பள்ளிக் கல்வித்துறையில் வருகிறது மெகா டிரான்ஸ்ஃபர், கலக்கத்தில் கல்வித்துறை இயக்குனர்கள்
பத்தாம் வகுப்பு விடைத் தாள்கள் மாயம் மற்றும் சேதமான விவகாரங்களில் பள்ளிக் கல்வித்துறை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பல முக்கிய இயக்குனர்கள் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிக்கல்வி இயக்குனர், அரசு தேர்வுத்துறை இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் உள்ளிட்ட 8 இயக்குனர் பணியிடங்களும், 20 இணை இயக்குனர் பணியிடங்களும் உள்ளன.
சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு நடந்த பள்ளிக்கல்வித்துறையின் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் வைகைச்செல்வன், ''பொது நூலகத்துறையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவை தரமற்றதாக இருக்கிறது. சில முக்கிய இயக்குனர்கள் ஆளுங்கட்சியினருக்கு ஐஸ் வைப்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள், துறை பணியை சரிவர கவனிப்பதில்லை" என்று கடுமையாக சாடினாராம். அமைச்சரின் ஆவேசத்தை பார்த்துவிட்டு பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த இயக்குனர்கள் பலபேர் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.
எனவே பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் சிலர் அதிரடியாய் தூக்கியடிக்கப்படலாம் என்கிறார்கள். இந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்ட இயக்குனர்கள் பசையுள்ள இடங்களில் ஒட்டிக் கொள்ள இப்போதே ஆளுங்கட்சி மேலிடத்தின் சிபாரிசுகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக