லேபிள்கள்

8.11.14

இன்று (8.11.14) ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியத்தில் புத்துணர்ச்சியுடன் நடைபெற்ற TNGTF கூட்ட நிகழ்வுகள்


கூட்டத்தில் மாநிலத் தலைவர் திரு.ஆனந்தகணேஷ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்

தகவல்; திரு.தனக்குமார், ஈரோடு மாவட்ட பொருளாளர்,

பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை - குறைத்தீர் மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது சார்பான அறிவுரைகள்

தொடக்கக் கல்வி - கல்விச்சுற்றுலாவின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவ்டிக்கைகள் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்

துவக்கப்பள்ளி இல்லாத குடியிருப்புபட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு

துவக்கப்பள்ளி வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளை உள்ளடக்கிய பட்டியலை, உடனடியாக சமர்ப்பிக்க, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.வரும் 2015-16 கல்வியாண்டில், புதிதாக தொடங்க வேண்டிய துவக்கப்பள்ளிகள் மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய துவக்கப்பள்ளிகள் குறித்த பட்டியலை, உடனடியாக தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு சமர்ப்பிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறைக்கு தனி 'வெப்சைட்' விரைவில் ...! எளிமையாகிறது தகவல் பரிமாற்றம்

மதுரை மாவட்டத்தில் கல்வித்துறைக்கென தனி 'வெப்சைட்' விரைவில் துவங்கப்படவுள்ளது. இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் உட்பட அனைத்து விபரங்களும் ஒருங்கிணைக்க வாய்ப்பு ஏற்படும்.கல்வி

பாட புத்தகங்களை எடைக்கு விற்றுரூ.14 லட்சம் பெற்றது யார்?பலிகடாவாகிறார் வியாபாரி?

கோவையில், 350 டன் பள்ளி பாடப் புத்தகங்கள் மாயமான விவகாரத்தில், புத்தகங்களை எடை போட்டு வாங்கிய வியாபாரியை தேடி, தனிப்படையினர் கோவில்பட்டியில் முகாமிட்டுள்ளனர்.தமிழக அரசு,

100 சதவீத தேர்ச்சிக்கு உழைக்காதஆசிரியர்கள் மீதுநடவடிக்கை:இணை இயக்குனர் எச்சரிக்கை

“பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ல் 100 சதவீத வெற்றிக்கு உழைக்காத ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயங்காது,” என மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.
கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 80

மார்ச்சில் பிளஸ் 2 தேர்வு : தனித்தேர்வர்கள் ஆன்லைனில் 10ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குவிண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

7.11.14

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014 and 2014-2015


Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014 and 2014-2015
          

Dated:07-11-2014

Member Secretary

காலாண்டு தேர்வு மதிப்பீட்டு பணிகள் தீவிரம்

மாவட்ட பள்ளிகளில், காலாண்டு தேர்வு முடிவுகள் குறித்த மதிப்பீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில், படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள், பள்ளிக் கல்வித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாலை நேர சிறப்பு வகுப்புகள், வழிகாட்டி கையேடுகள், பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி, கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் மீது சிறப்பு கவனம் என பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

பள்ளி பாட புத்தகம் மாயமான வழக்கில் முதன்மை கல்வி அலுவலக பதிவு எழுத்தர் சஸ்பெண்ட்

கோவையில், 350 டன் பள்ளி பாட புத்தகம் மாயமான வழக்கில், முதன்மை கல்வி அலுவலக பதிவு எழுத்தர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோவை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு வழங்க,

பிளஸ் 1 வகுப்பு: அடுத்த கல்வியாண்டிலும் புதிய பாடத் திட்டத்துக்கு வாய்ப்பில்லை?

பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் திணறி வரும் நிலையில், அடுத்த கல்வியாண்டிலும் (2015-16) பிளஸ் 1 வகுப்புக்கான பழைய பாடத் திட்டம் மாற்றப்படாது எனத் தெரிகிறது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான போட்டி எழுத்து தேர்வு 10.01.2015 அன்று நடைபெறவுள்ளது I விண்ணப்பங்கள் 10.11.2014 அன்று காலை 10மணி முதல் விற்பனை செய்யப்படவுள்ளது I இதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடவுள்ளது I

ஆசிரியர் தேர்வு வாரியம் ந.க.எண்.9287/அ3/2014 நாள்.05.11.2014ன் படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான (2013-14 மர்றும் 2014-15) போட்டி எழுத்து தேர்வு 10.01.2015 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 09.11.2014க்குள் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தொடக்கக் கல்வி - 2015-16ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் புதிய பள்ளிகள் (தொடக்க / நடுநிலைப் பள்ளிகள்) துவங்க கருத்துருக்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 144 சிறுபான்மை மொழி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி நியமன கலந்தாய்வு 08.11.2014 அன்று இணையதள வாயிலாக நடைபெறவுள்ளது.

SCHOOL EDUCATION - PAY CONTINUATION ORDER FOR 1591 ADDL POST GRADUATE TEACHERS FOR 3 MONTHS FROM 29.10.2014

5.11.14

கடந்த 2 ஆண்டுகளாக நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி நியமனம் நடைபெறாததால் பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

கடந்த 2 ஆண்டுகளாக நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி நியமனம் நடைபெறாததால் பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி தேசிய கொடிக் கம்பத்தில் சமுதாயக் கொடி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி தேசிய கொடிக்கம்பத்தில் சமுதாயக் கொடியை சிலர் ஏற்றிச் சென்றதையடுத்து இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, சுந்தரபாண்டியம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக குருவையா என்பவர் உள்ளார்.

12-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் டிஸ்மிஸ், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் நடவடிக்கை

மதுராந்தகம் அடுத்த சூணாம்பேடு மேல்நிலைப் பள்ளியில், தவறான நடத்தை காரணமாக 12-ம் வகுப்பு படித்து வந்த 5 மாணவர்களை மாவட்ட கல்வி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது. பள்ளியில் படிக்கும் சக மாணவர்களின் நலன்கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

குறுகிய நாட்களில் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள்

இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்செய்ய குறுகிய காலமே உள்ள நிலையில், பாடத்திட்டத்தை துரிதமாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்! அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது

தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவியருக்கு கழிப்பிட வசதி.. ஆய்வுக்குழுவுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் வளாகத்திலேயே, மாணவியர் கழிப்பிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என, மொத்தம் 1,460 அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு இணையத்தில் விடைத்தாள்

பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இணையதளம் மூலமாக விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

கல்வியாண்டு இறுதி வரை பணியாற்றலாம் மறு நியமன காலத்திலும் குறைவில்லாத சம்பளம்

மாத ஓய்வூதியம், பணி நீட்டிப்பு ஆகிய பிரச்னைகள் குறித்த ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில், பள்ளிக் கல்வித் துறை நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்த, 2003ல் இருந்து, பணியில் சேர்ந்த

குரூப் - 2 தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியீடு

வரும், 8ம் தேதி நடக்க உள்ள குரூப் - 2 தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது.

315ஐ மூன்றால் வகுக்க தெரியாத ஆசிரியை சஸ்பெண்ட்

கான்பூர்: உ.பி.,யில், 315ஐ, மூன்றால் வகுக்க தெரியாமல், 'திருதிரு'வென விழித்த பள்ளி ஆசிரியை, கல்வி துறை அதிகாரியால் அதிரடியாக, சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் எப்போது?

'பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவ, மாணவியர், இன்றும், நாளையும், இணைய தளத்தில் இருந்து, விடைத்தாள்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

துறையின் அறிவிப்பு:

4.11.14

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து ஓய்வு / மரணமடைந்த ஆசிரியர்களின் விவரம் (கோவை மாவட்டம்)

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - கல்வியாண்டின் இடையில் வயதுமுதிர்வு காரணமாக ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதிவரை மறு நியமனம் வழங்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

ஆசிரியர்களுக்கு பயிற்சி இல்லை; வீணாகும் 'லேப்டாப்'; மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு கேள்விக்குறி

தொடக்க கல்வித்துறையின்கீழ், மாநிலம் முழுவதும் கற்பித்தல் பணிக்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப், கம்ப்யூட்டர் சார்ந்த நவீன பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு இல்லாத காரணத்தால், பயனற்று பள்ளிகளில்வீணாகி வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை பணியாளர் விபரம்; ஆன்-லைனில் பதிய உத்தரவு

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும்பணியாளர்களின் விபரங்களை, உடனடியாக ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வினா–விடை புத்தகம்: 10–ந்தேதி முதல் விற்பனை - இயக்குனர்

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு மாநில பெற்றோர்–ஆசிரியர் கழகம், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ–மாணவிகள் பயன்பெறும் வகையில் வினா–வங்கி, மாதிரி வினா–விடை புத்தகங்களை ஆண்டுதோறும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. 

10th & 12th Exam: பாடத் திட்டத்திற்குவெளியே இருந்து, கேள்வி கேட்க வேண்டும் - தமிழக அரசுக்குபரிந்துரை

மாணவர்களின் படிப்பறிவு விரிவடைய பிறக்கிறது வழி : 

பாடப்பொருள் சார்ந்த கேள்விகள் தயாரிக்க அரசுக்கு பரிந்துரைபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே கேட்கக் கூடாது. 

அரசு பள்ளி பணிக்கு கலப்புத் திருமணம் தம்பதியருக்கு முன்னுரிமை வழங்க கோரி வழக்கு: ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை ஐகோர்ட்டில், சேலத்தை சேர்ந்த கே.அழகேசன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 
இந்திய கலப்புத் திருமணம் தம்பதியரின் சங்கத்தின், தலைவராக உள்ளேன். 

மாணவர்களின் படிப்பறிவு விரிவடைய பிறக்கிறது வழி : பாடப்பொருள் சார்ந்த கேள்விகள் தயாரிக்க அரசுக்கு பரிந்துரை

'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே கேட்கக் கூடாது. பாடப் பொருள் சார்ந்து, அதே நேரத்தில், பாடத் திட்டத்திற்கு வெளியே இருந்து, கேள்வி கேட்க வேண்டும்' என, தேர்வு சீர்திருத்தக் குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மொஹரம் பண்டிகை வாழ்த்துக்கள்


3.11.14

இன்று (3.11.14) திருப்பூர் மாவட்ட TNGTF பொறுப்பாளர் மற்றும் வெள்ளகோவில் ஒன்றிய TNGTF பொறுப்பாளர்கள் திருப்பூர் DEEO உடன் சந்திப்பு.

      இன்று (3.11.14) திருப்பூர் மாவட்ட TNGTF பொறுப்பாளர் திரு.விநாயகமூர்த்தி தலைமையில் வெள்ளகோவில் ஒன்றிய TNGTF பொறுப்பாளர்கள் திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை சந்தித்தனர்.

வேடசந்தூர் ஒன்றிய TNGTF ன் புதிய பொறுப்பாளர்கள் ஒன்றிய AEEO உடன் சந்திப்பு;

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய TNGTF ன் புதிய பொறுப்பாளர்கள் நமது மாநிலப் பொது செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மண்ட் அவர்களுடன் வேடசந்தூர் ஒன்றிய AEEO உடன் சந்திப்பு;

தகவல்; திரு.பாண்டியராஜன் , 
திண்டுக்கல் மாவட்ட பொருளாளர்

தொடக்க கல்வி துறை பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நமது பொதுச்செயலாளருக்கு நன்றி,!!

                                   நன்றி,
நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்கள் 29.10.14 அன்று தொடக்க கல்வி இயக்குனரை சந்தித்த போது எல்லையில் இறந்த ராணுவ வீரரின் மனைவிக்கு மூன்று மாதமாக மனமொத்த மாறுதல்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகைக்கு விரைவில் புதிய முறை: பள்ளிக்கல்வித்துறை முடிவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்க விரைவில் புதிய முறையைக் கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை விதித்துள்ளது.

5% மதிப்பெண் தளர்வு மூலம் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ள  திரு பாரதி ராஜா என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர் 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றுள்ளார். தற்போது பாண்டிச்சேரி அரசு வெளியிட்ட SC ST ஆசிரியர் பட்டியலில் 90க்கு மேல் பெற்றவர்களை கொண்டு ஆசிரியர் பணியிடம் நிரப்ப அறிவிப்பு இருந்தது.

210 அரசு பள்ளிகளுக்கு கட்டடம்'நபார்டு' வங்கி ரூ.247 கோடி கடனுதவி

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு, புதிய வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறைகள் மற்றும் தடுப்புசுவர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 'நபார்டு' வங்கியின் கடனுதவியை பெற, ஓராண்டாக முயற்சித்தது.

கனமழை காரணமாக இன்று (3.11.14) சில மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக  நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சை , விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (3.11.14)  விடுமுறை  - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

2.11.14

அதிகரிப்பு!! - கல்வித்துறைக்கு எதிரான வழக்குகள் எண்ணிக்கை


தேசிய திறனாய்வு தேர்வு : 1.47 லட்சம் பேர் பங்கேற்பு.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு, இன்று, மாநிலம் முழுவதும், 350 மையங்களில் நடக்கிறது. 1.47 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர்.

TNGTF கூட்டமைப்பின் நண்பர்களே,


கல்வித்துறைக்கு எதிரான வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு: நிலுவையில் 2,000 வழக்குகள் இருப்பதால் சிக்கல்

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி துறைக்கு எதிராக, வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்களால், 2,000த்திற்கும் மேற்பட்ட வழக்குகள், நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.