அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், இந்தாண்டு முதல் நுழைவுத்தேர்வு இன்றி தொழிற்படிப்புகளில் சேரலாம் என்று பல்கலைக்கழக நிர்வாக தலைவர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் +2வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். தொழிற் படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.இ ஆகியவற்றில் சேரலாம்.
கடந்த ஆண்டு முதல் இடஒதுக்கீடு முறை மற்றும் கல்விக்கட்டண முறைகளை வகுத்து வருகிறது.
அந்த வகையில், எம்பிபிஎஸ் 150 இடங்களும், பிடிஎஸ் 100 இடங்களும், இன்ஜினியரிங் 3000 இடங்களும், விவசாயம் மற்றும் தோட்டக்கலை படிப்புக்கு 1,075 இடங்களும் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக