லேபிள்கள்

31.8.13

தொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் பணி மற்றும் பணப் -பலன் சார்பான குறைத்தீர் முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று AEEO அலுவலகத்திலும், 2வது சனிக்கிழமையன்று DEEO அலுவலகத்திலும் நடத்தி ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இயக்குநர் உத்தரவு

கிராமத்தில் உள்ள பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 15 நாட்களுக்கு ஒரு முறை வட்டார அளவிலான கூட்டத்தை நடத்தி ”தாய் திட்டத்தின்” மூலம் நிறைவேற்றிட அறிவுறை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

DGE - 2013-14 - HIGHER SECONDARY QUARTERLY EXAM TIME TABLE

DGE - 2013-14 SSLC QUARTERLY EXAMINATION TIME TABLE

30.8.13

பொதுப் பணிகள் - 01.01.2006 அன்றைய நிலவரப்படி முழுநேர தினக்கூலி அடிப்படையில் 10 ஆண்டுகள் பணிப்புரிந்தவர்களை முறைப்படுத்த ஆணை வெளியிட்டதற்கு, திருத்திய ஆணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு

தொடக்கக் கல்வி - அரசுப் பள்ளிகளில் குக்கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் பள்ளிக்கு வருகைப் புரியாமல் இருப்பவர்களை கண்டறிந்து தடுப்பதற்காக, வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி மேற்பார்வையிட உத்தரவு

தொடக்கக் கல்வி - தேசிய ஆசிரியர்கள் நல நிதி - 2011-12 மற்றும் 2012-13 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான மகன் / மகள்களுக்கான நிதி உதவி பெறுதல் சார்பான விண்ணபங்களை உரிய காலகெடுவிற்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு 31.08.2013 அன்று காலை 10.00மணிக்கு நடத்தவும், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மேற்கொள்ளகூடாது என உத்தரவு

SSA - BRC/ CRC பயிற்சி நடைமுறைகள், திட்டங்கள், பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள், SG/ MG மானிய வழிக்காட்டு நெறிமுறைகள், ஊடக / ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள்

SSA - வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது TLM (BRC/CRC ஒன்றுக்கு) ரூ.200 வீதம், கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம், ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

29.8.13

SSA- கணக்கு தலைப்பின் கீழ் சம்பளம் பெரும் ஆசிரியர்களுக்கு ஓர் நற்செய்தி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்கச் சொல்லிக் கருவூலத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையை" இரத்து செய்ததோடு முடக்கி வைக்கப்பட்ட நிலுவைச் சம்பளங்களையும் இன்றே வழங்க உத்தரவு.

SSA கணக்குத் தலைப்பின் கீழ் (AD-101) ஊதியம் பெறும் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்கச் சொல்லிக் கருவூலத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையை" இரத்து செய்ததோடு முடக்கி வைக்கப்பட்ட நிலுவைச் சம்பளங்களையும் இன்றே (29.8.13) வழங்கவும் இனிமேல் எந்த ஒரு அரசாணையையும் எதிர்பாராமல் ஆசிரியர்களின் ஜீவாதாரமான, ஊதியப் பட்டியல்களுக்கு மறுப்புரையின்றி கடவாணை வழங்கவும் கருவூலத்துறை ஆணையாளர் அவர்களால் சார்நிலைக் கருவூலங்களுக்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது

பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட மசோதா (PFRDA BILL) மக்களவையில் நாளை விவாதிக்க முடிவு, எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள ஊழியர்கள் சங்கங்கள் ஆயுத்தம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட மசோதா மக்களவையில் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது, இந்த மசோதாவை நாளை  மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். இதையடுத்து மத்திய, மாநில ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் மேற்கொள்ள ஆயுத்தமாகி வருகின்றன. மேலும் உண்ணாவிரதத்தில் தாங்கள் பங்குகொள்ள ,தங்களின் அதரவை தெரிவிக்க hvfnpsera@gmail.com என்ற இமெயில் முகவரியை அணுகவும்.
தகவல்-புதிய ஓய்வூதிய திட்ட எதிர்ப்பு இயக்கம் -சென்னை 

 click here to download the Lok Sabha - List of business on 29.08.2013  

தொடக்கக் கல்வி - ஊதிய நிர்ணயம் - பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர், தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் - தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 4(3)ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு | Opportunity to TET Candidates who had not submitted certificates in past two verifications

கடந்த ஆண்டு நடந்த, 2 டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன்படி, செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

Tamil Nadu Teachers Eligibility Test - 2012 - Certificate Verification for Certificate not produced and Absent Candidates | டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்களுக்கான விவரங்கள் மற்றும் படிவங்கள்

IGNOU- Tentative Date Sheet For End Examination December 2013

27.8.13

ஆசான் மடல் ஆகஸ்ட் 2013 இதழில் - PG வழக்கு குறித்து நமது பொதுச்செயலாளர் கடிதம்


TRB - TN TET Official Key Answers for Paper 1 and Paper 2 | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவனங்களோடு 02.09.2013 அன்று மாலை 05.00 மணிக்குள் டி.ஆர்.பி-க்கு தெரிவிக்க வேண்டும்

தமிழ்நாடு பள்ளிகல்வி சார்நிலைப்பணி - 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் +2 பயிலாமல் பட்டம் / பட்டயம் பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக செய்யப்பட்டவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்குதல் சார்பாக விவரம் கோருதல்

பள்ளிகல்வி - மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியாளர்கள் 1991 ஆம் ஆண்டில் பணியிழந்தோருக்கு, உச்சநீதிமன்ற ஆணைகளின் படி பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு, பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை சார்ந்த கருத்துக்கள் அரசுக்கு பணிந்து அனுப்பப்பட்டது சார்பாக கூடுதல் விவரங்கள் கோருதல் சார்ந்து

குரூப் 4 தேர்வு விடைகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு | TNPSC Group 4 Tentative Answer Keys

SSA - படைப்பாற்றல் கல்வி - பள்ளிகளின் தரத்தை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்கு பதிலாக 3ம் தேதிக்குள் மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் சம்பளம் குறைக்க வேண்டாம், கோர்ட் தடை உத்தரவால் அரசு புது உத்தரவு!


6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம்/ தமிழ் வழிக்கல்வியில் அரசு/ அரசு நிதியுதவி பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் 2013-14ஆம் கல்வியாண்டிற்கான சிறப்புக் கட்டணம் பெறப்படுவதை, இரத்து செய்து, ஈடுசெய்ய நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து சம்பளம் வழங்க அரசு உத்தரவு

25.8.13

SCERT & NCERT இணைந்து 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தும் மக்கள் தொகை தொடர்பான தேசிய அளவிலான பாத்திரமேற்று நடித்தல் போட்டிகள் (ROLL -PLAY ) நடத்துதல்

ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு


ஓய்வூதியர்களுக்கான பஞ்சப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1988, ஜூன் 1ம்

தேதியில் இருந்து, 1995, டிசம்பர், 31ம் தேதி வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, பஞ்சப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட ஆண்டில் ஓய்வு பெற்றவர்களுக்கு, மாதம், 870 ரூபாய், கூடுதலாகக் கிடைக்கும்