லேபிள்கள்

28.3.13


10 ஆம் வகுப்புத் தேர்வில் வங்கிப் படிவ வினாவிற்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவு


சென்னை: 10 ஆம் வகுப்புத் தேர்வில் வங்கிப் படிவ வினாவிற்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 வங்கிப்படிவ வினா எழுத முயற்சி செய்த அனைத்து மாணவருக்கும் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 38 வது வினா குறித்து மாணவர்கள் கலக்கம் அடையத் தேவையில்லை என்று கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். கேள்வித்தாளுடன் வங்கிப்படிவம் வழங்கப்படாததால் மாணவர்கள் தேர்வில் குழப்பத்தில் அடைந்தனர். ஆசிரியர்கள் விடைத்தாளிலேயே வங்கிப்படிவ கேள்விக்கு பதில் எழுதக் கூறியதால் மாணவர்கள் மேலும் குழப்பம் அடைந்தனர்.  தற்போது கல்வி இயக்குனர் அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக