லேபிள்கள்

5.4.13

 திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றியத்தில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின், புதிய கிளை விரைவில் துவங்கப்பட உள்ளது. 

புதிய கிளை துவங்குவது குறித்து அலோசனை நடத்தும் மாவட்ட செயலாளர் மற்றும்
 வெள்ளகோவில் ஓன்றிய பொறுப்பாளர்கள்






பள்ளிக் கல்வித்துறையில் வருகிற‌து மெகா டிரான்ஸ்ஃபர், கலக்கத்தில் கல்வித்துறை இயக்குனர்கள்

பத்தாம் வகுப்பு விடைத் தாள்கள் மாயம் மற்றும் சேதமான விவகாரங்களில் பள்ளிக் கல்வித்துறை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பல முக்கிய இயக்குனர்கள் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிக்கல்வி இயக்குனர், அரசு தேர்வுத்துறை இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் உள்ளிட்ட‌ 8 இயக்குனர் பணியிடங்களும், 20 இணை இயக்குனர் பணியிடங்களும் உள்ளன.



சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு நடந்த பள்ளிக்கல்வித்துறையின் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் வைகைச்செல்வன், ''பொது நூலகத்துறையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவை தரமற்றதாக இருக்கிறது. சில முக்கிய இயக்குனர்கள் ஆளுங்கட்சியினருக்கு ஐஸ் வைப்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள், துறை பணியை சரிவர கவனிப்பதில்லை" என்று கடுமையாக சாடினாராம். அமைச்சரின் ஆவேசத்தை பார்த்துவிட்டு பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த இயக்குனர்கள் பலபேர் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.

எனவே பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் சிலர் அதிரடியாய் தூக்கியடிக்கப்படலாம் என்கிறார்கள். இந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்ட இயக்குனர்கள் பசையுள்ள இடங்களில் ஒட்டிக் கொள்ள‌ இப்போதே ஆளுங்கட்சி மேலிடத்தின் சிபாரிசுகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்..

தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக கணக்கிடப்படுமா?

தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்த காலத்தை பணிக்காலமாக கணக்கீட வேண்டும் என்று நிரந்தரம் செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களின் கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.

4.4.13


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, வெள்ளகோவில் ஒன்றிய கூட்டம் 3.4.13 அன்று நடைபெற்றது. 


21.4.13 அன்று ஈரோட்டில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட கோரி மேற்கொள்ளும் உண்ணவிரத போரட்டத்தில் ஒன்றிய பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு உண்ணவிரத போரட்டத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்ற தீர்மானம் உட்பட மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







உயர் கல்வித் துறை ; 

புதிதாக 530 உதவி பேராசிரியர்கள் நியமனம்

சென்னை: தமிழக சட்டசபையில் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது, அரசு ‌கலை மற்றும் பன்முக கல்லூரிகளில் 530 உதவி பேராசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 351 விரிவுரையாளர்கள், 61 உதவிப்பேராசியர்கள் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் 398 புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படும். தமிழகத்தில் திறந்தவெளி பல்கலை மூலம் இந்தாண்டு 4.5 லட்சம் பேர் கல்வி பெறுவர்என்றார். மேலும் தரம் உயர்த்தவே அண்ணா பல்கலை. ஒருங்கிணைக்கப்பட்டது என்றார்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் 2013-14 பள்ளி செல்லா / மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கணக்கெடுப்பு மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் சார்பு

3.4.13


தமிழ்நாடு பொதுப் பணி - 15.03.2013 அன்று உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றுபவர் களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பு.


அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆங்கில வழிக்கல்வித் திட்டம்?

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, ஆங்கில வழிக் கல்வியை போதிக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது; ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் "ஆங்கில வழிக்கல்வி" துவங்கும் திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள்; ஆசிரியை பணி வழங்க மறுத்தது சரி: உயர் நீதிமன்றம்

"ஒரே நேரத்தில், இரண்டு வெவ்வேறு பட்டங்களைப் படித்த பெண்ணுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்க மறுத்தது சரி தான்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

DGE: National Talent Search Examination - November 2012 Result

2.4.13


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இன்று தலைமை செய லகத்தில் மதுரை மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி களில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாள ர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்












மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்குதல்!!!


நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்குதொழிற்கல்வி பட்டப்படிப்புதொழிற்கல்வி பட்டமேற்படிப்பு மற்றும் இதரபட்டமேற்படிப்புகளுக்கு தற்போதுஆண்டுதோறும் வழங்கப்படும் கல்விஉதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்திவழங்குதல்!!!

CPS வழக்கில் மேலும் ஒரு வெற்றி சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.


CLICK HERE TO DOWNLOAD CHENNAI HIGH COURT ORDER AGAINST W.P.NO.5872/2013



CPS தொடர்பாக "CITU" தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி இடைக்கால உத்தரவிட்டுள்ளது. அவ்வுத்தரவில் இறந்தவருக்கு எந்த மாதிரியான செட்டில்மென்ட் என்பதை இரண்டு வாரத்திக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், அதுவரை புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மனுதாரர் கட்டிய சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது எனவும், இறந்தவரின் பங்களிப்பு தொகையினை வட்டி தரக்கூடிய வைப்பு நிதியாக வைக்க உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு


சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற்றுள்ள விவரம் வருமாறு: பணியாளர்கள் பெற்ற சலுகைகள் மற்றும் பயன்களை கண்காணிக்கும் வகையில் அனைத்து பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில்

1.4.13


தமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளர் பதவியிலிருந்து இருக்கைப் பணி கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2013 அன்று உள்ளவாறு தகுதி வாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி உத்தரவு.


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - அரசு உதவி பெறும் பள்ளிகள் / கல்லூரிகளில் பணிபுரியும் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து அக தணிக்கையாளர் / தலைமை தணிக்கையாளரின் தணிக்கைக்கு உட்படுத்த தமிழக அரசு உத்தரவு.


அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி - தமிழ்நாடு விதிகள் (15-பி) திருத்தம் மேற்கொண்டு - அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு.

அனைத்து கலை அறிவியல் மற்றும் 

பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் ஏப்ரல் 3 

திறக்க தமிழக அரசு உத்தரவு.


பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகுமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு தேர்வு நிலை, பணிமூப்பு பாதிக்காத வகையில் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக கணக்கிடப்படுமா? 

தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்த காலத்தை நிரந்தரம் செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களின் பணிக்காலமாக கணக்கீட வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.


பள்ளி கல்வித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டி கடந்த 2003ஆம் ஆண்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாதம் தோறும் மூவாயிரம் முதல் நான்காயிரம் ரூபாய் வரை தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2006ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.

ஆனால் தொகுப்பு ஊதிய காலத்தை பணிக்காலமாக கணக்கீடு செய்ய வில்லை என ஆசிரியர்கள் புலம்பித்தவிக்கின்றனர். இதனால் தேர்வு நிலை மற்றும் பணி மூப்பு பாதிக்கப்படும் எனவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் புதிய பென்சன் திட்டத்தில் இவர்களை இணைத்து மாதம் தோறும் ஒரு கணிசமான தொகையும் கடந்த பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது பென்சன் திட்டத்தில் வசூலிக்கப்படும் பணம் எந்த கணக்கில் உள்ளது என்பது இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கே தெரியாதநிலை தொடர்கிறது.
எனவே புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென் சன் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். தேர்வு நிலை பெறவும், பணி மூப்பு பாதிக்காமல் இருக்கவும் தொகுப்பு ஊதியத்தில் பணி செய்த மூன்றாண்டு காலத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டும். மேலும் பிற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஜிபிஎப் கடன் இடை நிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென காலமுறை ஊதியம் பெறும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 சட்டசபை கூட்டம்  : மானிய கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பம் ,10ம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை

சென்னை: தமிழக அரசின் 20132014ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 21ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபையில் பொது விவாதம் நடந்தது. பட்ஜெட் மீது நடந்த விவாதத்திற்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28ம் தேதி பதில் அளித்தார். இதையடுத்து சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 1ம் தேதிக்கு சபாநாயகர் தனபால் தள்ளிவைத்தார்.இந்நிலையில், சட்டசபை கூட்டம் 3 நாள் விடுமுறைக்கு பிறகு நாளை தொடங்குகிறது. பட்ஜெட் மீது நடந்த பொது விவாதத்தை தொடர்ந்து, பல்வேறு துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நாளை முதல் நடைபெறுகிறது. 


  முதல் நாள், உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கையை அமைச்சர் கே.பி.முனுசாமி தாக்கல் செய்கிறார். அதன் மீது நடக்கும் விவாதத்திற்கு பிறகு, அமைச்சர் பதில் அளிப்பார். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மானியக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, அந்த துறைக்கான நிதி ஒதுக்கப்படும். அதைத் தொடர்ந்து, 2ம் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, 3ம் தேதி சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, 4ம் தேதி உயர் கல்வித்துறை, 5ம் தேதி வேளாண்மைத்துறை, 8ம் தேதி கூட்டுறவு மற்றும் உணவுத்துறை, 19ம் தேதி தொழில்துறை, 22ம் தேதி காவல் துறை, மே மாதம் 3ம் தேதி போக்குவரத்துத்துறை, 7ம் தேதி செய்தி துறை, 8ம் தேதி தொழிலாளர் நலன், 9ம் தேதி அறநிலையத் துறை, 10ம் தேதி பள்ளி கல்வித்துறை, 14ம் தேதி சுகாதாரத்துறை உள்ளிட்ட மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் முடிந்ததும், மே 16ம் தேதி அரசு சட்ட முன்வடிவுகள், இதர அலுவல்கள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும்.சட்ட சபை கூட்டம் தினமும் காலை 10மணிக்கு தொடங்கி பகல் 2மணிக்கு முடியும். சபை நடவடிக்கைகளை பொறுத்து, கூட்டத்தின் நேரத்தை சபாநாயகர் நீட்டிப்பார்.

31.3.13


எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் தண்டவாளத்தில் விழுந்து நாசம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது தமிழ் முதல் தாளில் எடுத்த மதிப்பெண் 2–வது தாளுக்கும் வழங்கப்படும் என்று அறிவிப்பு


எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்
தமிழ்நாடு முழுவதும் கடந்த 27–ந் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 11 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதி வருகிறார்கள். தேர்வை நல்லபடி நடத்த வேண்டும் என்ற பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவின் பேரில், அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி மற்றும் அதிகாரிகள் தேர்வு பணியில் மும்முரமாக ஈடுப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிப்பில் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் தமிழ் 2–ம் தாள் தேர்வு எழுதிய மாணவர்களில் விடைத்தாள்கள் சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் தபால் நிலையம் மூலமாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நாடி முத்துநகரில் உள்ள தேர்வு மையத்திற்கு அனுப்புவதற்காக விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தண்டவாளம் அருகே கிடந்தது
அப்போது சில விடைத்தாள்கள் மாயமாகி தண்டவாளம் பகுதிகளில் தீயிட்டு எரிந்த நிலையில் கிடந்தது. இந்த சம்பவம் தேர்வு எழுதிய மாணவர்களையும், அவர்களுடைய பெற்றோர்களையும் கலக்கம் அடைய செய்தது.
விடைத்தாள்கள் எரிந்ததால், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தமிழ் 2–வது தாள் மறுதேர்வு நடத்தப்படுமா? அல்லது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வு எழுதிய மாணவர்கள் மத்தியில் கடும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி, மாணவர்களுக்கு பாதிப்பின்றி நடவடிக்கை எடுக்கப்படும், மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறியிருந்தார். இது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சற்று ஆறுதலை அளித்தது.

முதல் தாள் மதிப்பெண் வழங்கப்படும்
எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2–வது தாள் சேதமடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படுமா என்று, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவிடம் ‘தினத்தந்தி’ நிருபர் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:–
எஸ்.எஸ்.எல்.சி தமிழ் 2–வது தாள் விடைத்தாள்களில் 370 தாள்கள் கொண்ட கட்டில் 63 மாணவர்களின் விடைத்தாள்கள் மட்டுமே சேதமடைந்துள்ளன.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே போல் விடைத்தாள் சேதமடைந்தபோது, 2 தாள்கள் கொண்ட தேர்வில், சேதமடையாத தாள்கள் கொண்ட தேர்வில் என்ன மதிப்பெண் எடுத்தார்களோ, அதே மதிப்பெண் சேதமடைந்த விடைத்தாள்களுக்கு வழங்கப்பட்டது.
அதேபோல் இந்த 63 மாணவர்களுக்கும் அவர்கள் தமிழ் முதல் தாள் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் தமிழ் 2–வது தாளுக்கும் போடப்படும். எனவே மறுதேர்வு எதுவும் கிடையாது. இவ்வாறு பள்ளிகல்விச் செயலர்  த.சபீதா கூறினார்.

நடவடிக்கை
இதற்கிடையே ரெயிலில் ஏற்றப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் பண்டல் தவறி விழுந்த விவகாரத்தில் கவனகுறைவாக செயல்பட்ட ரெயில்வே அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சிக்கோட்ட ரெயில்வே மேலாளருக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.