லேபிள்கள்

25.5.13


பள்ளிக்கல்வி- பட்டதாரி ஆசிரியர் \ ஆசிரியர் பயிற்றுநர்\ உடற்கல்வி ஆசிரியர்\ சிறப்பு ஆசிரியர்-  மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு
          2013-14
ஆம் ஆண்டிற்கான பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/உடற்கல்வி ஆசிரியர்/சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 அன்று மாவட்டத்திற்குள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நடைபெறும். 29.05.2013 அன்று மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 9.00 மணி முதல் நடைபெறும். மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.          

28.5.13 - பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு ( மாவட்டத்திற்குள் )

29.5.13 - பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு ( மாவட்டம் விட்டு மாவட்டம் )




தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு நமது மாநில பொதுச்செயலாளரின் நன்றி அறிவிப்பு செய்தி
நமது மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள உத்தரவிட்ட தொடக்க கல்வி இயக்குநர் மதிப்புமிகு வி.சி.இராமேஸ்வரமுருகன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்          
"பள்ளிக்கல்வித்துறையில் குறைந்த அளவே பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதால் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு மற்றும் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முடிந்த பிறகு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வை நடத்த பள்ளிக்கல்வி இயகுநர் மதிப்புமிகு தேவராஜன் அவரக்ளீடம் தொலைபேசியில் கேட்டுக்கொண்டபோது ஆசிரியர் நலன் கருதி கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.மேலும் இது குறித்த முறையான அறிவிப்பை நாளிதழ்களில் அதிகாரபூர்வமாக வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.அவ்வாறே செய்த பள்ளிக்கல்வி இயக்குநருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்          
தகுதியுள்ள இடைநிலை ஆசிரியருக்கு பணிபுரியும் பள்ளியிலேயே பதவி உயர்வு வழங்க கல்வி துறை முடிவு - தினகரன் நாளிதழ் செய்தி.





பள்ளி துவங்கும் நாளிலேயே (03.06.2013) மாணவர் நலத்திட்ட பொருட்கள் வழங்க ஆணை
              1 முதல் 8 வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளித் துறைக்கான 2013-14ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை 27.05.2013 முதல் 31.05.2013க்குள் அலுவலர்களுகு அளித்து பள்ளி துவங்கும் முதல் நாளான 03.06.2013 அன்றே மாணவர்களுக்கு வழங்கி 04.03.2013 அன்றுக்குள் அறிக்கை அனுப்பு தொடக்கக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிக்கப்பட்ட பள்ளிகள் இல்லாத 54 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்க கருத்துரு கோரி - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

click here to download the DEE proceeding for 54 New Elementary School Proposals seeking and form  as per CM Announcement for 2013-14 

PG Botany - Appointment Counseling on 27.05.2013
  தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை தாவரவியல் ஆசிரியர்  பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 196 பணிநாடுநர்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 310 பணிநாடுநர்களுக்கும் 27.05.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு இணையதளத்தில் (Online) அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது

பிளஸ் 2 மாணவர்கள் கல்வி தகுதியை பள்ளியிலேயே பதிய ஏற்பாடு
            தமிழகம் முழுவதும், பிளஸ் 2 மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, பள்ளி வளாகங்களிலேயே, இணையதளம் மூலம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய, பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சி.பி.எஸ்.., பிளஸ் 2 முடிவுகள் 27ம் தேதி வெளியீடு

 சி.பி.எஸ்.., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 27ம் தேதி வெளியாகிறது. எனினும், சென்னை மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் மட்டும், முன்கூட்டியே, இன்று காலை வெளியாகலாம் என, பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.

அண்ணாமலை பல்கலை விண்ணப்பம்: 27ம் தேதி கடைசி நாள்
               அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நுழைவு தேர்வு விண்ணப்பம் 27ம் தேதி வரை மட்டுமே வினியோகிக்கப்படும்.

தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகள்: ..சி.டி..
         "தமிழகத்தில், புதிதாக, 17 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன" என ..சி.டி.., தலைவர் மான்தா கூறினார். ஏழு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பி.பார்ம்., கல்லூரிகள் துவங்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

AEEO Revised Seniority List for 2013-14 | திருத்தி அமைக்கப்பட்ட 1 லிருந்து 813 வரை வரிசையிலுள்ள 01.01.2013ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணி மாறுதல் பெற தகுதியான ஆசிரியர் பெயர் பட்டியல் வெளியீடு


+2 உடனடி தேர்வு ஜூன் 2013 கால அட்டவணை மற்றும் செய்திக்குறிப்பு

 


23.5.13

பதவி உயர்வு இல்லாமல் பரிதவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்


           அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திவரும் நிலையில், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், எவ்வித பதவி உயர்வுக்கும் வழியில்லாததால், புலம்பி வருகின்றனர்.

துறை தேர்வு எழுதுவதற்காக 9 ஆம் வகுப்பு CCE Training தள்ளி வைக்கப்படுமா?

 நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை அமலாகிறது. இதற்காக கருத்தாளர்கள், பாடம் வாரியான ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கருத்தாளர்களுக்கான பயிற்சி மே18ல் முடிந்த நிலையில், மே 29,30,31ல் பாட வாரியாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடக்கிறது.

பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பாடம் நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

  "பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே, பள்ளிகளில் பாடம் நடத்த நியமிக்க வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித் தொகை

     தமிழ்நாட்டில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது.

TET - 2013 EXAM ANNOUNCED.


Paper I - 17.08.2013 Time 10 am to 1 pm

Paper II - 18.08.2013 Time 10 am to 1 pm


Application Sales Starts From 17.06.2013 to 01.07.2013

Application Cost: Rs. 50
Examination Fees: Rs. 500  
SC/ST/Disabled Fees: Rs. 250



490 ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு

 அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், 490 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், ஜூன், 3ம் தேதி பள்ளி திறந்ததும், பணியில் சேர வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

அரசு துறை தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

வரும், 24ம் தேதி முதல் நடக்க உள்ள, அரசு துறை தேர்வுகளை எழுதுவோருக்கு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்"கள் வெளியிடப்பட்டுள்ளன.

21.5.13

தமிழ் வழி ஒதுக்கீட்டில் 120 முதுகலை பணியிடம்

      கடந்த டிசம்பரில், 2,300க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை.

தலைமை ஆசிரியர்கள் 900 பேருக்கு இடமாறுதல் உத்தரவு
  அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி தலைமை ஆசிரியர்கள் பணியிடம் மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 900 பேர் புதிய இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளி கல்வி துறையில், பல்வேறு வகையான ஆசிரியர்களுக்கு பொது பணியிடம் மாறுதல் வழங்கும் கலந்தாய்வு நிகழ்ச்சி நேற்று மாநிலம் முழுவதும் துவங்கியது.

710 ஆய்வகஉதவியாளர் பணியிடம்

          2011-2012ம் கல்வியாண்டில் RMSA மூலம் தரம் உயர்த்தப் பட்ட உயர்நிலை பள்ளிகளுக்கு 710 ஆய்வகஉதவியாளர் பணியிடம் நிரப்ப நடத்தப்பட்ட சான்றிதழ் சரிப்பார்ப்பில் கலந்து கொண்டவர்களின் விவரம் அனுப்ப பள்ளி கல்வி இணை இயக்குனர் உத்தரவு.

DSE - 710 LAB ASST POSTS IN 2011-12 RMSA UPGRADED HIGH SCHOOLS - EMPLOYMENT SENIORITY & INTERVIEW DETAILS CALLED REG PROC CLICK HERE...