அனைவருக்கும்: இடைநிலைக் கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில், 9ம் வகுப்பில், தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில், வாசிக்க மற்றும் எழுத தெரியாத மாணவர்களுக்கு, மாலை நேரத்தில், சிறப்பு வகுப்புகள் எடுக்க, ரூ.2,500 சம்பளத்தில் ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு ஆசிரியர் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்கள் வரும் பிப்ரவரி வரை 3 மாதமே பணி செய்ய வேண்டும். தினமும் மாலை 5.30 மணி வரையிலும், சனிக்கிழமைகளில், பகல் 12.30 மணி வரையிலும், பள்ளியில் இருக்க வேண்டும்.
இளங்கலை அல்லது முதுகலை பட்டதாரி ஒருவரை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நியமிக்கலாம். இதற்கான நியமனத்தை, இன்னும் ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கும், பலமான "சிபாரிசு' தேடி பலர் அலைகின்றனர். பல பள்ளிகளில், சிபாரிசு கடிதங்களுடன் 50 பேர் விண்ணப்பித்துள்ளதால், தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: 3 மாதங்கள் என்றாலும், அரசு சம்பளம் என்பதால், இதற்கு அரசியல்வாதிகள் உட்பட பலரிடம் "சிபாரிசு' கடிதம் பெற்று வருகின்றனர். பட்டப்படிப்பு முடித்தவரை தான் ஆசிரியராக நியமிக்கின்றனர். இவர்களுக்கு, குறைந்தது ரூ.5 ஆயிரம் சம்பளம் நிர்ணயித்தால், அப்பணிக்கு என ஒரு "கவுரவம்' இருக்கும், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக