லேபிள்கள்

21.11.13

குரூப் 2 தேர்வு: இணையத்தில் ஹால்டிக்கெட் வெளியீடு

வரும் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வுக்கான ஹால்டிக்கெட், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்வாணையத்தின் செயலாளர் விஜயகுமார் புதன்கிழமை அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப் 2 தேர்வு வரும் டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதிவாய்ந்த தேர்வர்களின் தேர்வு அனுமதிச் சீட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதிச் சீட்டுகளை தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc. gov.in, www.tnpsc exams. net ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள், விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, பதிவெண் உள்ளிட்ட விவரங்களை தேர்வாணையத்தின் மின்னஞ்சலில் (contacttnpscgmail.com) தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வணிகவரித் துறை துணை ஆணையாளர், சார் பதிவாளர் உள்பட காலியாகவுள்ள ஆயிரத்து 64 குரூப் 2 பணியிடங்களுக்காக இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக