லேபிள்கள்

21.5.14

சி.பி.எஸ்.இ., 99.94 சதவீதம் 'பாஸ்!'

சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழக மாணவர்கள், 99.94 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். தேர்வு முடிவு, நேற்று முன்தினம் மாலை, சி.பி.எஸ்.இ., இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. 
தேர்ச்சி சதவீத நிலவரம் குறித்து, சி.பி.எஸ்.இ., சென்னை மண்டல அலுவலர், சுதர்சன் ராவ், நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, அந்தமான், டாமன் டையூ, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள், சென்னை மண்டலத்தில் உள்ளன. மண்டலம் முழுவதும் உள்ள, 1,800 பள்ளிகளில் இருந்து, 1.23 லட்சம் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில், 1.22 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம், 99.58. கடந்த ஆண்டை விட, தேர்ச்சி சதவீதம் மிகச்சிறிய அளவிற்கு கூடியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, 406 பள்ளிகளில் இருந்து, 28,589 பேர், தேர்வை எழுதியதில், 28,572 பேர் தேர்ச்சி பெற்றனர். 99.94 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர். சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு, 25, 26 ஆகிய தேதிகளில், ஏதாவது ஒரு நாளில் வெளியாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, ராவ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக