லேபிள்கள்

1.11.14

பட்டதாரி ஆசிரிய நண்பர்களுக்கும் , TNGTF பொறுப்பாளர்களுக்கும் நமது TNGTF பொதுச்செயலாளரின் செய்தி

பட்டதாரி ஆசிரிய நண்பர்களே, TNGTF பொறுப்பாளர்களே,
********************************************************************************
தொடக்க கல்வித்துறையில் கடந்த 2010ம் ஆண்டு முதல் cps பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. நமது அமைப்பின் தொடர் வலியுறுத்தல் காரணமாக CPS ACCOUNT SLIP கடந்த செப்டம்பர் மாதம் DATA CENTRE லிருந்து தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கும் மாவட்ட கருவூலங்களுக்கும்அனுப்பப் பட்டது தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகத்திலிருந்து அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் , செப்டமபர் 23ம் தேதி E-MAIL மூலம் அனுப்பப் பட்டது.

ஆனால் இன்று வரை பல மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கு ACCOUNT SLIP கிடைக்கப் படவில்லை என அறிகிறேன், கடந்த 29ம் தேதி தொடக்க கல்வி இயக்குநர் அவரகளை நேரில் சந்தித்து இந்த நிலையை எடுத்துக் கூறினோம். அன்று நடைபெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவர்கள் கூட்டத்தில் இதை அறிவுறுத்திய தொடக்க கல்வி இயக்குநர் அவர்கள் ACCOUNT SLIP ஐ மீண்டும் OCT 30ம் தேதி அனைத்து மாவட்டங்களுக்கும் E-MAIL மூலம் அனுப்பவும் ACCOUNT SLIP வழங்கப்பட்ட விவரங்களை உடனே இயக்குநரகத்திற்கு அனுப்பவும் உத்தரவிட்டார்.

எனவே ACCOUNT SLIP கிடைக்கப்பெராத மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் சம்பந்தப்பட்ட மா.தொ.கல்வி அலுவலர்களை சந்தித்து உடனே ACCOUNT SLIP வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். 3 மாத கால்த்திற்குள் missing credits , DATA CENTREக்கு சென்று சேர வேண்டியது அவசியம் என்பதை மறவாதீர்கள்.

தகவல் ; திரு. பேட்ரிக் ரெய்மாண்ட் 
                 மாநில பொதுச்செயலாளர், 
                 தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக