தொடக்கக் கல்வி - CPS திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணக்குத்தாள் தொகுத்து வழங்குவது குறித்து அரசு தகவல் தொகுப்பு விவர மைய அலுவலர்கள் மற்றும் அரசு தணிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் மண்டல அளவில் ஆய்வுக்கூட்டம் 03.07.2013 அன்று காஞ்சிபுரம், திருச்சி மற்றும் மதுரையில் நடைபெறுகிறது.
இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி., கிடுக்கிப்பிடி
உரிய அங்கீகாரமற்ற கல்வி மையங்களில் சேர வேண்டாமென, மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், இதுதொடர்பாக செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வி - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதியம் வழங்க வேண்டி தொடர்ந்த வழக்குகள் சார்பாக அரசானை வெளியிடப்பட்டமைக்கு கூடுதல் விவரங்கள் கோருதல்.
அரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூலை 10ஆம் தேதி நடக்கிறது
அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 10ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியீடு
நடப்பு கல்வி ஆண்டில், மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியலை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலவர் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி கௌரவிப்பு
SSA- 2013-14ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது, 40% ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவு.
தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான 2013-14ஆம் கல்வியாண்டின் முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது.
அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10ஆம் வகுப்பு கையாளும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்க முடிவு
* மாவட்ட கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி : 04.07.2013 & 05.07.2013
01.04.2013 க்கு முன்னர் நிதியுதவி பள்ளியில் பணிபுரிந்து, பணி இடைமுறிவு இன்றி தற்போது அரசு பள்ளியில் பணியில் சேர்ந்து இருந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தில் தொடரலாம்.
திட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டது - அரசு இணை செயலாளர்
அரசுப் பணியாளர் ஒருவர் பிற துறை / பிற மாநில அரசு / மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பித்தல் சார்பான விளக்கம்
"ஆசிரியர் அல்லது அரசூழியர் ஒருவர் வேறு துறைப் பணிக்கான தகுதி பெற்றிருந்து அதே மாநில அரசின் பிற துறைப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அவர் நியமன அலுவலரிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும். பிற மாநில அரசின் பணிக்கும் மத்திய அரசுப் பணிக்கும் விண்ணப்பிக்கத் துறைத்தலைவரிடம்/ அரசிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும்" என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒழுங்காற்றுச் சட்டம் கூறுகிறது.
"பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில், அடுத்த மாதத்தில் இருந்து, கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி துவங்கும்" என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு நாள் பயிற்சி நடத்த தொடக்கக்கல்வித் துறை உத்தரவு
நீதிமன்றங்கள் வழக்கை உடனுக்குடன் முடிக்கவும், அவமதிப்பு வழக்கை தவிர்க்கவும் புதிய மென்பொருள் நடைமுறைப்படுத்த 25.06.2013 அன்று ஒரு நாள் பயிற்சி நடத்த தொடக்கக்கல்வித் துறை உத்தரவு
தொடக்கக் கல்வி-சர்வதேச அளவில் பதக்கம் வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டம் - 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடல்திறன் போட்டிகள் நடத்தி, உடற்திறன் திறமை அறிக்கை அட்டை செயல்படுத்த தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது, ஆனால் இருதரப்பும் இந்த வழக்கை விரைவில் முடித்து கொள்ள வேண்டும் என்று தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர். ஆகையால் வழக்கிற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அவசியமில்லை என்றும், இவ்வழக்கு அடுத்த மாதம் ஜூலை 16 தேதி முதல் தொடர்ந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு இல்லா -விடில் “கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்" மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
‘‘குற்றச்சாட்டு எதுவும் இல்லாத போது, கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்’’ என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வில், தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை மதிப்பெண்களை, தலைமையாசியரிடம் பெற்று, அரசுத்தேர்வுகள் இயக்கத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று, அரசுத் தேர்வுகள் இயக்கம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.