உயர்ந்தபட்ச கல்வித் தகுதி உள்ள திருச்சி இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் நடக்கவில்லை; நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருச்சி சத்தியநாராயணன் தாக்கல் செய்த மனு: திருச்சி சரஸ்வதி விலாஸ் துவக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராக 1998 ஜூன் 26 ல்
நியமிக்கப்பட்டேன். இதற்கு ஒப்புதல் கோரி, திருச்சி துவக்கக் கல்வி அலுவலருக்கு, பள்ளிச் செயலாளர் பரிந்துரைத்தார். துவக்கக் கல்வி அலுவலர், 'உயர்ந்தபட்ச கல்வித் தகுதி உடையவர்களை, இடைநிலை ஆசிரியர்களாக நியமித்திருந்தால், அங்கீகாரம் வழங்கக்கூடாது. ஆனால், 1995 ஜூலை 11 முதல் 1998 மே 19 க்குள் நியமித்திருந்தால் ஒப்புதல் அளிக்கலாம், என அரசு உத்தரவிட்டுள்ளது. நீங்கள் பி.எட்.,படித்துள்ளீர்கள். இது உயர்ந்தபட்சக் கல்வித் தகுதியாகும். நியமனத்தில் விதி மீறல் நடந்துள்ளது,' என நிராகரித்தார். உயர்ந்தபட்சக் கல்வித் தகுதியுடைய ஆசிரியர்கள் 1998 முதல் 2001 ஜூன் 29க்குள் நியமிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கும் ஒப்புதல் வழங்குமாறு, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், எனது நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கி, பணிப்பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவு: மனுதாரரை, இடைநிலை ஆசிரியராக நியமித்ததில், விதி மீறல் நடக்கவில்லை. அவர் பணி நியமனம் செய்யப்பட்ட பின்தான், அப்பணியிடம் தேவையில்லை என சரண்டர் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆசிரியருக்கு, கூடுதல் கல்வித் தகுதி இருந்தால், அவரை வெளியேற்றுவது நியாயமற்றது என ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 1:40 என்ற விகிதத்தில், ஆசிரியர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி துவக்கக் கல்வி அலுவலர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர், மனுதாரர் நியமனத்திற்கு, ஒப்புதல் அளிக்க வேண்டும். மனுதாரர் உள்ள பள்ளியில், ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்பட்சத்தில், அரசு உதவி பெறும் வேறு பள்ளியில் நியமிக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக