லேபிள்கள்

21.11.13

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதிவு விபரம் சரிபார்ப்பு

தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெள்ளிக்கிழமை(நவ.22) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு விபரம் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது.

       இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களுக்கு பதிவு விபரம் சரிபார்க்கும் பணி வெள்ளிக்கிழமை(நவ.22) காலை 10 மணிக்கு தேனியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
      இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், தங்களது வேலை வாய்ப்பு பதிவு அடையாள அட்டை, குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரம் ஆகியவற்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று தங்களது பதிவு விபரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக