லேபிள்கள்

23.11.13

திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

மாவட்ட செயற்குழு கூட்டம்
நாள்; 24.11.13 (ஞாயிறு) காலை 9.30 மணி
இடம்; ஊ.ஒ.ந.நி.பள்ளி, பல்லடம் (மேற்கு),

       மாநில பொறுப்பாளர்களும் ஒன்றிய பொறுப்பாளர்களும் மற்றும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

2012- எட்டாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வின் முடிவுகள் வெளியிடு

பள்ளிக்கல்வி - RMSA கீழ் 2009-10 / 2011-12ம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 544 உயர்நிலைப் பள்ளிகளுக்கு 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பியது போக எஞ்சிய பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் வேலைவாய்ப்பக பட்டியல் பெற்று விதிகளின் படி நிரப்பிக்கொள்ள உத்தரவு

க டந்த ஆண்டு (2012) எட்டாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வின் முடிவுகள் இன்று காலை 10.30 மணி அளவில் www.tndge.in இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.


தொடக்க பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு இன்று பதவி உயர்வு கலந்தாய்வு

தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு கலந்தாய்வு இன்று அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடக்கிறது.

22.11.13

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சிறப்பு செயற்குழுவில் எடுக்கப்பட்டுள்ள சில முக்கிய முடிவுகள்

மாண்புமிகு தமிழக முதல்வர் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த தேர்தல் வாக்குறுதின்படி பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், 2004ம் ஆண்டு முதல் 1.6.2006 ஆம் ஆண்டு வரைக்கான தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க கோரியும்

இரண்டு மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும், ஒரு முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாறுதலும் வழங்கி உத்தரவு

ஈரோடு மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி அவர்கள் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு பள்ளி மாணவர் 6,700 பேர் கல்வி உதவித் தொகை பெற தேர்வு


மாணவி பலியான விவகாரம்: உதவி தலைமை ஆசிரியர் இடைநீக்கம்


கோவையில், சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற பள்ளி மாணவி, பலியான சம்பவம் தொடர்பாக உதவி தலைமையாசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டு - ஊராட்சி ஒன்றியம் /நகராட்சி நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்வு மற்றும் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடக்கம் -அனுமதிக்கப் பட்ட தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 23.11.2013 அன்று நடத்த இயக்குநர் உத்தரவு

3625 ஆசிரியர்கள் பணிமூப்பு பட்டியல் "ரெடி' : பதவி உயர்வு அறிவிக்காத "மர்மம்' என்ன

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 3625 பேரின் பணிமூப்பு பட்டியல் தயார் நிலையில் இருந்தும், பல மாதங்களாக பதவி உயர்வு அறிவிக்கப்படாத மர்மம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

பள்ளிகளில் காலியிட விபரங்கள் சேகரிப்பு

அரசு, நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் விபரங்களை பள்ளி கல்வித்துறை சேகரித்து வருகிறது.2013 நவ.,1ல், தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர் காலிப் பணியிடங்கள்,

பிளஸ் 2, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு

மாநில அளவில், பொதுத் தேர்வாக, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, டிசம்பர், 10ம் தேதியில் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வு, டிசம்பர், 12ம் தேதியில் இருந்தும் துவங்குகின்றன. மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வை போலவே, இந்த தேர்வுகளும் நடக்கும். 

21.11.13

TET paper II Marks -thanks to TRB.TNPSC

PTA மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்,TRB மூலம்ஆசிரியர்கள் முறையான நியமனம் செய்யப்படும் வரை அல்லது 7 மாதங்கள் வரை இதில் எது முன்னரோ அதுவரை பணியாற்றலாம்

2002ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான 3% காலி பணியிடங்களை நிரப்ப - சிறப்பு தேர்வு நடத்த விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்துப்பட்ட உரிய நாளுக்கு முன்னர் பணியினை துறப்பு செய்த ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் விவரம் அனுப்ப உத்தரவு

14 லட்சம் மாணவர்களுக்கு 70 உடற்கல்வி ஆசிரியர் போதுமா? தமிழக அரசுக்கு கேள்வி

எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும், 14 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 70 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கை போதுமா?' என, தமிழக அரசிடம், உடற்கல்வி ஆசிரியர் சங்கம், கேள்வி எழுப்பி உள்ளது.

தேர்வறையில் 20 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது - அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர்

தேர்வறையில் 20 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது என, அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார். பிளஸ்2, பத்தாம் வகுப்பு அரசு தேர்வு முன்னேற்பாடு தொடர்பான 4 மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.

மதுரையில் தொடருது மாணவர்களின் தற்கொலை மிரட்டல்: அலறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

வகுப்பறையில் கண்டிப்பதால், தற்கொலைக்கு முயற்சிக்கும் மாணவர்களால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அலறுகின்றனர். மதுரையில் நேற்று, சமயநல்லூர் அரசு இருபாலர் பள்ளியின் பிளஸ் 1 மாணவர், அரளி விதையை மென்று, தற்கொலைக்கு முயன்றார்.

கடந்த ஆண்டு டி.இ.டி.,தேர்வானவர்களுக்கு நவ.23 ல் சான்றிதழ் வினியோகம்

கோர்ட் உத்தரவையடுத்து, கடந்த ஆண்டு டி..டி.,தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் அந்தந்த சி..., அலுவலகத்தில் நவ.23 முதல் வழங்கப்படுகிறது.

குரூப் 2 தேர்வு: இணையத்தில் ஹால்டிக்கெட் வெளியீடு

வரும் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வுக்கான ஹால்டிக்கெட், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதிவு விபரம் சரிபார்ப்பு

தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெள்ளிக்கிழமை(நவ.22) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு விபரம் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் 499 ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக்கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 499 ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக்கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

20.11.13

பள்ளிக்கல்வி - 01.11.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 499 ஆசிரியர்கள் நீக்கம், ஊதியத்தையும் திரும்ப பெற உத்தரவு


இந்திய பள்ளிகளில் பணியாற்ற சீன ஆசிரியர்கள் தயார்

இந்திய பள்ளிகளில் பணியாற்றுவதற்காக சி.பி.எஸ்.சி . பள்ளி நிர்வாகம் 25 சீன ஆசிரியர்களை நியமனம் செய்ய முடிவெடுத்துள்ளது.

புதிய பள்ளிகளுக்கு கட்டட வசதி இல்லை: மத்திய அரசு திட்ட நிதி வழங்காததால் தொய்வு

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்ககத்தின் சார்பில், நிலை உயர்த்தப்பட்ட, புதிய பள்ளிகளுக்கான கட்டட நிதியை, இரு ஆண்டுகளாக, மத்திய அரசு வழங்கவில்லை; இதனால், பெரும்பாலான புதிய பள்ளிகளில், கட்டட வசதியின்றி, மாணவர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.