தமிழகம் முழுவதும் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 3ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக துறைசார்ந்த பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், 2 லட்சத்திற்கும் மேலான பி.இ, பி.டெக் இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படவுள்ளது.
இந்த விண்ணப்பங்கள் நாளை வரை விநியோகிக்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு ஜூன் மூன்றாவது வாரத்தில் கவுன்சலிங் நடக்கவுள்ளது. இதில், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 250 ரூபாயும், இதர பிரிவினர் 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த, விண்ணப்பத்துடன் மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் குறித்த விவரங்கள் அடங்கிய புத்தகமும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 13 நாட்களில் 2 லட்சத்து 2806 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக