லேபிள்கள்

30.10.14

'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நவ.,7 வரை விண்ணப்பிக்கலாம்,' என பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


2015 மார்ச்சில் துவங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் பள்ளி மாணவ, மாணவிகளை பற்றிய முழு விபரங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது. எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்து பதினான்கரை வயது நிரம்பிய தனித்தேர்வர்களும் இத்தேர்வை எழுதலாம்.

அவர்கள் உரிய அசல் கல்வி, பிறப்பு சான்றிதழ்களுடன் அரசு தேர்வு சேவை மையங்களில், பாடவாரியாக தேர்வுக்குரிய கட்டணத்தை செலுத்தி, நவ.,7க்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம், என பள்ளிக்கல்வி தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக