லேபிள்கள்

21.5.14

அடுத்த கல்வி ஆண்டு முதல் பி.எட், எம்.எட் படிப்பு காலம் 2 ஆண்டாக உயர்கிறது

தமிழகத்தில் பி.எட், எம்.எட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பான பி.எட் மற்றும் முதுநிலை படிப்பான எம்.எட் ஆகிய கல்வியியல் படிப்புகளின் காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளி படிப்புக்கு பிறகு தேசிய சட்ட கல்லூரிகளில் 5 ஆண்டு படிப்பை மேற்கொண்டால் தான் ஒருவர் வழக்கறிஞராக ஆக முடியும். ஆனால் பள்ளி ஆசிரியர் ஆக வேண்டுமானால் ஓராண்டு படித்தால் போதும் என்ற நிலை உள்ளது. ஒரே ஆண்டில் பி.எட் பட்டத்தையும், எம்.எட் பட்டத்தையும் பெற்றுவிடுகிறார்கள். 

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவும், சிறப்பாக பயிற்றுவிக்கவும் இந்த ஓராண்டு படிப்பு நிச்சயம் போதாது. இதனால் பி.எட் மற்றும் எம்.எட் படிப்புகளின் படிப்பு காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டு (2015-=2016) முதல் இரண்டாண்டு பி.எட், மற்றும் எம்.எட் படிப்பு களை 2 ஆண்டுகள் படிக்க வேண்டும் என கல்வியியல் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப் படும். அதேபோல் இந்த புதிய மாற்றத்தை பின்பற்றுவதற்காக போதிய கால அவகாசம் அளிக்கப்படும். மேற்கண்ட தகவல் அந்த அந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக