லேபிள்கள்

21.5.14

25 ஆயிரத்தை தாண்டியது எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 25 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீடு, 15 சதவீதம் போக, மீதம், 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லுாரியில், 85 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், 14ம் தேதி துவங்கியது.
முதல் நாளில், 12,138 மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர். நேற்று, 1,225 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். ஆறு நாட்களில், 25 ஆயிரத்து 474 விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன. இம்மாதம், 30 தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன் 2ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக