லேபிள்கள்

21.5.14

மே 28-க்குள் சி.பி.எஸ்.இ.பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 28-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என சென்னை மண்டல சி.பி.எஸ்.இ. அலுவலர் டி.சுதர்சன ராவ் கூறினார்.

தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வை 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர்.

பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஆனால், சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

இதுதொடர்பாக சுதர்சன ராவிடம் கேட்டபோது அவர் கூறியது:

சி.பி.எஸ்.இ. இயக்குநரிடமிருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் வரும் 28-ஆம் தேதிக்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மே 26 அல்லது 27 தேதிகளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். தேர்வு முடிவுகள் வெளியான ஓரிரு வாரங்களில் மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக