லேபிள்கள்

21.5.14

பிளஸ் 2 விடைத்தாள் நகல் ஜூன் 2ம் தேதி கிடைக்கும்

பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் குறித்து சந்தேகம் உள்ள மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 9ம் முதல் 14ம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைத்தனர்.
இதன்படி விடைத்தாள் நகல் கேட்டு 79 ஆயிரத்து 953 பேரும், மறுகூட்டல் செய்ய கேட்டு 3,346 பேரும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த அனைவரும் குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டுமின்றி 4, 5 பாடப்பிரிவுகளிலும் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து மேற்கண்ட மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் ஆன்லைனில் வெளியிட வசதியாக ஸ்கேன் செய்யும் பணி நடக்கிறது.ஜூன் 2ம் தேதி மாணவர்கள் தேர்வுத்துறை இணைய தளத்தில் ஆன்லைனில் தங்கள் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். விடைத்தாள் நகல் பெற்ற 5 நாட்களுக்கு பிறகே மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யும் பணிகள் தொடங்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக