லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
30.3.13
கல்வி கடன் பெற எளிய வழி என்ன? - தினமலர் வழிகாட்டியில் யோசனை
மதுரையில் "தினமலர்" சார்பில் நேற்று நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கல்வி கடன் எளிய வழியில் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மதுரை கனரா வங்கி சீனியர் மேனேஜர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
கல்வி கற்பதற்கு பணம் தடையாக இருக்க கூடாது என்பதற்காக, வங்கிகள் சார்பில் கல்வி கடன் வழங்கப்படுகிறது. 2012ம் ஆண்டு முதல் "மாதிரி கல்வி கடன் திட்டம்" அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்வி கற்க அனுமதி பெற்றுவிட்டால் தாராளமாக வங்கிகளை அணுகி மாணவர்கள் கல்வி கடன் பெற்றுக் கொள்ளலாம்.
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு பிளஸ் 2வில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால், அவர்களுக்கும் தற்போது வங்கிகள் கடன் வழங்குகின்றன. தகுந்த ஆவணங்கள் இருந்தால், மூன்று முதல் 5 ஆண்டுகள் படிப்பிற்கு ரூ.4 லட்சம் கடன் பெற மாணவர் மற்றும் அவரது பெற்றோர் கையெழுத்து போதுமானது.
ரூ.7.50 லட்சம் வரை கடன் பெற மாணவர், பெற்றோர் மற்றும் ஒரு ஜாமீன்தாரர் கையெழுத்து தேவைப்படும். ரூ.7.50 லட்சத்திற்கு மேல் கடன் பெற, சொத்துக்களை ஈடாக கொடுக்க வேண்டும். வேலைக்கு சேர்ந்து வருவாய் ஈட்டும்போது கடனை திருப்பி அடைக்கலாம்.
வெளிநாட்டு கல்விக்கும் வங்கி கடன் வசதி உள்ளது. மேல்படிப்பிற்கும் கடன் பெறலாம். கடன் வழங்குவதை வங்கிகள் கடமையாக கருதுகின்றன. மாவட்டம்தோறும் முன்னோடி வங்கிகள் சார்பில் குறைதீர் மையங்கள் உள்ளன. கல்வி கடன் தொடர்பாக அந்த மையத்திற்கு சென்று மேலும் விவரங்களை பெற்றோர் கேட்டு தெரிந்துகொள்ளலாம், என்றார்.
"பட்டங்கள் சார்ந்து இல்லாமல், எதிர்காலத்தில் வளர்ச்சியை எட்டும் துறைகள் சார்ந்த படிப்புக்களை தேர்வு செய்யுங்கள்" என, சென்னை கேலக்ஸி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் இயக்குனர் ரமேஷ் பிரபா கூறினார்.
மதுரையில் தினமலர் மற்றும் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் நிறைவு நாளில், "பிளஸ் 2வில் 60 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கான மேற்படிப்புகள்" குறித்து அவர் நேற்று பேசியதாவது:
மருத்துவம், பொறியியல் படிப்புக்களை தவிர, எதிர்காலத்தை பிரகாசமாக்கும் ஏராளமான படிப்புக்கள் உள்ளன. மருத்துவம் முயற்சித்து கிடைக்காத மாணவர்கள், இந்திய மருத்துவ படிப்புக்களான ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஓமியோபதி படிப்புக்களை தேர்வு செய்யலாம்.
பல் மருத்துவம், பி.பார்ம்., பிஸியோதெரபி, நர்சிங், கால்நடை மருத்துவம் போன்ற படிப்புக்களை தேர்வு செய்யலாம். நர்சிங் முடித்தவர்களுக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. இதுதவிர வேளாண்மை, ஓவியம், இசை, பிலிம் இன்ஸ்டிடியூட், கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட், மீன்வளம், ஆடை வடிவமைப்பு, அனிமேஷன், போன்ற உடனடியாக வேலைவாய்ப்பு தரும் படிப்புக்களை தேர்வு செய்து படிக்கலாம்.
கலை மற்றும் அறிவியல் பிரிவில் கணிதம், ஆங்கில இலக்கியம், பி.காம்., சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., போன்ற படிப்புக்களை மாணவர்கள் படிக்கலாம். இந்தியாவில் இந்தாண்டு 28 ஆயிரம் கோடி விளம்பர துறையில் செலவிடப்படுகிறது. எனவே, மாயையான படிப்புகளின் மயங்கி விடாமல், எதிர்காலத்தில் எந்த துறையில் வளர்ச்சி உள்ளது என்பதை அறிந்து துறை சார்ந்த படிப்புக்களை தேர்வு செய்யுங்கள்.
படிக்கும்போதே கூடுதல் கல்வி தகுதிகளை வளர்த்துக்கொண்டால் பிரகாசமான எதிர்காலம் அமையும் என்றார்.

ஏப்.1ம் தேதி முதல் பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்புக்கு வட்டி குறைப்பு
வரும் 1ம் தேதி முதல், பிபிஎப் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 0.1 சதவீதம் குறைக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு: மார்ச் 25ம் தேதி மத்திய அரசின் தீர்மானத்தின்படி, பிபிஎப் வட்டி விகிதம்
இப்போதுள்ள 8.8 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாகவும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 9.3 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. 2013,14ம் நிதியாண்டு முழுவதும் இது அமலில் இருக்கும். புதிய வட்டி விகிதம் வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டங்களை இயக்கி வரும் வங்கிகள், இதுகுறித்த அறிவிப்பை தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மீண்டும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்
"டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பகுதிக்கு, மீண்டும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தேர்வாணையத்திற்கு, கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளோம்,' என, சட்டசபையில், பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு, புதிய பாடத்திட்டங்கள், சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில், குரூப்-2, குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ., ஆகிய தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பாடப் பகுதிகளுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டும், நீக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தன.
குரூப்-2 தேர்வில் இருந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழித்தாள் பகுதி நீக்கப்பட்டு, 200 கேள்விகளும், பொது அறிவு பாடங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. குரூப்-4 தேர்வில், மொழித்தாள் பகுதிக்கான கேள்விகள் எண்ணிக்கை, 100ல் இருந்து, 50 ஆக குறைக்கப்பட்டுள்ளன.
வி.ஏ.ஓ., தேர்வில், மொழித்தாள் கேள்விகளின் எண்ணிக்கை, 100ல் இருந்து, 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற மாணவர்கள், பெரிதும் பாதிக்கப்படுவர் என்றும், தமிழ் மொழித்திறனுக்கான முக்கியத்துவத்தை குறைக்கக் கூடாது என்றும், பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், இந்த பிரச்சனை, சட்டசபையில், நேற்று எதிரொலித்தது. மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., சவுந்திரராஜன் ஆகியோர், தமிழ் மொழித்திறன் முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருப்பது குறித்து, கேள்வி எழுப்பினர்.
இதற்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் கூறுகையில், "தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பகுதிக்கான முக்கியத்துவத்தை குறைக்கக் கூடாது என்றும், அதற்குரிய முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தேர்வாணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளோம்" என, தெரிவித்தார்.
இதற்கு, "ஏற்கனவே இருந்த நிலையை, உறுதி செய்ய, நடவடிக்கை எடுத்தால் போதும்" என, சவுந்திரராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து, தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணனிடம் கேட்ட போது, "எந்தெந்த தேர்வுகளில், தமிழ் மொழிக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது என்பது குறித்து, ஆய்வு செய்து வருகிறோம். இந்தப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே, தற்போதைய நிலையில், எதுவும் கூற முடியாது" என, தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில், முதல்வரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே, தேர்வாணையத்திற்கு, அமைச்சர் கடிதம் எழுதியிருப்பார் என, துறை வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே, போட்டித் தேர்வுகளில், தமிழ்மொழி பகுதிக்கான கேள்விகள், பழையபடி மீண்டும், பாடத்திட்டத்தில் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பாடத்திட்டத்தில் மீண்டும் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பான முடிவுக்கு, தேர்வாணைய உறுப்பினர்கள், முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும். எனவே, இந்த ஒப்புதலை பெற்றபின், உரிய தகவல், தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என, கூறப்படுகிறது.
அதன்பின், சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா, அறிவிப்பை வெளியிடுவார் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?
சென்னை: வருமான வரி தாக்கல் செய்யத் தேவைப்படும் ஆவணங்கள் குறித்து பார்ப்போம்.
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலம் செய்பவர்கள் கீழ்கண்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது அவசியம். எனினும் இது அவர்கள் பெறும் வருமானம் மற்றும் விதிக்கப்பட்டிருக்கும் வரிக்கு ஏற்ப மாறுபடுகிறது.
29.3.13
28.3.13
ஏப்ரல் 5-ம் தேதி முதல்கட்ட தேர்தல் 5855 கூட்டுறவு சங்கத்துக்கு நாளை வேட்பு மனு தாக்கல்
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 16 ஆண்டுக்கு பிறகு தேர்தல் நடக்கிறது. மாநிலம் முழுவதும் இணை பதிவாளர், இதர செயல் பதிவாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 22,532 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில், மாநில அளவிலான கூட்டுறவு விற்பனை சங்கங்கள் தவிர, எஞ்சியுள்ள 22,192 சங்கங்களுக்கு நான்கு கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 5,855 சங்கங்களுக்கு ஏப்.5ம் தேதி தேர்தல் நடக்கிறது.
பிளஸ் 2 கணிதம், இயற்பியல் தேர்வுகளுக்கு, "போனஸ்' மதிப்பெண்?
பிளஸ் 2 கணிதம் மற்றும் இயற்பியல் தேர்வுகளுக்கு, போனஸ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என, சட்டசபையில் நேற்று வலியுறுத்தப்பட்டது. இதனால், கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்குமா என,
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 11ம் தேதி இயற்பியல் தேர்வும், 14ம் தேதி கணிதத் தேர்வும் நடந்தன. இந்த இரு தேர்வுகளும் கடினமாக இருந்ததாக, மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். குறிப்பாக, கணித தேர்வில், கட்டாய கேள்விகளுக்கு, பதில் அளிக்க முடியாத நிலை இருந்ததாகவும், தெரிவித்தனர். கட்டாய கேள்வி இடம்பெற்ற பாடப் பகுதிகள், முதலில், நீக்கப்பட்ட பாடப் பகுதிகளாக இருந்தன. அதனால், அந்த பாடப் பகுதிகளை, ஆசிரியர்களும் நடத்தவில்லை. இடையில், நீக்கப்பட்ட பாடப் பகுதிகள், மீண்டும் சேர்க்கப்பட்டன. இது தெரியாமல், ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்த நிலையில், அந்த பகுதியில் இருந்து, கட்டாய கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதனால், 16 மதிப்பெண்கள், மாணவர்களுக்கு இழப்பு ஏற்பட்டன.
கடந்த ஆண்டை விட, கணிதத்தில், "சென்டம்' எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சரியும் எனவும், ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், சட்டசபையில், நேற்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசுகையில்,""பிளஸ் 2 கணிதம், இயற்பியல் தேர்வுகள் கடினமாக இருந்ததுடன், நீக்கப்பட்ட பாடப் பகுதியில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட் டுள்ளன. எனவே, "போனஸ்' மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, வலியுறுத்தினார். இதற்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன், உடனடியாக பதில் அளிக்கவில்லை. அப்போது, சட்டசபையில், முதல்வர் இல்லை. எனவே, முதல்வரின் ஆலோசனையைப் பெற்று, போனஸ் மதிப்பெண்கள் தொடர்பாக, ஓரிரு நாளில், சட்டசபையில் அறிவிப்பு வரலாம்.

2 விழுக்காடு பட்டதாரி / தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் வேண்டும்.
பள்ளிக்கல்வித் துறையின் பணியாற்றும் தகுதியுள்ள கண்காப்பாளர்கள்/ உதவியாளர்கள்/ இளநிலை உதவியாளர்கள் ( அமைச்சு பணியாளர்கள்) 2 விழுக்காடு பட்டதாரி / தமிழாசிரியராக நியமனம் செய்ய விவரம் வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD DSE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD DSE PROCEEDINGS
Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu
Cut-off Seniority dates for Computer Instructor and Secondary Grade Teachers
List of Candidates nominated for the post of Secondary Grade Teacher
27.3.13
TNPSC- Departmental Test Bulletin MAY 2011 /2012
Bulletin No. | View/Download |
---|---|
Bulletin No. 15 dated 7th August 2012(contains results of Departmental Examinations, May 2012) | View/Download |
Bulletin No. 16 dated 16th August 2012(contains results of Departmental Examinations, May 2012) | View/Download |
Bulletin No. 17 dated 7th August 2011(contains results of Departmental Examinations, May 2011) | View/Download |
Bulletin 18 dated 16th August 2011 (contains results of Departmental Examinations, May 2011) | View/Download |
தமிழகத்தில் தமிழ் மொழிப்பள்ளிகள் மட்டுமல்லாமல் பிற மொழிப்பள்ளிகளும் உள்ளன. அதில் சில இருமொழி பள்ளிகளாகவும் உள்ளன. பிற மொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து கோரப்பட்ட தகவல்களுக்கு வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழங்கிய
25.3.13
2013-14ம் ஆண்டில் பகுதி நேர B.E.,-B.Tech., படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், ஏப்ரல், 1ம் தேதி முதல், 15ம் தேதி வரை, 10 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், பகுதிநேர B.E.,-B.Tech. படிப்புகள் நடத்தப்படுகின்றன. SC.,-ST., மற்றும் SC-அருந்ததியர் பிரிவு மாணவ, மாணவியர், 150 ரூபாய்க்கும், இதர பிரிவு மாணவர்கள், 300 ரூபாய்க்கும், "செயலர், பகுதிநேர பி.இ.,-பி.டெக்., சேர்க்கை, கோவை தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கோவை" என்ற பெயரில், டி.டி., எடுத்து வழங்கி, விண்ணப்பங்களை பெறலாம்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 10+2+3 என்ற முறையில்
கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர் களாக பணிபுரிபவர்களின் விவரம்
சேகரிக்க உத்தரவு.
தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10+2+3 என்ற
முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின்
விவரங்களை உரிய படிவத்தில் அளிக்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)