லேபிள்கள்

12.5.14

ஒரே நேரத்தில் 2 செட் பள்ளிச்சீருடைகள்: ஜூன் 2-ந் தேதி வழங்கப்படுகிறது

பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், ஜியோமெண்ட்ரி பாக்ஸ் ஆகியவை போய் சேர்ந்தன. அவை அனைத்தும் பள்ளிகள் தொடங்கும் ஜூன் 2-ந்தேதி வழங்கப்பட உள்ளன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்துக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளன. விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் 2-ந்தேதி திறக்கப்பட உள்ளன. இந்த அறிவிப்பை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் ஏற்கனவே அறிவித்திருந்தார். பள்ளிகள் திறக்கும் அன்றே மாணவ-மாணவிகளுக்கு விலைஇல்லா நோட்டு புத்தகங்கள், விலை இல்லா ஜியோமெட்ரி பாக்ஸ்கள், விலை இல்லா சீருடைகள் ஆகியவற்றை தங்கு தடையின்றி வழங்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா கூறி இருந்தார்.
அதன்படி தமிழ்நாடு பாடநூல் நிறுவன நிர்வாக இயக்குனர் (பொறுப்பு) பூஜா குல்கர்னி அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். இதன் பாட புத்தகங்கள் அச்சடித்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள். சீருடைகள், ஜியோமெட்ரி பாக்ஸ் ஆகியவை அனுப்பப்பட்டன. அவை அனைத்தும் ஆங்காங்கே உள்ள குடோன்களில் வைக்கப்பட்டு இருந்தன.
குடோன்களில் இருந்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவின் படி பள்ளிக்கூடங்களுக்கு அந்தந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் முன்னிலையில் அனுப்பப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் பள்ளிக்கூடங்கள் திறக்கும் ஜூன் 2-ந் தேதி அன்றே இலவசமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக மாணவ-மாணவிகளுக்கு இலவச பள்ளிச்சீருடைகள் 2 செட் ஒரே நேரத்தில் கொடுக்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக