லேபிள்கள்

19.5.14

ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் விண்ணப்பம் பெறாததால் தயக்கம்

தமிழகத்தில், ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங்கிற்கு, இதுவரை விருப்பம் கோரி விண்ணப்பம் பெறாமல் இருப்பதால், ஆசிரியர்கள் தயக்கம் அடைந்துள்ளனர். தொடக்க, நடுநிலை, உயர்,மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கிற்கு, ஆசிரியர்களிடம் ஏப்ரலில் விருப்ப மனு பெற்று, மே- மாதத்தில் அந்தந்த சி.இ.ஓ.,க்கள் முன்னிலையில், கவுன்சிலிங் நடத்தப்படும்.

கடந்த கல்வி ஆண்டு முதல், "ஆன்-லைனில்' விண்ணப்பங்களை பதிவு செய்து, மே- மாதத்தில், ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தி, டிரான்ஸ்பர் வழங்கப்பட்டது. இதனால், பள்ளி துவங்கும் ஜூன் மாதத்தில், ஆசிரியர்கள் அவர்கள் மாறுதல் பெற்று சென்ற பள்ளியில், சேர்ந்து பணியை துவக்கினர்.


தற்போது, தேர்தல் நடத்தை விதிகளை காரணமாக கூறி, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கிற்கு, இது வரை ஆசிரியர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. மேலும், இனிவரும் காலங்களில், கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பத்தை பெற்று, ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் பெற்று சென்றால், பள்ளிகள் துவங்கும் நேரத்தில், ஆசிரியர்கள் மாறுதலாகி செல்லும் சூழல் ஏற்படும். இதனால், கல்வி ஆண்டு துவக்கத்திலேயே, மாணவர்களின் சேர்க்கை, வகுப்புகள் நடத்துதல் போன்ற பணிகள் பாதிக்கப்படும்.


இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "மே இறுதியில், கல்வித்துறை விரைந்து, டிரான்ஸ்பர் கவுன்சிலிங் நடத்தினால், ஆசிரியர்களின் குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு மாறுதல் பெற்று, சேர்க்க முடியும். ஒவ்வொரு ஆண்டும், நகர்புறங்களை ஒட்டியுள்ள பள்ளிகளின் ஆசிரியர் காலியிடங்கள் மறைக்கப்பட்டே, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதை தவிர்த்து, வெளிப்படையான கவுன்சிலிங்கை, தமிழக அரசு நடத்தவேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக