லேபிள்கள்

17.11.13

இன்று தமிழக அரசால் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படவிருந்த 'தேசியத் திறனறித் தேர்வு' அடுத்த ஞாயிற்றுக் கிழமை 24/11/2013 அன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று நடக்க இருந்த, மாநில அளவிலான, தேசிய திறனறிதல் தேர்வு, 24ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறுகையில், ""புயல் மற்றும் கனமழை காரணமாக, தேர்வு தள்ளி வைக்கப்பட்டு, 24ம் தேதி நடத்தப்படுகிறது.
ஏற்கனவே, மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள மையங்களிலேயே, தேர்வு நடக்கும்,'' என, தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர், இந்த தேர்வை எழுத உள்ளனர். ஒன்பதாம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதம், அறிவியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதி வாய்ந்த, ஒரு லட்சம் பேர், திறனறிதல் தேர்வில் பங்கேற்கின்றனர். இதில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு ஆண்டுகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக