லேபிள்கள்

31.10.14

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் நியமனம்

தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 248 பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பணியிடங்கள் வியாழக்கிழமை நிரப்பப்பட்டன. இந்த ஆண்டு புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 248 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.
இந்தப் பணியிடங்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பிய இடங்களில் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக