சிறப்பு ஆசிரியர்கள் பதிவு விபரங்கள் சரி பார்க்க வேலைவாய்ப்பகம் அழைப்பு.
தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கு பரிந்துரை செய்யும் பொருட்டு, உயிர் பதிவேட்டில் உள்ள அனைத்து சிறப்பு ஆசிரியர்கள் (தையல், உடற்கல்வி, இசை, ஓவியம்) பதிவு
விபரங்கள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பதிவுதாரர்கள் தங்களது பதிவை சரி பார்த்து கொள்ள வேண்டும். சிறப்பாசிரியர்கள்,
2013 மே., 23 க்குள் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழுடன் இங்கு நேரில் வந்து பட்டியலை சரி பார்க்க வேண்டும். 23க்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.மேலும், பட்டியலில் பெயர் விடுபட்ட பதிவுதாரர்கள், அலுவலகத்துக்கு வரும் போது இணையதளம் வழியாக எடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையின் நகல் ஒன்றை எடுத்து வர வேண்டுமென, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக