லேபிள்கள்

21.5.14

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள்:

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள்:
இவற்றில்
என்ற இணையதள முகவரி மூலம் தேர்வர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணையதளங்களில் தேர்வு முடிவுகளை காண மாணவர்கள் தங்களது தேர்வெண்ணுடன் பிறந்த தேதியையும் அளிக்க வேண்டும்.


எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அறிய: எஸ்.எம்.எஸ் குறுந்தகவல் மூலம் முடிவுகளை அறிய 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD, தகவல் அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, “TNBOARD 1234567,25/10/1996” என்று குறுந்தகவல் அனுப்பினால், பதிவு எண் 1234567 என்றும், 25/10/1996 என்பது பிறந்த தேதி எனவும் கொள்ளப்படும்.

10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 23) வெளியாகிறது

10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 23) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதனை மாணவர்கள் இணைதளம் மூலம் தெரிந்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  குறுந்தகவல் மூலமும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

இணையதளங்களில் தேர்வு முடிவுகளை காண மாணவர்கள் தங்களது தேர்வெண்ணுடன் பிறந்த தேதியையும் அளிக்க வேண்டும்.

TNTET -2013: ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் கணிதம் முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை -தகவல் பெறும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம்

2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில்  தாள்2 இல் கணிதம்  முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை -தகவல் பெறும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம்  வழங்கிய தகவல்.

த.அ.உ.ச - உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்.

அசோக சக்ரா விருதுக்கு பெயர் பட்டியல் உடனே சமர்பிக்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு.

உதவித்தொடக்ககல்வி அலுவலர் பதவியில் இருந்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக செல்ல விரும்புவோர் விவரம் உடனே சேகரித்தி அனுப்ப இயக்குனர் உத்திரவு.

மே 28-க்குள் சி.பி.எஸ்.இ.பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 28-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என சென்னை மண்டல சி.பி.எஸ்.இ. அலுவலர் டி.சுதர்சன ராவ் கூறினார்.

தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வை 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர்.

அண்ணாமலை பல்கலையில் நுழைவுத்தேர்வு இன்றி தொழிற் படிப்பு சேர்க்கை

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், இந்தாண்டு முதல் நுழைவுத்தேர்வு இன்றி தொழிற்படிப்புகளில் சேரலாம் என்று பல்கலைக்கழக நிர்வாக தலைவர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் +2வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். தொழிற் படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.இ ஆகியவற்றில் சேரலாம்.

310 இடங்களுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும்: மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்

தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2555 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள 100 எம்.பி.பி.எஸ். இடங்களும் அரசு ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு நிரப்பப்பட்டன.

இது தவிர அரசு மருத்துவ கல்லூரிகளில் 310 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைத்தன. சென்னை மருத்துவ கல்லூரியில் 85 இடங்களும், ஸ்டான்லி மத்துவ கல்லூரியில் 100 இடங்களும், சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் 25 இடங்களும், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மருத்துவ கல்லூரியில் தலா 50 இடங்களும் கூடுதலாக உருவாக்கப்பட்டன.

அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்: 5 பேர் 200-க்கு 200 கட் ஆப் மார்க் - 3,000 பேர் 185-க்கு மேல் கட் ஆப்

அரசு பள்ளிகளில் படித்த 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் தொழில்கல்வி படிப்புகளில் சேருவதற்கு 185-க்கு மேல் கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் 5 பேர் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

சென்னையில் புதிய மருத்துவக் கல்லூரி: 2015-2016ல் மாணவர் சேர்க்கை

சென்னையில் மேலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 2015-2016ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னையில் 1 இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி உள்ளது. மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல் மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை. இதனாலும் சுகாராத வசதியை பொருத்த வரை தமிழகத்தை முதன்மை

டிடிஎட் தேர்வுகள் ஜூன் 26ல் தொடக்கம்

தொடக்க கல்வி பட்டய (டிடிஎட்) படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 26ம் தேதியும், முதலாண்டு மாணவர்களுக்கு ஜூலை 7ம் தேதியும் தொடங்குகிறது. தொடக்க கல்வி

பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியலை 2 வாரத்திற்குள் வெளியிட வேண்டும்: அண்ணா பல்கலை.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியலை 2 வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என்று அண்ணா பல்கலைகழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூபாலசாமி என்ற மாணவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டால் தரமான கல்லூரிகளில் மாணவர்கள் சேருவர் என்று மாணவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல் ஜூன் 2ம் தேதி கிடைக்கும்

பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் குறித்து சந்தேகம் உள்ள மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 9ம் முதல் 14ம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைத்தனர்.

ரூ.67 லட்சம் கல்வி உதவித்தொகை மோசடி 77 தலைமை ஆசிரியர்களிடம் விசாரணை

நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வி உதவித்தொகை ரூ.67 லட்சம் மோசடி விவகாரத்தில் சஸ்பெண்டாகி பணியில் சேர்ந்த 77 தலைமையாசிரியர்களிடம் நேற்று விசாரணை தொடங்கியது.நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரக்குறைவான தொழில் செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையில் ரூ.67 லட்சம் மோசடி நடந்திருப்பது கடந்த 2012ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.  பள்ளிக்கு வரும் அனைத்து

அடுத்த கல்வி ஆண்டு முதல் பி.எட், எம்.எட் படிப்பு காலம் 2 ஆண்டாக உயர்கிறது

தமிழகத்தில் பி.எட், எம்.எட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பான பி.எட் மற்றும் முதுநிலை படிப்பான எம்.எட் ஆகிய கல்வியியல் படிப்புகளின் காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

குமரியில் தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் போராட்டம் முடிவுக்கு வந்தது

குமரி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்ததாக  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட  விவகாரம் தொடர்பாக நேற்று காலை போராட்டக்குழுவினர், மக்கள் பிரதிநிதிகளுடன் முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணனை சந்தித்து மனு அளிப்பதற்காக நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வந்தனர். 

புதிய பென்ஷன் திட்டத்தில் விலக்கு மஸ்துார் யூனியன் வலியுறுத்தல்

''புதிய பென்ஷன் திட்டத்தில், ரயில்வே ஊழியர்களுக்கு மத்தியில் அமையவுள்ள அரசு விலக்கு அளிக்க வேண்டும்,' என, தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் தலைவர் ராஜாஸ்ரீதர் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:புதிய பென்ஷன் திட்டத்தை ஏற்கனவே பா.ஜ., கூட்டணி அரசு தான் அறிமுகப்படுத்தியது. பின் வந்த காங்., அரசு, அதை நிறைவேற்ற முயன்றது. ராணுவத்தை போல, ரயில்வே

ஓய்வூதியம் பெறும் வயதானவர்கள் பல மணிநேரம் காத்திருந்து அவதி

ஓய்வூதியம் பெறுவோர், தங்களது, 'லைவ்' சான்றிதழை புதுப்பிப்பதற்காக, நேற்று, சென்னை பள்ளி கல்வித்துறை வளாகத்தில் உள்ள ஓய்வூதியம் பெறுவோர் அலுவலகத்தில் குவிந்தனர்.

இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வினியோகம்

பிளஸ் 2 தேர்வு முடிவு, கடந்த, 9ம் தேதி வெளியானது. 8.21 லட்சம் பேர் தேர்வெழுதியதில், 7.44 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். 77 ஆயிரம் பேர், தோல்வி அடைந்தனர்.
அனைத்து மாணவர்களுக்கும், இன்று முதல், மதிப்பெண் பட்டியல் வினியோகிக்கப்படுகின்றன. பள்ளி மாணவர்கள், அவரவர் பள்ளிகளுக்கு சென்றும், தனித்தேர்வு மாணவர்கள், தேர்வெழுதிய மையங்களுக்கு சென்றும், மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ., 99.94 சதவீதம் 'பாஸ்!'

சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழக மாணவர்கள், 99.94 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். தேர்வு முடிவு, நேற்று முன்தினம் மாலை, சி.பி.எஸ்.இ., இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. 

25 ஆயிரத்தை தாண்டியது எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 25 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீடு, 15 சதவீதம் போக, மீதம், 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லுாரியில், 85 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், 14ம் தேதி துவங்கியது.

Departmental Examinations, May, 2014 Memorandum of Admission (Hall Ticket)




Departmental Examinations, May, 2014
Memorandum of Admission (Hall Ticket)
(Dates of Examinations: 24.05.2014 to 31.05.2014)
 
           Enter Your Application Number :DEM14                                  
                                                                                          Date                  Month             Year
                Enter Your Date of Birth         :                    /                /   
                                                                                              
NOTE :
Before generating the Hall Ticket, kindly make sure that both Top and Bottom margins of the print area will have only maximum of 5 mm. and set the Page Size as 'A4' so as to generate the Hall Ticket in a single A4 size paper. This can be adjusted using File->Page Setup option of the browser.

TNTET -2013: ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் ஆங்கிலம் முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை -தகவல் பெறும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம்

2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் ஆங்கிலம் முக்கிய பாடத்தில் 90 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண்பெற்றவர்களின் எண்ணிக்கை - 2445

2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் ஆங்கிலம் முக்கிய பாடத்தில் 82 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்களின்எண்ணிக்கை - 5386

மொத்தம் - 7831

20.5.14

பள்ளி திறப்பு ஒத்திவைப்பு; கல்வித்துறை ஆலோசனை


அங்கீகாரம் இல்லாத மழலையர் பள்ளிகள் மூடல்

கோவையில் அங்கீகாரம் இல்லாத 49 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டன.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 விதி 18 (1)-ன்படி எந்தவொரு மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியும் அரசின் ஒப்புதல் பெறாமல் நடைபெறக் கூடாது என விதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒப்புதல் பெறாமல் நடைபெறும் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளுக்கு இச்சட்டத்தின்படி 3 முறை கேட்பு குறிப்பாணை அனுப்புமாறும், அவ்வாறு குறிப்பாணை அனுப்பிய பின்னரும் ஒப்புதல் பெறாமல் தொடர்ந்து நடைபெறும் பள்ளிகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை பள்ளிகளில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்

வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளில் புதன்கிழமை காலை 9 மணியளவில் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கவுள்ளது.

ஹெச்.எம் சஸ்பெண்ட் விவகாரம் போலீசார் அனுமதி மறுத்ததால் போராட்டத்தை கைவிட்ட ஆசிரியர்கள்

குமரி மாவட்டம் பிளஸ்2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த இரணியல், பளுகல் அரசு மேல்நிலை பள்ளிகள், படந்தாலுமூடு டிசிகே மேல்நிலை பள்ளி ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட வேண்டிய மேல்நிலைபள்ளிகள் பட்டியல் அனுப்ப பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு.

வரும் கல்வியாண்டில் உயர்நிலை பள்ளியில் இருந்து மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய அரசு பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் வரும் 2014-15ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை பள்ளிகளில் இருந்து மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியலை தயாரித்து அனுப்ப பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் சேகரிப்பு

அனை த்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் விவரம், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க உள்ள பள்ளிகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது-சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமைகிடையாது எனசென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்தஉத்தரவில் குறிப்பிட்டதுபல்வேறு துறைகளில் பகுதி நேர,தாற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலஊழியர்களாகநியமிக்கப்பட்ட 50 பேரை

பி.இ., விண்ணப்பம் வழங்கும் தேதி நீட்டிப்பு: அண்ணா பல்கலை அறிவிப்பு

பி.இ., விண்ணப்பம் வழங்கும் தேதியை, வரும் 27ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது.

கடந்த, 3ம் தேதி முதல், பி.இ., விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதுவரை, இரண்டு லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியுள்ளன. அண்ணா பல்கலை, ஏற்கனவே அறிவித்தபடி,

நாளை நடக்கிறது சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: 4,692 பேர் பங்கேற்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு, நாளை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும், 4,692 பேர் பங்கேற்கின்றனர்.
ஆசிரியர் தேர்வுவாரியம்(டிஇடி) மூலமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு, அக்காலிப்பணியிடங்கள்

முதுகலை ஆசிரியர் விவகாரம்: டி.ஆர்.பி., அலுவலகம் முற்றுகை

முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. இந்த பணி நியமனம், இடியாப்ப சிக்கலாக

19.5.14

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது: பிரவீண்குமார்

தமிழகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை, திருவனந்தபுரம் மண்டல மாணவர்களின் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbsceresults.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை காணலாம்.

2012 இல் தேர்வு எழுதியோருக்கும் 5% தளர்வு கேட்டு மீண்டும் முதல்வரிடம் மனு

2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சார்பில், கே.புவனேஸ்வரி, எம்.ஏ.ரஷீதா பேகம், டி.சுதாமணி, எம்.சக்தி, எஸ்.அருண்குமார் உள்படபல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளனர்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் குளறுபடி: பள்ளியின் பெயர் மாறியதால் தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில், பள்ளியின் பெயர் மாறியதால் தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். . அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மூலம் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வரும் 21ம் தேதி வழங்கப்படுகிறது. இதன்படி மதிப்பெண் சான்றிதழ் பிரின்ட் செய்யப்பட்டு, நேற்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சென்னையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது. 

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

தமிழகம் முழுவதும் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 3ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக துறைசார்ந்த பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், 2 லட்சத்திற்கும் மேலான பி.இ, பி.டெக் இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படவுள்ளது. 

பிஇ இரண்டாம் ஆண்டில் நேரடி சேர்க்கை காலியிடம் 900; மாணவர் சேர்க்கையோ 50

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பல்கலைக்கழகமும், வெவ்வேறு விதமாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதால் பிஎஸ்சி முடித்த மாணவர்கள் பிஇ நேரடி இரண்டாம் ஆண்டில் சேர முடியாத நிலை உள்ளது.தமிழகத்தில் 560க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. டிப்ளமோ, பி.எஸ்சி (கணிதம் ஒரு பாடமாக எடுத்து இருக்க வேண்டும்) முடித்தவர்கள் பிஇ, பிடெக் படிப்பில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர 20 சதவீதம் வரை இடம் ஒதுக்கப்படுகிறது.

காற்று வாங்கும் தொடக்க கல்வி பட்டய படிப்பு : ஒதுக்கீடு இருந்தும் விண்ணப்பிக்க ஆள் இல்லை

தகுதி தேர்வால், தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புக்கு, அரசின் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ஒதுக்கீடு இருந்தும் விண்ணப்பம் பெற ஆள் இல்லாமல், காற்று வாங்குகிறது.

ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் விண்ணப்பம் பெறாததால் தயக்கம்

தமிழகத்தில், ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங்கிற்கு, இதுவரை விருப்பம் கோரி விண்ணப்பம் பெறாமல் இருப்பதால், ஆசிரியர்கள் தயக்கம் அடைந்துள்ளனர். தொடக்க, நடுநிலை, உயர்,மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கிற்கு, ஆசிரியர்களிடம் ஏப்ரலில் விருப்ப மனு பெற்று, மே- மாதத்தில் அந்தந்த சி.இ.ஓ.,க்கள் முன்னிலையில், கவுன்சிலிங் நடத்தப்படும்.

18.5.14

இரட்டைப்பட்ட வழக்கின் உண்மை நிலை, மூன்று வருட பட்டபடிப்பு சார்பாக வழக்கு தொடுத்தவர்களால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை

மூன்று வருட பட்டபடிப்பு முடித்தவர்களின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கினை நடத்துபவர்களின் கருத்து 09.05.2014 அன்று மேன்மை பொருந்திய உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு அன்றைய தினம் UCG  மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மாண்புமிகு நீதியரசர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர்ந்தபட்ச கல்வித் தகுதி: இடைநிலை ஆசிரியர் நியமனம்: ஐகோர்ட் உத்தரவு

உயர்ந்தபட்ச கல்வித் தகுதி உள்ள திருச்சி இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் நடக்கவில்லை; நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

திருச்சி சத்தியநாராயணன் தாக்கல் செய்த மனு: திருச்சி சரஸ்வதி விலாஸ் துவக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராக 1998 ஜூன் 26 ல்

ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்க மறுத்த மற்றுதிறனாளி துறை கமிஷனரின் உத்தரவு ரத்து..


ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரம் ரத்தாகுமா? பரபரப்பை ஏற்படுத்திய அரசின் கடிதம்.

அரசுக்கு எதிராக தேர்தல் சமயத்தில் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஆசிரிய சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக, 40 பி.எட்., கல்லூரிகளுக்கு என்.சி.டி.இ., அனுமதி

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன், நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில், ஏற்கனவே, 657 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு, மேலும், 40 புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு, என்.சி.டி.இ.,

ஆர்.டி.இ., விண்ணப்ப வினியோகம்: வேகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு. - தினமலர்

'இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், விண்ணப்ப வினியோகத்தை வேகப்படுத்த வேண்டும்' என, சென்னையில், நேற்று நடந்த அதிகாரிகள் கூட்டத்தில், இயக்குனர், பிச்சை உத்தரவிட்டார்.

பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் TET வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சார்பாக விவாதிக்கப்பட்டதாகவும், விரைவில் புதிய வெயிட்டேஜ் கணக்கீடு வர வாய்ப்பு...

நேற்று பள்ளிக் கல்வி முதன்மை செயலர் தலைமையில் முக்கிய விவாதம் நடைபெற்றது, இதில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறித்தும், பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் குறித்தும்,ஆசிரியர் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 

தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி 20.05.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககக் கட்டுபாட்டில் இயங்கும் அலுவலகங்களில் ஒத்திசைப் பணி தேக்கநிலை ஒவ்வொரு மாத இறுதியில் முடிக்க உத்தரவு.

பள்ளிக்கல்வி - குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி சட்டம் - 2014-15ம் கல்வியாண்டில் 25 விழுக்காடு மாணவர் சேர்க்கை தனியார் சுயநிதி பள்ளிகளில் அனிமதிப்பது சார்பு.