லேபிள்கள்

24.6.13

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


          இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வில், தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை மதிப்பெண்களை, தலைமையாசியரிடம் பெற்று, அரசுத்தேர்வுகள் இயக்கத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று, அரசுத் தேர்வுகள் இயக்கம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
 
         அரசுத் தேர்வுகள் இயக்கம், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த, இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழுக்கான, பொதுத் தேர்வில், சில தனித்தேர்வர்களின், அறிவியல் பாட செய்முறை மதிப்பெண்கள் பெறப்படவில்லை.

          எனவே, தேர்வர்கள், நிலுவையில் உள்ள செய்முறை தேர்வு மதிப்பெண்களை உரிய தலைமையாசிரியடம் பெற்று, இம்மாதம், 24ம் தேதிக்குள், அரசு இயக்கத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்கப்பட்ட தேர்வர்களுக்கு, ஒரு வார காலத்திற்குள், மதிப்பெண் சான்றிதழ்கள், தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக