியரெல்லாம் நொந்து இருக்காங்க...தினமலர் டீக்கடை பெஞ்ச்

ரெண்டு அமைச்சர்களும் நழுவியதால, ஆசிரியரெல்லாம் நொந்து போயிருக்காங்க பா...'' எனக் கூறியபடியே, பெஞ்சில் வந்தமர்ந்தார் அன்வர்பாய்.

''அமைச்சருங்க யாரு... ரகசிய துாது எதுக்காமுங்க...'' என, கேட்டார் அந்தோணிசாமி.

குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை பெற்றோருக்கு உண்டா?

பணியில் இருக்கும் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால் அந்த ஊழியரின் மனைவியோ, கணவரோ அல்லது பிள்ளைகளோ குடும்ப ஓய்வூதியம் பெற முடியும் என்பது தெரியும். ஆனால், திருமணம் ஆகாத ஊழியர் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுமா? அந்த ஊழியரின் பெற்றோருக்கு அதைப் பெறும் உரிமை உண்டா? இந்த சந்தேகம் பலருக்கும் உள்ளது. 

16.5.14

தலைமை ஆசிரியர்கள் வாரம் இருமுறை ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும்நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியில்பணிபுரியும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை வாரம்இருமுறையாவது பார்வையிட்டு கண்காணிப்புப் பதிவேட்டில்பதிவுகள் செய்து அலுவலர்கள் பார்வையின்
போது சமர்ப்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல்உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூஜான் சேவியர்ராஜ்கூறினார்.

ஜூனிற்குள் பதவி உயர்வு: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மாநில அளவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 'பேனல்' வெளியிடப் பட்டுள்ள நிலையில், பதவி உயர்வுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' விரைவில் நடத்த வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழகத்தில்

அரசுப் பள்ளிகளில் தொடரும் அவலநிலை - தேர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கும் அரசு

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதி அரசு பள்ளி கட்டடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில் உள்ளன. முறையான குடிநீர், கழிப்பறை வசதியில்லை. சில இடங்களில் பள்ளிகள் முட்புதர் சூழ்ந்தும் காணப்படுகின்றன. இதனால் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடக்க கல்வித்துறையில் விடுப்பு எடுத்த ஆசிரியர்,அலுவலர் விபரம் சேகரிப்பு

தொடக்க கல்வித்துறையில் விடுப்பில் உள்ள ஆசிரியர், அலுவலர் விவரங்களை சேகரிக்க அதன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தொடக்க கல்வித்துறையில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பலரும் முறையாக விடுப்பு விண்ணப்பம் அளிக்காமல் விடுமுறையில் உள்ளதாகவும், விடுமுறை காலம் முடிந்த பின்னரும் பணியில் சேராமல் இருப்பதாகவும் தொடக்க கல்வித்துறை இயக்குநருக்கு தகவல்கள் சென்றுள்ளன.

பிளஸ் 2 சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து வேலைவாய்ப்பக அலுவலகத்தில் 15 நாட்களுக்கு ஒரே சீனியாரிட்டி

பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து 15 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பில் ஒரே சீனியாரிட்டி வழங்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 9ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு

அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழிக்கல்வி : ஆண்டு தேர்வில் தமிழில் வழங்கப்பட்ட கேள்வி தாள்

அரசு பள்ளிகளில், பெயரளவிலே ஆங்கில வழிக்கல்வி திட்டம் செயல்படுகிறது.இங்கு நடந்த ஆண்டு தேர்வில், தமிழிலே கேள்வி தாள் வழங்கப்பட்டது,பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய காலமாற்றத்திற்கேற்ப, பெற்றோரிடம் ஆங்கில வழிக்கல்வி மோகம் அதிகரிப்பதால், ஏழ்மையான பெற்றோர் கூட, வட்டிக்கு பணம் வாங்கி, தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். இதனால்,அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து, பல கிராமங்களில் ,ஒரிரு மாணவர்களுடனே அரசு பள்ளிகள் ,செயல்படும் நிலை உள்ளது. 

15.5.14

பிளஸ் 2 விடைத்தாள் நகல்: ஜீன்2 ல் இணையத்தில் வெளியிடப்படும்

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கோரி 80,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் .ப்ளஸ் 2 விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டல் கோரி 3 ஆயிரத்து 346 பேர் விண்ணப்பித்துள்ளனர். அனைவரின் விடைத்தாள் நகலட ஜீன்2 ல் இணையத்தில் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஆர்.டி.இ., விண்ணப்பம் வழங்காமல் தனியார் பள்ளிகள் முரண்டு : 60 ஆயிரம் இடங்களுக்கு, வெறும் 8,000 வினியோகம்

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், 25 சதவீத இடஒதுக்கீட்டு விண்ணப்பம் வழங்காமல், தனியார் பள்ளிகள், முரண்டு பிடித்து வருகின்றன. இந்த ஒதுக்கீட்டின் கீழ், 60 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், இதுவரை, 8,000 விண்ணப்பங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

மறைந்த கல்வி அதிகாரியின் குடும்ப ஓய்வூதியத்தை 2 மனைவிகளுக்கும் சமமாக வழங்க ஐகோர்ட் உத்தரவு

கன்னியாகுமரியைச் சேர்ந்த, மறைந்த ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலரின், 2 மனைவி களுக்கும் சமமாக பங்கிட்டு, குடும்ப ஓய்வூதியப் பலன்கள் வழங்க வேண்டும், என அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

புதிதாக சேர்ந்த அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்

தமிழக அரசு ஊழியர்களுக்கு,பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், கடந்த 2003 ஏப்ரல் மாதம் முதல் அமலில் உள்ளது. இந்த ஆண்டிற்கு பிறகு, பணியில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்கள், மற்றும் பணி வரன் முறை பெறாத அரசு ஊழியர்கள், சென்னையில் உள்ள தகவல் தொகுப்பு மையத்தில், ஊழியர் பெயரில், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண், பெற்றிருக்க வேண்டும். இந்த எண் பெறவில்லை என்றால், புதிய பென்ஷன் திட்டத்திற்காக, அடிப்படை சம்பளத்தில் இருந்து, பணம் பிடித்தம் செய்ய முடியாது.

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அரசு பள்ளிகளில் ஆய்வு : கல்வித்துறை நடவடிக்கை

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறித்து, மாவட்ட வாரியாக, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பிளஸ் 2 தேர்வில், அரசு மேல்நிலைப்பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தாலும், சில பள்ளிகளின், மாணவர்கள் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள்; பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நிதியுதவி

அரசு பள்ளிகளில் பயின்று, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த மாணவ, மாணவியருக்கு, தமிழகத்தின் சிறந்த தனியார் பள்ளிகளில், மேல்நிலை படிப்பை தொடர்வதற்கு, நிதியுதவி வழங்கப்படுகிறது.

ஜாதிச் சான்றிதழ் { Community Certificate } பெறுவது எப்படி?

தமிழக அரசு தமிழ்நாடு ஜாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாத் துறை அளிக்கும் சான்றிதழே ஜாதிச் சான்றிதழ்.
மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளுக்காக ஒருமுறை இச்சான்றிதழைப் பெற்றால், அதைப் பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

14.5.14

மதுரையில் பிளஸ் 2 தேர்ச்சி குறைவு ஏன்; தலைமையாசிரியர்கள் விளக்கத்தால் அதிர்ச்சி

மதுரை மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்தது தொடர்பாக அனைத்து தலைமையாசிரியர்களிடமும் கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.

மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் இந்தாண்டு 92.34 சதவீதம். இது, கடந்தாண்டை விட 1.43 சதவீதம் குறைவு. மேலும், மாநில அளவில் 8வது இடத்தில் இருந்த மதுரை, இந்தாண்டு 16வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த +1 மாணவன் Dinamalar Tea Kadai Bench

''மாணவ சமுதாயம் இப்படியே ரசுவு காட்டினா, எதிர்காலத்துல, பள்ளிக்கூடங்கள்ல கூட, இவங்களைச் சேர்க்க மாட்டாங்க போலிருக்கேங்க...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார் அந்தோணிசாமி.
''என்ன ஓய் சொல்ல வர்றீர்... என்ன பிரச்னை...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

சான்றிதழ் சரி பார்ப்பு பணி விடுபட்டவர்களும் நேற்று "ஆப்சென்ட்'

ஆசிரியர் தகுதி தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்பில் விடுபட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தும், ஒருவர் கூட நேற்று வரவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வு, கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது. 90 சதவீதம் மார்க் பெற்றவர்களின், சான்றுகள்

‘அரசு சம்பளத்தை வாங்கி ஆன்லைன் வியாபாரத்துல ஆசிரியருங்க இறங்குறாங்க...’

பிளஸ்2வுல சாதனை புரிஞ்ச பள்ளிங்க பத்தி தான் பெருசா போட்டாங்க, ஒருத்தரு கூட பாஸ் ஆகாத பள்ளிங்க இருக்கேஅது பத்தி பெரிசா வரலியே. நான் சொல்றது என்னான்னா, இதுக்கு காரணம் ஆசிரியருங்க தான்...’

கரெக்டா சொன்னே...மதுரை மாவட்டத்துல சுத்து வட்டார பகுதிகள்ல ஆசிரியருங்க என்ன பண்றாங்க தெரியுமா? ஆன்லைன் பொருட்களை எல்லாம் வீடு வீடா டெலிவரி பண்ணி பணம் சம்பாதிக்கறாங்களாம். இதுனால, ஸ்கூலுக்கு தலை காட்டிட்டு பசங்கள வீட்டுக்கு அனுப்பிடறது தான் நடந்துச்சாம். தேர்ச்சி விகிதம் இந்த பகுதிகள்ல குறைவானதுக்கு ஆசிரியருங்க தான் காரணமாம்அரசு சம்பளத்தை வாங்கி ஆன்லைன் வியாபாரத்துல இறங்குறாங்களே, இவங்க மீது ஆக்ஷன் எடுத்தால் இனியாவது பெயில் எண்ணிக்கை குறையும்; பசங்க தப்பிச்சிடுவாங்க... செய்வாங்களா அதிகாரிங்க...

01.01.2014 நிலவரப்படி அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் / அதனையொத்த பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான முன்னுரிமைப் பட்டியல்

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை விண்ணப்பம்'மார்க் ஷீட்' பதிவிறக்கம் செய்யலாம்

'பி.இ.,- பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு, பாலிடெக்னிக் முடித்தவர்கள், ஐந்தாவது செமஸ்டர் மதிப்பெண் பட்டியல் மற்றும் ஆறாவது செமஸ்டர் முடிவுகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்த மதிப்பெண் பட்டியலுடன் விண்ணப்பிக்கலாம்,'' என நேரடி சேர்க்கை செயலர் மாலா தெரிவித்துள்ளார்.டிப்ளமோ, பி.எஸ்சி., யில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்தவர்கள், இரண்டாம் ஆண்டு, பி.இ., பி.டெக்.,கில், நேரடியாக சேருவதற்கான விண்ணப்பங்கள் நேற்று தமிழகம் முழுவதும் 34 மையங்களில் தொடங்கியது. முதற்கட்டமாக 40 ஆயிரம் விண்ணப்பங்கள் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மருத்துவ படிப்புகளுக்குஇன்று முதல் விண்ணப்பம்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகம் இன்று தொடங்குகிறது.தமிழகத்தில் உள்ள, 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு, 383 போக, மீதம், 2,172 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும். இதுதவிர, 12 தனியார் கல்லுாரிகள் மூலம், 900 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும்.

அண்ணாமலை மே மாத தேர்வு நுழைவு சீட்டு இணைய தளம் மூலம் வெளியிடப்பட்டது.



Hall Ticket for Directorate of Distance Education - May 2014 Examinations

Enter Roll Number / Register Number  

Instructions to Candidates writing exams at Annamalainagar, Chennai, Chengalpattu and other States in India. (Except Pudhuchery & Karaikal)

+2 தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும்20 ஆயிரம் பேர் தோல்வி

பிளஸ் 2 தேர்வில், ஒரு பாடத்தில் மட்டும் 20 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த பிளஸ் 2 பொது தேர்வில் 7.44 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். 77 ஆயிரம் பேர், தோல்வி அடைந்தனர்.

MADURAI KAMARAJ UNIVERSITY APPLICATION FOR OBTAINING GENUINENESS CERTIFICATE -Amount Rs-1500/-

13.5.14

முதல் தலைமுறை மாணவர்களுக்குச் சலுகை

தமிழகத்தில்  எம்.பி.பி.எஸ்.பி.டி.எஸ்., பி.ஆகிய தொழில்படிப்புகளில் சேரும் குடும்பத்தின் முதல் பட்டதாரிகள்(முதல்தலைமுறைபிரிவைச்சேர்ந்த மாணவர்கள் கல்விக்கட்டணம்செலுத்துவதிலிருந்து

புதிதாக மதிப்பெண் சான்றிதழ் கிடைக்காத நிலையில், உடனடியாக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?

மதிப்பெண் சான்றிதழையோ அல்லது பள்ளி இறுதி வகுப்பு மாற்றுச் சான்றிதழையோ தொலைத்த மாணவர், டூப்ளிகேட் சான்றிதழுக்கு விண்ணப்பித்து அது கிடைக்கும்வரை, சி.சி.எம். எனப்படும் சான்றிட்ட மதிப்பெண் நகலை (சர்ட்டிபைடு காப்பி ஆஃப் மார்க்‌ஷீட்) அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெற்று உபயோகிக்கலாம்.

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த 77 ஆயிரம் பேருக்கு சிறப்பு வகுப்பு

பிளஸ் 2 தேர்வில், தோல்வி அடைந்த, 77 ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளிகளிலேயே, ஒரு மாதம் சிறப்பு வகுப்புகள் எடுக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு சிக்கலாகும் கல்லூரி 'அட்மிஷன்': கவனிக்குமா உயர் கல்வித்துறை

தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். மாநில பள்ளிகளுக்கான பிளஸ் 2 தேர்ச்சி முடிவு, மே 9 ல் வெளியானது. மாணவர்களுக்கு மே 21ல், மதிப்பெண் பட்டியல் வழங்க இருந்தாலும், மதிப்பெண் விவரப் பட்டியலை, ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து, விரும்பும் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளை தேர்வு செய்து பி.ஏ., பி.பி.ஏ., பி.காம்., படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.

திரும்பி வந்தது பதவி உயர்வு பட்டியல்: தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் சிக்கல்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2014 மே மாதம் பணி ஓய்வு பெறுவோர் மூலம் ஏற்படும் காலியிடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்காக 1,080 முதுகலை ஆசிரியர், 280 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொண்ட பதவி உயர்வு பட்டியல், பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது.

தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் விவகாரம் கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை

தலைமை ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை ஆசிரியர்கள் நேற்று மாலை முற்றுகையிட்டனர்.  குமரி மாவட்டத்தில் +2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த 2  பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பள்ளிக்கல்வித்துறை மெத்தனம் 44 ஆயிரம் ஆசிரியர்கள் ஊதியம் கிடைக்காமல் தவிப்பு

தமிழகத்தில் 44 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் இதுவரை கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் தற்காலிக பணியிடங்களை பள்ளிக் கல்வித் துறை நீட்டிக்காததால் ஊதியமின்றி தவிக்கின்றனர். தமிழகத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள¢ளிகள் 
உயர்நி லைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகள்

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு இன்று {மே 13} மீண்டும் வாய்ப்பு - தினமலர்.


ஆசிரியர் பற்றாக்குறை மாற்றுத்தீர்வு வலைதளத்தில் பள்ளிகள் ஒருங்கிணைப்பு


கம்யூட்டர் வழிக் கல்வி பள்ளிகளுக்கு நிதி நிறுத்தம்


சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

பள்ளி, கல்லூரிகளில் சான்றிதழ் பெறும்போது அதில் பெயரில் பிழைகள் நேர்ந்துவிட்டால் (ஒற்றுப் பிழைகளோ, குறில், நெடில் பிழைகளோ) அந்தந்தப் பள்ளி / கல்லூரிகளிலேயே திருத்தம் செய்து வாங்கிக்

பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?

பள்ளி / கல்லூரி சான்றிதழ்களில் பிறந்த தேதியோ, வருடமோ, மாதமோ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தந்த எல்லைக்குட்பட்ட சிவில்(முன்சீஃப்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மாற்றிக்கொள்ள
வேண்டும்.

2013-2014 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு உட்பட்ட, 657 கல் லூரிகளில் பி.எட்., எம்.எட்., எம்.பில்., படிப்புகளுக்கான தேர்வு அட்டவணை

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையில் (தொடக்கக்கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு 2014-2015ஆம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணிநியமனம் வழங்குவது - தகுதிவாய்ந்தோர் பட்டியல் கோருதல் -சார்ந்து.

12.5.14

ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள்- இயக்குநர் பதில்

ஆசிரியர்களின் பொதுமாறுதலுக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 2 வதுவாரத்திற்குமேல் பெறப்பட்டு ஜூலை 2வது வாரத்தில் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என 
பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களும்,தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் தெரிவித்துள்ளனர்.

டபுள் டிகிரி ரத்து - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்


ஒரே நேரத்தில் 2 செட் பள்ளிச்சீருடைகள்: ஜூன் 2-ந் தேதி வழங்கப்படுகிறது

பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், ஜியோமெண்ட்ரி பாக்ஸ் ஆகியவை போய் சேர்ந்தன. அவை அனைத்தும் பள்ளிகள் தொடங்கும் ஜூன் 2-ந்தேதி வழங்கப்பட உள்ளன.

பள்ளிக்கூடத்திலேயே கல்வித்தகுதியை ஆன்–லைனில் பதிவு செய்யலாம் கல்வித்துறை, வேலைவாய்ப்புத்துறை சிறப்பு ஏற்பாடு

பிளஸ்–2 தேர்ச்சி பெற்ற மாணவ–மாணவிகள் தங்கள் கல்வித்தகுதியை பள்ளிக்கூடங்களிலேயே ஆன்–லைனில் பதிவு செய்து கொள்ள வேலை வாய்ப்புத்துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மே. 14ல் விநியோகம்

ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மே. 14ம் தேதி முதல் பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விநியோகிக்கப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) முத்துரெங்கன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 தேர்ச்சி குறைவு: 12 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்ததால், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; மேலும் 12 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Engineering Admissions- 2014: Online Application / Advertisement.

இட ஒதுக்கீட்டில் குழந்தையை சேர்க்க 4 ஆவணம்! பெற்றோருக்கு கல்வித்துறை அறிவுரை

தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி சட்ட இட ஒதுக் கீட்டில் மாணவர்களை சேர்க்க, விண்ணப்பத்துடன் நான்கு ஆவணங்கள் கண்டிப்பாக இணைக்க வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிளஸ் 2 தேர்ச்சி குறைவு : தலைமை ஆசிரியரின் வீட்டுச்சுவரில் சஸ்பெண்ட் உத்தரவு

குமரியில் பிளஸ் 2 தேர்ச்சி குறைந்த பள்ளி தலைமை ஆசிரியரின் சஸ்பெண்ட் உத்தரவு அவரது வீட்டில் இரவு ஒட்டப்பட்டது.. குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்ததாக கூறி இரணியல் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் லீலாவதி,

சட்டம், கால்நடை மருத்துவ சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம்

சட்டம் மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகிக்கப்படுகின்றன. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை., சார்பில், பல்கலை மற்றும் தமிழகத்தில் உள்ள ஏழு சட்டக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை சமீபத்தில் அறிவித்தது. 

"சி.பி.எஸ்.இ., "ரிசல்ட்' வரவில்லை என்றாலும் கவலை வேண்டாம்'

தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் கொடுத்த ஆலோசனைகள்: 

சி.பி.எஸ்.இ., "ரிசல்ட்' வரவில்லை என்றாலும், கவலை வேண்டாம். இருக்கும் தகவல்களை வைத்து விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் கிடைக்க தாமதமாகும்; டவுண்லோடு செய்த மதிப்பெண் பட்டியல் போதும்.

\பணி நிரந்தரமான 3 நாளில் ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ஓய்வூதியம்; ஐகோர்ட்டு உத்தரவு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா குருவிகுளம் அருகேஉள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் மரியபெனடிக்ட்(வயது 63). இவர்,மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறிஇருந்ததாவது:–

மே 12 இன்றுடன் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவுபெறுகின்றது...

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவு பெறுகிறது..இன்று இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களும், போனமுறை ( ஜனவரி ) சான்றிதழ் சரிபார்ப்பில் சான்றிதழ் இல்லாமல் அல்லது வேறுபிற காரணங்களால் தங்களுக்கான வாய்ப்பை இழந்தவர்களும் கலந்து கொள்ள இன்று கடைசியாக வாய்ப்பளிக்கபடுகிறது..

+ 2 மாணவர்கள் விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது குறித்த தகவல்


11.5.14

அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி தொடக்கம் பள்ளி கல்வித்துறை உத்தரவு

அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி தொடங்க வேண்டும்’ என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இப்போது ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமலில் உள்ளது. அப்படி இருந்தும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தை நுனி நாக்கில் பேச வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகளில் அவர்களை சேர்க்கின்றனர்.

அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனரின் கட்டுப்பாட்டு அடிப்படையின் கீழ் அரசு அனுமதி பெறாமல் செயல்படும் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் மீது விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. இந்நிலையில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 1,296 தொடக்க பள்ளி மற்றும் 723 மழலையர் பள்ளிகளுக்கு அறிக்கை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது.

கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர கோரிக்கை


அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும்! சுப்ரீம கோர்ட் உத்தரவு!!


எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் 14-ந்தேதி முதல் பெறலாம்

பிளஸ்–2 முடிவு வெளியானதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன.
தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் கலை, அறிவியல் கல்லூரிகளில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறும் பணி தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அண்ணாமலைப் பல்கலை.க்கு தனி கவுன்சலிங் ஏன்?

அரசுடமை ஆக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு இந்த ஆண்டும் தனி கவுன்சலிங் முறையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

அரசாணை எண் 92: சில பிரச்சினைகள் - ஏமாற்றப்படும் எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 50 சதவீதம் பேர் எஸ்சி, எஸ்டி மாணவர்களாக உள்ளனர். அதே போல் பிளஸ் 2 தேர்வில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட எஸ்சி, எஸ்டி மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால், இதில் 20 சதவீதம் பேர்தான் உயர்கல்வி படிக்கச் செல்கின்றனர். மீதமுள்ள 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பைத் தொடர வசதி இல்லாமல் மேல்நிலைப் பள்ளியுடன் கல்வியை நிறுத்தி விடுகின்றனர்.

கடந்த ஆண்டு பொறியியல் கட் -ஆப் மார்க் எவ்வளவு?- கல்லூரி, பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக வெளியீடு

கடந்த ஆண்டு கட்- ஆப் மார்க்
 பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகளின் வசதிக் காக அண்ணா பல்கலைக் கழகம்,கடந்த ஆண்டு கட்- ஆப் மார்க் விவரங்களை இணைய தளத்தில் www.annauniv.edu வெளியிட்டுள்ளது.
இதில், கல்லூரிகள், பாடப் பிரிவுகள், இடஒதுக்கீடு வாரி யான கட் -ஆப் விவரங் களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இதன்மூலம், இந்த ஆண்டு எவ்வளவு கட்- ஆப் மார்க் வரும் என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடியும்.

பிளஸ்–2 விடைத்தாள் மறுகூட்டல் செய்வதில் புதிய முறை மதிப்பெண் குறைந்தாலும் பழைய மதிப்பெண்ணே வழங்கப்படும்

பிளஸ்–2 விடைத்தாள் மறுகூட்டல் செய்வதில் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, மறுகூட்டலில் மதிப்பெண் குறைந்தாலும் பழைய மதிப்பெண்ணே வழங்கப்படும்.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

பி.இ. படிப்புக்கான விண்ணப்பத்துடன் இணையதளம் மூலம் பெறப்படும் மதிப்பெண் பட்டியலை இணைத்தால் போதுமானது

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் மே 21-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

+2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியானது. 90.60 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்


குமரியில் பிளஸ்2ல் தேர்ச்சி விகிதம் குறைவு : தலைமை ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2ல் தேர்ச்சி விகிதம் குறைந்ததாக கூறி 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. குமரி மாவட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 95.14 % ஆகும். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 1.11% அதிகரித்துள்ளது. இருப்பினும் அதே 6ம் இடத்தையே இப்போதும் மாநில அளவில் தக்க வைத்துள்ளது.  இந்நிலையில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாடவாரியாக தேர்ச்சி விகிதம் குறைந்த ஆசிரியர்கள் மீது திடீர் நடவடிக்கை பாய்ந்துள்ளது. 

பிளஸ் 2 தேர்வு : மறுகூட்டலா? மறு மதிப்பீடா? எப்படி எங்கு விண்ணப்பிப்பது

தேர்வுத்துறையின் குழறுபடியான அறிக்கைகளால் பிளஸ் 2 மாணவர்கள் அலைக்கழியும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்கள், மறுகூட்டலுக்கு நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது.

TNTET- வேண்டும் பதிவுமூப்பு -தினமலர்

டி..டி., தேர்வை எதிர்த்துகோர்ட்டில்மேல் முறையீடு சம்பந்தமாக,தேர்வர்கள் வழக்கு தொடர்வதுகின்னஸ் சாதனையின் உச்சிக்கேசென்று விட்டது.டி.ஆர்.பி., அலுவலகத்தில்பஞ்சாயத்து தீர்ப்பதற்குஎன்றேஒரு
பிரிவை திறந்துஇது தொடர்பாக வரும் தேர்வர்களுக்குபதில்சொல்வதற்கென்றே, 100 பேரையாவது நியமிக்க வேண்டும் என்றநிலை உள்ளது.

ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் மே 21-ம் தேதி பள்ளிகளில் வழங்கப்படும் - அரசு தேர்வுகள் இயக்‍ககம் அறிவிப்பு

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ப்ளஸ் டூ தேர்வின் முடிவுகள்நேற்று வெளியிடப்பட்டனஇந்நிலையில் மாணவ-மாணவிகளின்மதிப்பெண்
சான்றிதழ்கள் வரும் 21-ம் தேதி காலை 9 மணிக்கு அந்தந்த
பள்ளிகளிலேயே வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம்அறிவித்துள்ளது

+2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கவனத்திற்கு ........................

12-5-2014 முதல் தாங்கள் படித்த பள்ளியில் [தனித்தேர்வராக இருந்தால் தேர்வு மையயத்தில்] கீழ்க்கண்ட படி தொகை செலுத்தி துணை தேர்வுக்கு பதிவு செய்துகொள்ளலாம் . தோல்வி அடைந்த அனைத்து மாணவர்களும் இந்த அறிய வாய்ப்பை தவறாமல் பயன்படுதிக்கொள்ளவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் . 
ஒரு பாடம் ----------135
இரண்டு பாடம் ---185
மூன்று பாடம் ---235
நான்கு பாடம் ---285
ஐந்து பாடம்----335
ஆறு பாடம் ---385


விண்ணப்பிக்க கடைசி நாள் 16-5-2014 5 PM

இரட்டைப் பட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டு ஏற்கப்பட்ட வழக்கு விவரம்

பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள், 84.54 சதவீதம் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள், 84.54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

துறை வாரியாக இயங்கும் பள்ளிகளில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சதவீதம்