லேபிள்கள்

1.11.14

பட்டதாரி ஆசிரிய நண்பர்களுக்கும் , TNGTF பொறுப்பாளர்களுக்கும் நமது TNGTF பொதுச்செயலாளரின் செய்தி

பட்டதாரி ஆசிரிய நண்பர்களே, TNGTF பொறுப்பாளர்களே,
********************************************************************************
தொடக்க கல்வித்துறையில் கடந்த 2010ம் ஆண்டு முதல் cps பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. நமது அமைப்பின் தொடர் வலியுறுத்தல் காரணமாக CPS ACCOUNT SLIP கடந்த செப்டம்பர் மாதம் DATA CENTRE லிருந்து தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கும் மாவட்ட கருவூலங்களுக்கும்அனுப்பப் பட்டது தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகத்திலிருந்து அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் , செப்டமபர் 23ம் தேதி E-MAIL மூலம் அனுப்பப் பட்டது.

DSE - தனி நபர் தகவல் தொகுப்பு முறை(PIS) இணையதளத்தில் பதிவு செய்தல்-பள்ளிகல்வி இயக்குனர் அறிவுரைகள்

DATA TRANSFER என்ற OPTION கிளிக் செய்து தங்கள் பள்ளியிலிருந்து மாறுதல் சென்றவர்களை ,அவர்கள் தற்போது பணியாற்றும் பள்ளிக்கு அவர்களது விவரங்களை மாற்றிக் கொள்ளவும். அதே போன்று தங்கள் பள்ளிக்கு வேறு பள்ளியிலிருந்து பணியாளா்கள் மாறுதல் பெற்று வந்திருந்தால், அவா்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிக்கு தெரிவித்து அவா்களுடைய விவரங்களை மாற்றி கொள்ளவும் . ஒவ்வொரு பணியாளரின் விவரங்களையும் UPDATE செய்யவும்.


இன்று (1.11.14) சிறப்பாக நடைபெற்ற திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய TNGTF கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய TNGTF கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது .

கூட்ட முடிவில் வேடசந்தூர் வட்டார தலைவராக திரு முருகேசன் , செயலாளராக திரு கோதண்டராமன் , பொருளாளராக மலர்விழி , மகளிர் அணி தலைவியாக சாவித்திரி , துணை தலைவராக அமலன் , இணை செயலாளராக நீலவேணி , செயற்குழு உறுப்பினர்களாக குமாரவேல் ,மோகன் , கோமதி ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள் . அனைவருக்கும் வாழ்த்துக்கள் .


சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தப்ப முடியாது: கட்டண நிர்ணய குழு திட்டவட்டம்

சி.பி.எஸ்.இ., பள்ளி கள், தமிழக அரசின் விதிமுறைகளில் இருந்தோ, கட்டண நிர்ணய குழு விதி முறைகளில் இருந்தோ தப்ப முடியாது' என, கட்டண நிர்ணய குழு வட்டாரம், நேற்று உறுதியாக தெரிவித்தது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கடிவாளத்தை, தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வந்து, சமீபத்தில், தமிழக அரசு உத்தரவிட்டது

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி: டி.ஆர்.பி., வேண்டுகோள்

'கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு, வேலைவாய்ப்பு பதிவு மூப்புஅடிப்படையில் மட்டுமே நடக்கும்; விண்ணப்பம் அனுப்பக் கூடாது'என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கேட்டுக் கொண்டுள்ளது.

ஆசிரியர் வருங்கால் வைப்பு நிதிக்கணக்கு- தணிக்கை முடித்து 31.03.2014 இறுதி இருப்பினை மென்பொருளில்(Soft\ware)ஏற்றம் செய்து குறுந்தகடில் அளிக்க இயக்குனர் உத்திரவு


29.10.14 அன்று நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் - தொடக்க கல்வி இயக்குனருடன் சந்திப்பு கோரிக்கை விபரம் 1

முன்னேற்றுவேம்!    முன்னேறுவோம்!

பட்டதாரி ஆசிரிய நண்பர்களே!

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மாண்ட் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் ஜான் கென்னடி, மகளிரணிச்செயலாளர் ஜேனட், ஈரோடு மாவட்ட பொருளாளர் தனக்குமார், திண்டுக்கல் மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு ,செயலாள்ர் ஜோசப் சேவியர், அரியலூர் மாவட்டம் ராஜா ஆகியொர் தொடக்க கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோரை கடந்த 29.10.2014 அன்று இயக்குனரகத்தில் சந்தித்து பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


கோரிக்கையின்  சுருக்க விவரம்;

29.10.14 அன்று நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் - தொடக்க கல்வி இயக்குனருடன் சந்திப்பு கோரிக்கை விபரம் 2

நமது மாநில பொதுச்செயலாளர் தொடக்க கல்வி இயக்குனரை சந்தித்து கீழ்க்கண்ட மாவட்ட  சம்பந்தப்பட்ட கோரிக்கைகளையும்  எடுத்துரைத்தார்.

மாவட்ட கோரிக்கை விவரம்;


g§fë¥ò XŒñÂa¤ £l¤Âš ÏUªj g£ljhç MÁça®fë‹ Ú©l ehŸ nfhç¡ifahd fz¡F¤jhŸ Account slip  bg‰W tH§f elto¡if  vL¤jik¡F jäœehL g£ljhç MÁça® T£lik¥Ã‹ rh®Ãš e‹¿ia bjçé¤J¡ bfhŸ»nwh« .
                 
1. g§fë¥ò XŒñÂa« fz¡Ñ£L¤jhŸ

தொடக்க கல்வி - இன்று (01.11.14) நடைபெறும் - காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்புதல் சார்ந்து - இயக்குனரின் அறிவுரைகள்


பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 02.11.2014 அன்று நடைபெறவுள்ளது, மேலும் 22.06.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு 02.11.2014 அன்று ஆணை வழங்கப்படவுள்ளது


31.10.14

2 மாதத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சேமநல நிதி வழங்க உத்தரவு

ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் சேமநல நிதி நிலுவை தொகையை, இரண்டு மாதத்தில் வழங்க வேண்டும் என, ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் உத்தரவிட்டார்.

350 டன் பள்ளி பாடபுத்தகத்தை விற்று மோசடி; சி.இ.ஓ., உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு

350 டன் எடையுள்ள பள்ளி பாடபுத்தகத்தை விற்று மோசடி செய்ததாக, சென்னை முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது தி.மு.க., ஆட்சியில் அச்சடிக்கப்பட்ட சமச்சீர் கல்வி

SSLC -Mar / Apr - 2015 -Private Application -Press Release Notification

SCHOOL EDUCATION - PAY ORDER FOR 13 HS HM / 210 BT & 500 PGT / 230 BT & 500 PGT / 1200 BT & 200 PET / 675 PGTs FOR SEP & OCT 2014

அலுவலக நடவடிக்கையில் உறவினர்கள் தலையீடு அமைச்சரை எச்சரித்த கல்வித்துறை செயலாளர்: தலைமை செயலகத்தில் பரபரப்பு

தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம்  புதுப்பிக்கும் பணி தற்போது நடக்கிறது. அரசு அறிவித்துள்ள தகுதிகள்  உள்ள பள்ளிகளுக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டு வருவதால், தனியார்  பள்ளி நிர்வாகங்கள் கலக்கத்தில் உள்ளன. வரும் மார்ச் மாதம் பொதுத்  தேர்வு தொடங்க

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக நடைபெறும் இந்த் தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:
டிசம்பர் 10    புதன்கிழமை - தமிழ் முதல் தாள்

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் நியமனம்

தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 248 பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பணியிடங்கள் வியாழக்கிழமை நிரப்பப்பட்டன. இந்த ஆண்டு புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 248 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன்: எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் அதிருப்தி!

பள்ளி மாணவர்களின் கணித, வாசிப்புத் திறனை சோதித்த அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) இயக்குநர் பூஜாகுல்கர்னி அதிருப்தி அடைந்தார்.

30.10.14

நேற்று (29.10.14) தொடக்க கல்வித் துறை இயக்குனரை சந்தித்து பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்த நமது TNGTF பொதுச்செயலாளர் தலைமையிலான குழு


வேடசந்தூர் ஒன்றிய TNGTF கூட்ட அழைப்பிதழ்



TNGTF பொதுச்செயலாளர் கோரிக்கை ஏற்பு - CPS account slip வழங்கப்படாத ஆசிரியர்களுக்கு ஒரிரு நாளில் வழங்கப்படும் தொடக்க கல்வி இயக்குனர் உறுதி

TNGTF மாநில பொறுப்பாளர் தகவல்: CPS account slip பல மாவட்டங்களுக்கு தர படவில்லை என்று தொடக்க கல்வி இயக்குனரிடம் நமது பொதுச்செயலாளர் திரு. பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்கள்  இன்று (29,10,14) நேரில் சந்தித்து பட்டியல் இட்டுள்ளார்.
எனவே இன்னும் ஒரிரு நாளில் அனைத்து மாவட்டங்களுகும் cps account slip  விரைந்து வழங்க  நடவடிக்கை எடுப்பதாக தொடக்க கல்வி இயக்குனர் உறுதியளித்துள்ளார். 

அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று, பணியில் சேர விதிக்கப்பட்ட தடை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு, பணியில் சேருவதற்கான உத்தரவு ஒரிரு நாளில் பிறப்பிக்கப்படும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2014-15 ம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து  உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு பெற்று நீதிமன்ற தடையால் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல்இருந்தது. தற்பொழுது அத்தடை இன்று நீதிமன்றத்தால் விலக்கிக்  கொள்ளப்பட்டதால் விரைவில் அப்பணியிடத்தில் ஏற்கெனவே  கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு: 3000 பணியிடங்களுடன் புதிய பட்டியல் நவம்பரில் வெளிவர வாய்ப்பு

3000பணி இடங்களுக்கு  நவம்பர் மாதம் புதிய பட்டியல் வெளியாக
உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இவை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களை மட்டும்  கொண்டு நிரப்படுவதாக தகவல்கள் கூறுகிறது. இருப்பினும் 5%மதிப்பெண் தளர்வு மேல்முறையீடு பற்றி அரசு முடிவை பொறுத்து  இந்த பட்டியலில் 5%

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.வேலூர் மாவட்டம், இளையநல்லூரை கிராமத்தை சேர்ந்தவர் எம்.கோபி. இவர்,சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-காலிப்பணியிடங்கள்நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளேன். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்புவதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதி 10-ம் வகுப்பு என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது.வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பதிவு மூப்பு அடிப்படையில், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவது என்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.

10-வது, பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள் கொண்ட பள்ளிகள் பட்டியல் உடனே தரும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வுத்துறை கடிதம்.

10-வது மற்றும் பிளஸ்-2 தேர்வு எழுதக்கூடிய மாணவ-மாணவிகள் கொண்ட பள்ளிகளின் பட்டியலை தரும்படி தேர்வுத்துறை பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நவ.,7 வரை விண்ணப்பிக்கலாம்,' என பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


சி.பி.எஸ்.இ., பள்ளி விவகாரம் : பொதுக்கல்வி வாரியம் ஒப்புதல்

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற, புதிய உத்தரவுக்கு, பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது.

29.10.14

தொடக்கக் கல்வித்துறையில் காலியாக நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 01.11.2014 அன்று நடைபெறவுள்ளது

தொடக்கக் கல்வித்துறையில் அண்மையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றதையடுத்து ஏற்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள், 2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள் மற்றும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பதவி

உயர்வு கலந்தாய்வு 01.11.2014 அன்று நடைபெறவுள்ளது என நமது பொதுச் செயலாளர் திரு.பேட்ரிக் ரெமண்ட்  தகவல் கூறியுள்ளார்

2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கும் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில்31-ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.


2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 450 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 31-ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.


தலைமை பண்பு வளர்த்தல் குறித்த ஐந்து நாள் பயிற்சி.

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், தலைமை பண்பு வளர்த்தல் குறித்த, ஐந்து நாள் பயிற்சி துவங்கியது.அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தலைமை பண்பு வளர்த்தல் குறித்த பயிற்சி, ஆண்டுதோறும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 

தடை இரத்து - நீதிமன்றம் உத்தரவு.

அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று, பணியில் சேர விதிக்கப்பட்ட தடை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு, பணியில் சேருவதற்கான உத்தரவு ஒரிரு நாளில் பிறப்பிக்கப்படும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

28.10.14

தேர்வு நெருங்குவதால் தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை.

தேர்வு நெருங்குவதால், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் மட்டுமல்ல, அனைத்து மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்ப, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கிறது.

IGNOU B.Ed 2014 Entrance Results

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

W.P.(MD).NO.19113/2013 - ORDER REG CPS CLICK HERE...

மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில் பட்டதாரி ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந்து 31.05.2012 -ல் ஓய்வு பெற்றார்.
இவர் ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

"பிரிட்ஜ் கோர்ஸ்' முறையில் மாற்றம்; ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

"பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில்கொண்டு வரப்பட்ட "பிரிட்ஜ் கோர்ஸ்' முறையில், மாற்றம் செய்ய வேண்டும்,' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு உத்தரவு வராததால் பள்ளி மாணவர்களுக்கான இலவச காலணி தேக்கம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச காலணி வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இலவச காலணிகள் வழங்க தயாராக இருந்த நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆசிரியர்கள் சிறப்புநிலை குறித்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: கல்வி துறை செயலாளருக்கு நீதிபதிகள் கண்டனம்.

சென்னை ஐகோர்ட்டில், சிரோமணி உட்பட பல ஆசிரியர்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்தனர். அதில், ‘2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் நீண்ட கால பணி செய்யும் ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கவேண்டும். ஆனால்,

தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு

தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் சம்பளம் பெறுவதில் சிக்கல் : புது நடைமுறையால் திணறல்.

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் முதல் 'வலைதள சம்பளப் பட்டியல்' (வெப் பே-ரோல்) முறையில் சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

தொடர் மழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்களம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, வெள்ளிசந்தை ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

தேசியத் திறனாய்வுத் தேர்வு: தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

தேசியத் திறனாய்வுத் தேர்வுக்கு (என்.டி.எஸ்.இ.) ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் திங்கள்கிழமை முதல் www.tndge.in என்ற இணையதளம் வழியாக பள்ளிக்கு வழங்கப்பட்ட தனி முகவரி மூலம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CLICK HERE DOWNLOAD TO NTSE EXAM HALL TICKET

27.10.14

ஆதிதிராவிடர்–கள்ளர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை

அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலைமணி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.அதில் கூறி இருப்பதாவது:–

புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு

புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  இனி ஒவ்வொரு வாரமும் ஒரு மாவட்டம்  -பற்றிய பதிப்பு வெளியிடப்படும்   -இந்த வாரம் சேலம் மாவட்டம் -புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு எடுத்து கூறுங்கள்.



தகவல்; CPS TEAM, திண்டுக்கல்

CPS ஒப்புகை சீட்டு (A/C SLIP) தங்கள் ஒன்றியத்தில் வழங்கப்பட்டுவிட்டதா??

தொடக்க கல்வி துறையில் இதுவரை வழங்கப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் (CPS) 01.04.2003 பின்  நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் (தொடக்க கல்வி துறையில் பணியாற்றும்) அலுவலர்களுக்கு ஒப்புகைசீட்டு          (A/C SLIP) வழங்கப்படாமல் இருந்தது, இதனை மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் கவனத்திற்கு நமது மாநில பொறுப்பாளர்கள் கொண்டு சென்றனர். இயக்குனர் அவர்கள் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு ஒப்புகை சீட்டு வழங்க 11.09.2014 உத்தரவிட்டார்.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று நடைபெறுவதற்கு பதிலாக 29.10.2014 சென்னையில் நடைபெறுகிறது.


தொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனசிதைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு


முக்கிய செய்தி ; கனமழை காரணமாக திருப்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்க்கு, ஊத்துக்குளி, பல்லடம், அவினாசி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - தந்தி டிவி


பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு (27.10.2014 ) திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது.

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு 27.10.2014 திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது. மதிப்பெண் சான்றிதழை தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தலைமை ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு.

தமிழகம் முழுவதும் அக்டோபர் 29-ஆம் தேதி நடைபெற இருந்த தலைமைஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் 50

ஈரோடு , கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக இன்று (27.10.14) விடுமுறை - தந்தி செய்தி

ஈரோடு, கிருஷ்ணகிரி  மாவட்ட பள்ளிகளுக்கு இன்று  கனமழை காரணமாக விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.. 

26.10.14

அரசு பணியை ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் : ஐகோர்ட் உத்தரவு

'குறிப்பிட்ட காலம் பணிபுரிந்து, அரசு பணியை ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. திண்டுக்கல் மங்களாபுரம் சுப்பையா, 78, தாக்கல் செய்த மனு: பழநி அருகே, அரசு உதவி பெறும் பள்ளியில், 1955ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராக பணி புரிந்தேன். குடும்ப சூழ்நிலையால், 1972ல் ராஜினாமா செய்தேன்.

பொதுத்தேர்வை ஒரே சமயத்தில் நடத்த முட்டுக்கட்டை : சிக்கன நடவடிக்கைக்கு மாவட்ட அதிகாரிகள் எதிர்ப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் ஏற்படும் செலவினங்களை குறைக்க, சிக்கன நடவடிக்கையாக, ஒரே சமயத்தில் தேர்வை துவக்க தேர்வுத்துறை ஆலோசித்து வரும் நிலையில், அதற்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, முட்டுக்கட்டையாக உள்ளனர்.

10ம்வகுப்பு பொதுத்தேர்விற்கு புதிய மையங்கள்: அக்.,30க்குள் பரிந்துரை : டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

"10ம்வகுப்பு பொதுத்தேர்விற்கு கல்விமாவட்ட வாரியாக புதிதாக மையங்கள் அமைப்பது தொடர்பான பரிந்துரையை அக்.,30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு(டி.இ.ஓ.,) அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். 

மழை கால நடவடிக்கைகள் : தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு.

மழை காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பிளஸ்-2 துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் (தட்கல்

அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், நேற்று, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், நேற்று, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு,