லேபிள்கள்

23.5.13

துறை தேர்வு எழுதுவதற்காக 9 ஆம் வகுப்பு CCE Training தள்ளி வைக்கப்படுமா?

 நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை அமலாகிறது. இதற்காக கருத்தாளர்கள், பாடம் வாரியான ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கருத்தாளர்களுக்கான பயிற்சி மே18ல் முடிந்த நிலையில், மே 29,30,31ல் பாட வாரியாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடக்கிறது.
           ஆனால்,மே 30,31ல் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான அரசுத்துறை தேர்வு (டிபார்ட்மெண்ட்) நடக்கிறது. இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள ஏராளாமான ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. 

          ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறுகையில், "பெரும்பாலான ஆசிரியர்கள் துறைத்தேர்வு எழுதி பதவி உயர்வு பெறுகின்றனர். மே30 ல் சார்புநிலை அலுவலர் கணக்கு தேர்வும், 31ல் தமிழ்நாடு அலுவலர் நடைமுறைகள் தேர்வும் நடக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் எழுத முடியாது.

           இதனால் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. முப்பருவ முறை பயிற்சியை தள்ளி வைக்க வேண்டும்" என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக