லேபிள்கள்

21.5.13


தலைமை ஆசிரியர்கள் 900 பேருக்கு இடமாறுதல் உத்தரவு
  அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி தலைமை ஆசிரியர்கள் பணியிடம் மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 900 பேர் புதிய இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளி கல்வி துறையில், பல்வேறு வகையான ஆசிரியர்களுக்கு பொது பணியிடம் மாறுதல் வழங்கும் கலந்தாய்வு நிகழ்ச்சி நேற்று மாநிலம் முழுவதும் துவங்கியது.


             32
மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆன்லைன் மூலம் நடந்தது. அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று காலை, மாவட்டத்திற்குள்ளே பணி இட மாறுதல் பெறுவதற்கும், பிற்பகல், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு செல்பவருக்கான கலந்தாய்வு நிகழ்ச்சி நடந்தது.

               
இதில், 390 தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்கு உள்ளேயும், 510 தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்தை விட்டு வெளியேயும் புதிய இடங்களை தேர்வு செய்துள்ளனர். புதிய இடத்திற்கான மாறுதல் உத்தரவு உடனடியாக வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக