தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பல்கலைக்கழகமும், வெவ்வேறு விதமாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதால் பிஎஸ்சி முடித்த மாணவர்கள் பிஇ நேரடி இரண்டாம் ஆண்டில் சேர முடியாத நிலை உள்ளது.தமிழகத்தில் 560க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. டிப்ளமோ, பி.எஸ்சி (கணிதம் ஒரு பாடமாக எடுத்து இருக்க வேண்டும்) முடித்தவர்கள் பிஇ, பிடெக் படிப்பில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர 20 சதவீதம் வரை இடம் ஒதுக்கப்படுகிறது.
இதில் கடந்த 2007ம் ஆண்டு முதல் பிஎஸ்சி (கணிதம் ஒரு பாடமாக இருக்கவேண்டும்) முடித்தவர்களுக்கு 900 இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டு கவுன்சலிங்கிலும் பிஎஸ்சி முடித்த மாணவர்கள் 100க்கும் குறைவாகவே பிஇயில் சேருகின்றனர்.
கடந்த 2009ல் 87 பேர், 2010ல் 84 பேர், 2011ல் 53 பேரும், 2012ல் 85 பேர், 2013ல் 55 என குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். இதில் மிச்சம் உள்ள இடங்கள் டிப்ளமோ மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. பிஎஸ்சி முடித்த மாணவர்கள் பிஇ படிப்பில் சேர ஆர்வம் இருந்தும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ரிசல்ட் வராததால் கடைசி செமஸ்டர் மார்க் ஷீட்டை விண்ணப்பத்துடன் இணைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது. தமிழகத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்டு 81 அரசு கலைக்கல்லூரிகள், 138 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சுயநிதிக்கல்லூரிகள் என 700க்கும் மேற்பட்ட கலைக்கல்லூரிகள் உள்ளன. ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் முடித்து வெளியே வருகின்றனர்.
இதில் பல்கலைக்கழகங்கள் ஒரே நேரத்தில் தேர்வுகளை நடத்துவது கிடையாது. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் வேவ்வேறு விதமாக தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருவதால் பி.எஸ்சி (கணிதத்தை ஒரு பாடமாக எடுத்தவர்கள்) முடித்த மாணவர்கள் வாய்ப்பு இருந்தும் பிஇ சேரமுடியாத நிலை உள்ளது.கடந்த ஆண்டு முடித்த மாணவர்களே நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கூடிய சூழ்நிலை உள்ளதால் மாணவர்கள் ஒரு வருடத்தை வீணடிக்க விரும்பாமல் வேறு கோர்சில் சேர்ந்து விடுகின்றனர். இதனால் ஒவ்வொரு வருடமும் சேர்க்கை குறைந்து வருகிறது.இதுகுறித்து கலைக்கல்லூரி ஆசிரியர் மன்ற மாநில தலைவர் சிவராமன் கூறுகையில், ஒவ்வொரு பல்கலைக்கழகமும் வெவ்வேறு காலகட்டங்களில் தேர்வு நடத்துகின்றன.
இதனால் மாணவர்கள் பிஇ படிப்பில் சேரமுடியாத நிலை உருவாகிறது. தற்போதுள்ள நிலையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆனால் திருச்சி பாரதிதாசன், பெரியார் பல்கலைக்கழகம் போன்றவற்றில் தற்போதுதான் தேர்வு நடத்தி விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு செமஸ்டருக்கும் 90 வேலை நாள் இருக்கவேண்டும். மாணவர்களின் நலன் கருதி, தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் ஒரே நேரத்தில் திறக்க வேண்டும். ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக